காலிமுகத் திடலின் பிரசவ வேதனை

0 524

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

கடந்த பல வாரங்­க­ளாகக் காலி­முகத் திடல் ஒரு நிறை­மாதக் கர்ப்பிணி­யாக மாறி பிர­சவ வேத­னையால் துடித்துக் கொண்­டி­ருக்­கிறாள். “கோத்­தாவே போ”, “225 தேவை­யில்­லை”, “கோத்­தா-­போ-­கி­ராமம்” என்ற கோஷங்கள் எல்­லாமே அந்தக் கர்ப்பிணியின் பிர­ச­வ­ வேதனையின் அழு­கு­ரல்­களே. அந்த மாதாவின் வயிற்­றி­லி­ருந்­துதான் நவ இலங்கைக் குழந்­தை­யொன்று பிறக்­கப்­போகும் சாயல்கள் தென்­ப­டு­கின்­றன. அது ஒரு சுகப்­பி­ச­வ­மாக இருக்­க­வேண்­டு­மென அங்கு குழுமி இருக்கும் முஸ்­லிம்­களும் பிரார்த்­திப்­பதைக் காண பெரு­மி­த­மாக இருக்­கி­றது. அதே சமயம், இலங்­கைவாழ் அனைத்து முஸ்­லிம்­களும் அப்­பி­ரார்த்­த­னைக்கு ஆமீன் கூற­வேண்­டு­மென இக்­கட்­டுரை மிக வின­யமாய் வேண்­டு­கி­றது.

சுதந்­திரம் கிடைத்த நாள்­முதல் இன்று வரை எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இந்த நாட்டின் அர­சி­ய­லையும் பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யாண்டு பேயாட்டம் ஆடி, நாட்டின் பல்­லினச் சமூக அமைப்பைச் சீர­ழித்து, பொரு­ளா­தா­ரத்­தையும் வங்­குரோாத்து நிலைக்குத் தள்ளி, மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்ய பிற­நா­டு­க­ளிடம் பிச்­சைப்­பாத்­திரம் ஏந்தும் அள­வுக்குக் கொண்­டு­வந்­துள்ள இன­வாத ஆட்சிப் பொறி­முறை விழிப்­புற்ற ஓர் இளம் சந்­த­தியின் பார்­வையில் அதன் போலி வசீ­க­ரத்­தை­யெல்லாம் இழந்து நிர்­வாண கோலத்தில் நிற்­கின்­றது. அந்த ஆட்சிப் பொறி­மு­றையின் பேயாட்டம் கடந்த சுமார் இரண்­டு­வ­ருட ராஜ­பக்ச குடும்ப அர­சாங்­கத்தில் அதன் உச்­சத்தை எட்­டி­யது. இன்று நாடு அனு­ப­விக்கும் நெருக்­க­டிகள் அனைத்­துமே அந்த இரண்­டாண்­டு­கால ஆட்­சியின் ஒட்­டு­மொத்­த­மான விளை­வுகள் என்று கூறினால் அது மிகை­யா­காது. என­வேதான் “கோத்­தாவே போ” என்ற கோஷத்தின் அடி­நா­த­மாக ராஜ­பக்­சாக்­களே போங்கள் என்ற ஒலி அமைந்­துள்­ளது.

இந்த நிலையில் புளித்துப்­போன இன­வாதப் பல்­ல­வி­யையே தேர்தல் அரங்­கு­களிற் பாடிப்­பாடிப் பழக்­கப்­பட்ட இன்­றைய நாடா­ளு­மன்­றத்தின் 225 பரி­தாபப் பிர­கி­ரு­தி­களும் எப்­ப­டி­யா­வது அல்­லது எந்த உரு­வத்­தி­லா­வது பழைய அமைப்­பையே பாது­காத்து ஆட்­சியைத் தொடரத் தீர்­மா­னித்­துள்­ளனர். அதற்­காக சர்வகட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய இடைக்­கால அரசு என்ற பெயரில் ஒரு ராஜ­பக்­சவை மட்டும் ஜனா­தி­ப­தி­யாக வைத்­துக்­கொண்டு மற்­றவர்களை நீக்கி, ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­க­ளையும் குறைத்து அவற்றை தமக்குள் பங்­கு­வைத்துக் கொண்டு தொடர்ந்தும் மூன்று வரு­டங்­களைக் கடத்த விளை­கின்­றனர். இந்த முயற்சி இவர்களிடம் காலி­முகத் திடலின் பிர­சவ வேத­னையை உண­ரக்­கூ­டிய திறன் இல்லை என்­ப­தையே தெளி­வாக்­கு­கி­றது.

அது­மட்­டு­மல்ல, இந்த 225 ஆன்­மாக்­களும் இவர்களுக்கு முன்­வந்த நாடா­ளு­மன்ற சகாக்­களும் சேர்ந்து ஏற்­ப­டுத்­தி­யுள்ள இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு என்ன தீர்வு என்­பது பற்றி எந்தத் திட்­டமோ செயற்­பா­டு­களோ இவர்களிடம் இல்லை. எங்­க­ளிடம் உண்டு என்று கூறும் மக்கள் விடு­தலை முன்­னணி அங்­கத்­தவர்களும் அதை வெளிப்­ப­டுத்­தாதது ஒரு குறையே. இந்த நிலையில் இந்த 225 பேரும் தொடர்ந்தும் சட்­ட­ச­பையில் வீற்­றி­ருப்­பதில் ஏதேனும் பயன் மக்­க­ளுக்கு உண்டா? இந்த வினா­வைத்தான் காலி­முகத் திட­லிலே திரண்­டுள்ள இளைஞர்களும் யுவ­தி­களும் கேட்­கின்­றனர்.

ஊழலும் திருட்டும் ஏமாற்றும் நிறைந்த ஓர் அர­சாங்கம் அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் அதன் அங்­கத்­தவர்களின் தனிப்­பட்ட நல­னையே அபி­வி­ருத்தி செய்­த­மையை சர்வதேச ஊட­கங்­களே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அதே­போன்று இன்­றைய எதிர்க்­கட்­சி­யினர் தாம் ஆட்­சி­யி­லி­ருந்­த­போது செய்த ஊழல்­களும் ஏற்­க­னவே அம்­ப­ல­மாகி உள்­ளன. ஜே. ஆர். ஜெயவர்த்தன 1977ல் அறி­மு­கப்­ப­டுத்­திய திறந்த பொரு­ளா­தார அமைப்பும் அவ்­வா­றான அமைப்­பு­களின் உல­க­ளா­விய செயற்­பா­டு­களும் இவ்­வா­றான ஊழல்­க­ளுக்கும் திருட்­டு­க­ளுக்கும் நிறைய வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளன. இலங்­கை­யிலே அந்த ஊழல்­களின் ஒப்­பற்ற ஜவான்­க­ளாக ராஜ­பக்ச குடும்பம் மாறி­யுள்­ளதை இன்­றைய இள­வல்கள் நன்­குணர்வர். அவற்றுள் சில­வற்றை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசாநா­யக்க துணி­வுடன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த நிலையில் இவர்கள் எல்­லா­ரை­யுமே துரத்­தி­விட்டு தகை­மையும் கண்­ணி­யமும் மிக்க ஒரு குழு­வி­னரை மக்கள் தெரிந்­தெ­டுக்கும் ஒரு வாய்ப்­பினை விரைவில் ஏற்­ப­டுத்­து­மாறு கோரியே அறப்­போ­ரொன்று காலி­முகத் திடலை மைய­மாகக் கொண்டு ஆரம்­பித்து இன்று அப்­போ­ராட்டம் நாடெங்­கிலும் பர­வி­யுள்­ளது.

இந்தப் போரின் அடிப்­படைக் கோரிக்கை என்­ன­வெனில் எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக இன­வாத உருவில் அமைக்­கப்­பட்டு நாட்டை நாச­மாக்­கிய அர­சியல் பொரு­ளா­தாரப் பொறி­மு­றையை அடி­யோடு தகர்த்தெறிந்­து­விட்டு, நாட்டின் பிர­ஜைகள் யாவ­ருமே ஒரு தாய் பெற்ற பிள்­ளைகள், ஆதலால் அவர்கள் யாவரும் சமமே என்ற அடிப்­ப­டையில் ஒரு நவ இலங்­கையை உரு­வாக்கி அதற்­காகப் பல தியா­கங்­களைச் செய்து அதன் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாகும். அதற்­காக ஒரு பொரு­ளா­தாரத் திட்­டத்தை வகுத்து அதன் நெடுங்­கால இலக்­குகள் எவை குறுங்­கால இலக்­குகள் எவை­யென்று வகுத்து அவற்றின் அடிப்­ப­டையில் அத்­திட்­டத்தைச் செயற்­ப­டுத்தல் மிக அவ­சியம். அந்தத் திற­னுள்ள பலர் உள்­நாட்­டிலே உளர். ஆனால் அதற்கு முதலில் இருக்­கின்ற 225யும் நாடா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்ற வேண்டும். அது இல­குவில் முடி­யுமா? இதுதான் இன்­றைய பிரச்­சினை.

ஒன்­று­மட்டும் உண்மை. அதா­வது நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டுப் பொதுத் தேர்தலொன்று நடை­பெற்றால் இருக்­கின்ற 225ல் அதி­க­மா­னவர்கள் மீண்டும் வெற்­றி­வா­கை­சூடி திரும்பப் போவ­தில்லை. ஆகவே எப்­ப­டி­யா­வது அடுத்த மூன்று வரு­டங்­க­ளுக்கும் தமது ஆச­னங்­களைக் காப்­பாற்­று­வதே அவர்களின் பிர­தான நோக்கம். ராஜ­பக்ச கூட்­டணி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய ஓரி­ரண்டு அமைச்சர்கள்­கூட இப்­போது காலி­மு­கத்­தி­டலில் நடக்கும் போராட்­டத்­திற்கு அந்நிய சக்­தி­களின் சூழ்ச்சி என்ற ஒரு சாயத்தைப் பூசத் தொடங்­கி­யுள்­ளனர். அதே சமயம் அக்­கூட்­ட­ணி­யி­லி­ருந்து வில­கிய மற்­றைய கட்­சி­க­ளுடன் கைகோர்த்து புதிய ஒரு பிர­த­மரின் தலை­மையில் இடைக்­கால அர­சாங்­க­மொன்றை அமைக்கப் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இந்த முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வாக பௌத்த சங்­கத்­தி­னருள் ஒரு பகு­தி­யி­னரும் இயங்கத் தொடங்­கி­யுள்­ளனர். இன்­றைய சீர­ழி­வு­க­ளுக்குப் பௌத்த சங்­கத்­தி­னரும் ஒரு முக்­கிய காரணம் என்­பதை மறுக்க முடி­யாது. இதைப்­பற்­றிய விப­ரங்­களை ஏற்­க­னவே எனது ஆங்­கிலக் கட்­டு­ரை­களில் கொழும்பு டெலி­கிறாப் இணைய இதழில் வெளி­யிட்­டுள்ளேன்.

இந்த முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­கு­மானால் காலி­முகத் திடல் போராட்­டத்தை படை­க­ளைக்­கொண்டு நசுக்க அவர்கள் முனை­யலாம். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஓர் இருண்ட முகமும் உண்டு என்­பதை அவரே 2021 இல் அம்­பாறை மாவட்­டத்தின் உக­னையில் பேசும்­போது பகி­ரங்­க­மா­கவே கூறி­யுள்ளார். விடு­தலைப் புலி­க­ளுக்­கெ­தி­ராக அந்த முகமே வெளிப்­பட்­டது. இப்­போதும் அதே முகம் நாட்டின் இளைய சமு­தா­யத்­துக்கு எதி­ராக வெளிப்­ப­டலாம். ஈற்றில், சுகப்­பி­ர­ச­வத்­துடன் பிறக்­க­வேண்­டிய நவ இலங்கைக் குழந்­தையை அதன் தாயின் வயிற்­றி­லேயே அழித்­து­விட இடைக்­கால அரசு முடி­வெ­டுக்கும். ஏற்­க­னவே பல இடங்­களில் அறப்­போ­ராட்த்தின் ஆர்­வலர்களுக்கு எதி­ராக அரசு சார்­பி­லி­ருந்து பய­மு­றுத்­தல்கள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் செய்­திகள் கசிந்­துள்­ளன. ஆனாலும் இந்தத் தந்­தி­ரங்­களை மிக உன்­னிப்­பாக உலக அரங்கு கவ­னித்துக் கொண்­டி­ருக்­கி­றது. இளைஞர்களுக்கும் அந்த உபாயம் தெரி­யா­ம­லில்லை.

ஆயுதம் தாங்­காத அறப்­போ­ரொன்றை ஆயு­தப்­ப­டை­யி­னரால் ஒடுக்கி இரத்தக் கள­ரியை ஏற்­ப­டுத்தி பல உயிர்ப் பலி­களின் மத்­தி­யிலே தமது ஆட்­சியைத் தொட­ர­லா­மென ஜனா­தி­ப­தியும் அவ­ரது அடி­வ­ரு­டி­களும் நினைத்தால் அதை­வி­டவும் ஒரு முட்­டாள்­தனம் இருக்க முடி­யாது. பொரு­ளா­தாரம் மேலும் சீர­ழி­வது நிச்­சயம். முழு நாடே ஒரு புரட்சிக் கள­மா­கவும் மாறலாம். அதனால் உலக அரங்கு இந்த ஆட்­சி­யி­ன­ருக்கு எதி­ராகச் சீறிப் பாயும்.
இன்­றைய இளஞ்­சந்­த­தியின் சக்­தியை யாரும் தரக்­கு­றை­வாக எடை­போடக் கூடாது. அது கேட்­ப­தெல்லாம் ஆட்சி அதி­கா­ரத்தை அல்ல. மாறாக, ஜன­நாயகம் வழங்கும் சுதந்­தி­ரங்­க­ளு­டனும், பொரு­ளா­தார நீதி­யு­டனும், மனித உரி­மை­க­ளு­டனும், சம­மாக யாவ­ரையும் ஆட்­சி­செய்யும் ஓர் அர­சாங்­கத்­தையே அவர்கள் உரு­வாக்க முனை­கின்­றனர். அவ்­வா­றான ஓர் அர­சாங்­கத்தை கடந்த எழு­பது ஆண்­டு­க­ளாக இலங்கை காண­வில்லை. ஆட்­சி­செய்த எல்லா அர­சு­க­ளுமே ஏதோ ஓர் இனத்­தையோ மதத்­தையோ கலாச்­சா­ரத்­தையோ நசுக்­கித்தான் ஆட்சி செய்­துள்­ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு நவ இலங்கையை சிருஷ்டிக்கவே அவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் வெல்ல வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையும்.

முடி­வாக ஒன்று. அவர்­களின் போராட்டம் வெற்­றி­பெ­று­மானால் எதிர்­கா­லத்தில் இன­வாதக் கட்­சி­க­ளுக்கு இலங்­கையில் இட­மி­ருக்­காது. இன்று முஸ்­லிம்­களின் மத்­தி­யிலும் ஒரு கட்சி இரண்­டாகப் பிரிந்து இரண்­டுமே இன­வா­தத்தை கக்­கிக்­கொண்டு முஸ்­லிம்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன. அக்­கட்­சி­களின் நாடா­ளு­மன்றப் பிர­தி­நி­தி­களின் நடத்­தை­களும் பேச்­சுக்­களும் முஸ்லிம் இனத்­தையே மற்ற இனத்­த­வர்­களின் சிரிப்­புக்கும் ஏள­னத்­துக்­கும் பலி­யாக்­கி­யுள்­ளன. அதைப்­பற்றி ஏற்­க­னவே சில கட்­டு­ரைகள் இப்­பத்­தி­ரி­கையில் வெளி­வந்­துள்­ளன. எனவே, அடுத்த தேர்தல் வரும்­போது அக்­கட்­சி­ளுக்கு சாவு­மணி அடிக்­கப்­பட வேண்­டி­யது முஸ்லிம் சமூ­கத்தின் கடமை. வரலாற்றின் குப்பைத் தொட்டி இக்கட்சிகளின் வரவுக்காகக் காத்திருக்கிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.