ஜனாதிபதி முறைமையை நீக்கி 19 ஐ அமுல்படுத்த நடவடிக்கை

புதிய அரசாங்கம் இவ்வாரத்திற்குள் ஸ்தாபிக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி

0 438

(இ.ஹஷான்)
பாரா­ளு­மன்றில் பெரும்­பா­லான தரப்­பி­ன­ரது நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ளும் அதேபோல் நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை உறு­திப்­ப­டுத்தும் பிர­த­ம­ரையும், அமைச்­ச­ர­வை­யி­னையும் இவ்­வா­ரத்­திற்குள் நிய­மிப்பேன். அதேபோல் அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்­தத்தை மீண்டும் செயற்­ப­டுத்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பினை திருத்­தவும், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இரத்து செய்­வ­தற்கும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி கோத்­த­பய ராஜ­பக்ஷ நாட்டு மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்தார்.

நாடு தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டை­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது.தேசிய பாது­காப்­பையும்,அர­சியல் ஸ்தீரத்­தன்­மையை பேணு­வ­தற்கும் பல தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்­துள்ளேன். பொது மக்கள் அமை­தி­யான முறை­யிலும், சிறந்த சிந்­த­னை­யு­டனும் செயற்­பட வேண்டும் என்­பதை பொறுப்­புடன் வலி­யு­றுத்­து­கிறேன் எனவும் குறிப்­பிட்டார்.
அர­சியல் நெருக்­கடி தீவி­ர­ம­டைந்­துள்ள பின்­ன­ணியில் ஜனா­தி­பதி கோத்­த­பய ராஜ­பக்ஷ நேற்று இரவு நாட்டு மக்­க­ளுக்கு விசேட உரை­யாற்­றினார்.

தொலைக்­காட்சி ஊடாக அவர் ஆற்­றிய உரை­யின்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாடு வர­லாற்றில் என்­று­மில்­லாத வகையில் பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­னால் நாட்டு மக்கள் பாதிக்­கப்­பட்­டதை தொடர்ந்து அர­சியல் மற்றும் பொரு­ள­ாதார ஸ்தீரத்­தன்­மை­யற்ற நிலைமை தோற்றம் பெற்­றுள்­ளது.
பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து இடைக்­கால அர­சாங்­கத்தை ஸ்தாபிக்­கு­மாறு பல்­வேறு தரப்­பினர் தொடர்ந்து வலி­யு­றுத்­தி­னார்கள். குறித்த யோச­னை­க­ளுக்கு அமைய கடந்த காலங்­களில் பல்­வேறு தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு பல தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்தேன்.

கடந்த மாதம் ராஜ­ப­க்ஷர்கள் இல்­லாத இளை­ஞர்­களை உள்­ள­டக்­கிய தற்­கா­லிக அமைச்­ச­ர­வையை ஸ்தாபித்தேன். அத்­துடன் பிர­த­மரை நீக்கி புதிய பிர­தமர் தலை­மை­யி­லான இடைக்­கால அர­சாங்­கத்­தையும் ஸ்தாபிக்க இணக்கம் தெரி­வித்தேன். இவ்­வா­றான பின்­ன­ணியில் கடந்த திங்­கட்­கி­ழமை எதிர்­பா­ராத அசம்­பா­விதம் இடம்­பெற்­றதை தொடர்ந்து நாடு­த­ழு­விய ரீதியிலான வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றதால் ஊட­ரங்கு சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

குறு­கிய நேரத்­திற்குள் பலர் உயி­ரி­ழக்கும் வகையில் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­துடன், அர­சி­யல்­வா­தி­களின் வீடு­களும் தீக்­கி­ரை­யா­னது. இச்­சம்­ப­வத்­திற்கு அர­சியல் கட்சி பேத­மற்ற வகையில் கண்­டனம் வெளி­யிட்டு முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணிப்­புரை விடுத்தேன்.

இச்­சம்­ப­வத்­தினை தொடர்ந்தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத வகையில் சமூக கட்­ட­மைப்பில் வன்­முறை சம்­ப­வங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் முப்­ப­டை­களின் தள­ப­தி­களின் ஒத்­து­ழைப்­புடன் நாட்டின் அமை­தியை பேண தீர்­மா­னித்­துள்ளேன். நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தீர்­மா­னங்­களை செயற்­ப­டுத்­து­மாறு முப்­ப­டை­யி­ன­ருக்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே பொது மக்கள் வன்­மு­றை­களை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட கூடாது.

நாட்டு மக்கள் அனை­வரும் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். போராட்­டங்­களை தூண்­டி­விடும் தரப்­பி­ன­ருக்கு எதி­ரான கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும். இது­வ­ரையில் பதி­வான விளை­வுகள் மற்றும் இழப்­புக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும்.

நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன், அர­சியல் ஸ்தீரத்­தன்­மை­யினை தொடர்ந்து பேணு­வ­தற்கு சகல கட்­சி­களை தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்ளேன். நடை­மு­றையில் காணப்­படும் நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­தவும், நாடு ஸ்தீரத்­தன்­மை­யற்ற நிலை­மையில் இருந்து மீள்­வ­தற்கும், அரச கட்­ட­மைப்பை முன்­கொண்டு செல்­வ­தற்கும் புதிய அர­சாங்­கத்தை ஸ்தாபிக்க தீர்­மா­னித்­துள்ளேன். பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கையை பெற்­றுக்­கொள்ளும் அதேபோல் நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை உறு­திப்­ப­டுத்தும் பிர­த­ம­ரையும், அமைச்­ச­ர­வை­யி­னையும் இவ்­வா­ரத்­திற்குள் நிய­மிப்பேன்.

அதேபோல் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தத்தை மீண்டும் செயற்­ப­டுத்தும் வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பினை திருத்­தவும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். புதிய அர­சாங்­கத்தின் பிர­த­ம­ருக்கு புதிய செயற்­திட்­டத்தை வழங்கி நாட்டை முன்­கொண்டு செல்­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்பேன்.

அதேபோல் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இரத்து செய்­யு­மாறு பல்­வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு நாடு ஸ்தீரமான நிலைமையினை அடைந்ததை தொடந்து அதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை தொடர்ந்து வீழ்ச்சிக்கு கொண்டு செல்லாமல் நாட்டு மக்களினதும், அவர்களின் உடமைகளையும் பாதுகாத்து பொதுத்தன்மையுடன் செயற்படுமாறு அரச செயலொழுங்கின் சகல துறையினரிடனும் வலியுறுத்துகிறேன். அதேபோல் அமைதியானவும், சிறந்த சிந்தனையுடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.