மொட்டு தனக்குத் தானே வைத்த தீ!

0 548

எம்.எப்.எம். பஸீர்

2022 மே 9 ஆம் திகதி. கோட்டா கோ கம ஆரம்­பிக்­கப்­பட்டு அன்­றுதான் சரி­யாக ஒரு மாதம் பூர்த்­தி­யா­கி­றது. ஆனால் அன்­றைய தினம் நாட்டின் அர­சியல் வர­லாற்றில் கன­விலும் நினைத்­தி­ராத சம்­ப­வங்கள் அரங்­கேறப் போகின்­றன என்­பதை இலங்­கையின் புல­னாய்வுப் பிரி­வினர் கூட அறிந்­தி­ருக்­க­வில்லை.

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியைத் தொடர்ந்து மக்கள் இவ்­வ­ரு­டத்தின் மார்ச் மாதம் முதலே வீதி­களில் இறங்கிப் போராடி வரு­கின்­றனர். அதன் தொடர்ச்­சி­யா­கவே கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி கொழும்பு காலி முகத்­தி­டலில், ஜனா­தி­பதி செய­லகம் முன்­பாக மக்கள் திரண்டு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­படத் தொடங்­கினர். 24 மணி நேரமும் மழை­யிலும் வெளி­யிலும் தங்­கி­யி­ருந்து இவ்­வாறு மக்கள் போரா­டினர். இப் போராட்டம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்­சவை பதவி விலகக் கோரு­வ­தா­கவே அமைந்­தி­ருந்­தது.
இந்­நி­லையில் சுமார் 3 வாரங்­க­ளுக்கு பிறகு அலரி மாளிகை முன்­பாக மஹிந்த ராஜ­பக்­சவை பதவி வில­குவை இலக்­காகக் கொண்ட போராட்டம் ஆரம்­ப­மா­னது. இதற்கு ‘மைனா கோ கம’ எனப் பெய­ரி­டப்­பட்­டது. பொலி­சாரின் பல்­வேறு இடை­யூ­று­க­ளுக்கு மத்­தி­யிலும் மக்கள் ஒன்­று­தி­ரண்டு இங்கும் போராட்­டங்­களை முன்­னெத்து வந்­தனர்.
இவ்­வா­றான போராட்­டங்­களால் அர­சாங்கம் பாரிய அழுத்­தங்­களைச் சந்­தித்­தது. இறு­தி­யாக கடந்த வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தில்­வைத்து, பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தனது சகோ­த­ர­ரான மஹிந்த ராஜ­பக்­ச­விடம் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பத­வியை இரா­ஜி­னாமாச் செய்யும் தீர்­மா­னத்தை மஹிந்த மேற்­கொண்டு அதற்­கான திக­தி­யி­டப்­ப­டாத இரா­ஜி­னாமாக் கடி­தத்­தையும் தயார் செய்­தி­ருந்தார்.

இக் காலப் பகு­திக்குள் அர­சாங்­கத்­திற்குள் கோத்தா அணி, மஹிந்த அணி என இரு தரப்­புகள் உரு­வா­கி­யி­ருந்­தன. இதில் மஹிந்த அணி­யினர், பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து மஹிந்த ராஜ­பக்ச விலகக் கூடாது என அழுத்­தங்­களை வழங்­கினர். அத்­துடன் பிர­தமர் மஹிந்­த­வுக்கு இன்றும் மக்கள் மத்­தியில் ஆத­ரவு இருப்­ப­தா­கவும் அதனை தம்மால் நிரூ­பிக்க முடியும் என்றும் அவ­ருக்கு நெருக்­க­மான அமைச்­சர்கள் கூறி­ய­துடன் ஆத­ரவை வெளிக்­காட்டும் வகையில் ஆயிரக் கணக்­கா­னோரை அலரி மாளி­கைக்கு அழைத்­து­வ­ரவும் திட்­ட­மிட்­டனர்.

இதற்­க­மைய கடந்த 9ஆம் திகதி திங்கட் கிழமை காலையில் அலரி மாளி­கையில் மஹிந்­த­வுக்கு ஆத­ரவு தெரி­விக்கும் பாரிய கூட்டம் ஒன்று இடம்­பெற்­றது. இதில் நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் 20க்கும் மேற்­பட்ட பஸ் வண்­டி­களில் அழைத்­து­வ­ரப்­பட்ட ஆத­ர­வா­ளர்கள் கலந்து கொண்­டனர். இவர்­களில் பலர் 5 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உணவு, மது­பா­னத்­திற்­காக வந்­த­வர்கள் என்­பது பின்னர் நிரூ­பிக்­கப்­பட்­டது.

இக் கூட்­டத்தில் மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம ஆகிய பகு­தி­களில் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக தூண்டும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பலரும் உரை­யாற்­றினர். இதனால் உந்­தப்­பட்ட மஹிந்த ஆத­ர­வா­ளர்கள் அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யேறி, அங்கு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­தனர். அலரி மாளிகை முன்­பாக அமைக்­கப்­பட்­டி­ருந்த கூடா­ரங்கள் தாக்­கி­ய­ழிக்­கப்­பட்­ட­துடன் தீ மூட்­டப்­பட்­டது. அங்­கி­ருந்த பெண்கள் மீது கூட தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.
இதனைத் தொடர்ந்து அங்­கி­ருந்து காலி முகத்­தி­டலில் அமைந்­துள்ள கோட்டா கோ கமவை நோக்கி நகர்ந்த மஹிந்த தரப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அங்கு ஒரு மாத கால­மாக அமை­தி­யாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மக்கள் மீதும் கூடா­ரங்கள் மீதும் தாக்­குதல் நடத்­தினர். இதில் பலர் காய­ம­டைந்­தனர்.

இத் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான தக­வலை அறிந்த மக்கள் உட­ன­டி­யாக காலி முகத்­தி­ட­லுக்கு விரைந்து அங்கு அரச எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மக்­களைக் காப்­பாற்ற முயன்­ற­துடன் மஹிந்த ஆத­ரவு குண்­டர்­களை விரட்­டி­ய­டித்­தனர்.
குறிப்­பாக மஹிந்த ஆத­ரவு ஆர்ப்பாட்­டத்­திற்கு வருகை தந்­த­வர்கள் கொழும்­பி­லி­ருந்து தமது பஸ் வண்­டிகள் மற்றும் ஏனைய வாக­னங்­களில் வெளி­யேறிக் கொண்­டி­ருந்­தனர். இவர்­களை வழி­ம­றித்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. பலர் பேர வாவிக்குள் தள்­ளி­வி­டப்­பட்­டனர். பல­ரது ஆடைகள் களை­யப்­பட்­டன. மரத்­திலும் மின்­கம்­பங்­க­ளிலும் கட்­டி­வைத்து தாக்­கப்­பட்­டனர். இதனைத் தொடர்ந்தே வன்­மு­றைகள் ஏனைய இடங்­க­ளுக்கும் பரவ ஆரம்­பித்­தன.

இந்­நி­லையில் ஆளுங்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தே­ச­சபை, நக­ர­சபை உள்­ளிட்ட உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள், தொழிற்­சங்­கத்­த­லை­வர்கள் உள்­ளிட்ட பிர­மு­கர்­களின் வீடு­கள்­மீது நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பொது­மக்கள் ஒன்­று­தி­ரண்­டு­சென்று தாக்­குதல் நடாத்­தினர். பல­ரது வீடு­க­ளுக்கு அவர்கள் தீயிட்­டுக்­கொ­ளுத்­தி­யுள்­ள­துடன் சொத்­துக்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

எம்.பி. உயி­ரி­ழப்பு
மஹிந்த ராஜ­பக்­சவை பிர­தமர் பத­வியில் தொடர்ந்து இருக்­கு­மாறு கூறி முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆத­ரவு வன்­மு­றை­களைத் தொடர்ந்து, வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அம­ர­கீர்த்தி அத்­து­கோ­ரள நிட்­டம்­பு­வயில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தின் இடையே சிக்கி உயி­ரி­ழந்தார். அவர் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளி­டையே சிக்கிக் கொண்ட நிலையில், தன்னைத் தானே துப்­பாக்­கியால் சுட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தாக கூறுப்­ப­டு­கி­றது.
எனினும் இவ­ரது மரணம் தொடர்பில் பொலிஸ் திணைக்­களம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எத­னையும் அறி­விக்­க­வில்லை.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அம­ர­கீர்த்தி அத்­து­கோ­ரள தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் பொலன்­ன­றுவை நோக்கி வாக­னத்தில் சென்­றுள்ளார். இதன்­போது அவ­ரது வாகனம் நிட்­டம்­பு­வையில், கொழும்பு – கண்டி வீதியை மறித்து பொது மக்கள் முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்­டத்தின் இடையே சிக்­கி­யுள்­ளது. இத­னை­ய­டுத்து ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினை தாக்க முய­லவே, பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் ஆர்ப்­பாட்டக் காரர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­ய­தாக அறிய முடி­கி­றது.

இதனால் இரு பொது மக்கள் துப்­பாக்கிச் சூட்டு காயத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. அங்­கி­ருந்த ஆர்ப்­பாட்டக் காரர்கள் துப்­பாக்கிச் சூட்டை அடுத்து ஆவே­ச­ம­டைந்­துள்­ளனர்.

இதன்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அவ­ரது சார­தியும், நிட்­டம்­புவ நகரின் நிஹால் பெசன் ஆடை­ய­கத்­தினுள் ஓடி ஒழிந்­துள்­ளனர். எவ்­வா­றா­யினும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தொடர்ச்­சி­யாக விரட்டி சென்­றுள்ள நிலையில், அச்­ச­ம­டைந்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அம­ர­கீர்த்தி தன் துப்­பாக்­கியால் சுட்டு தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இதன்­போது அதன் அருகே, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் சார­தியும் தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. குறித்த ஆடை­யகம் அருகே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­னதும் சார­தி­யி­னதும் சட­லங்கள் காணப்­பட்­டன. எவ்­வா­றா­யினும் இது தொடர்பில் பொலிஸார் எத­னையும் இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

ஆளும் தரப்பு முக்­கி­யஸ்­தர்­களின் சொத்­துக்கள் மீதான தாக்­குதல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்­டோவின் குரு­ணாகல் மற்றும் கொழும்பு லில்லீ வீதி­யி­லுள்ள வீடு­கள்­மீதும் பத்­த­ர­முல்லை விக்­ர­ம­சிங்­க­பு­ர­வி­லுள்ள வீடு மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மான ஜோன்ஸ்டன் பெர்­னாண்­டோ­விற்குச் சொந்­த­மான மது­பா­ன­சா­லை­யொன்றும் தீவைத்து எரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஜோன்ஸ்டன் பெர்­னாண்­டோவின் குரு­ணாகல் வில்­கம பகு­தியில் அமைந்­துள்ள அலு­வ­லகம் மீதும் பொது­மக்­களால் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.
முன்னாள் அமைச்சர் ரோஹித அபே­கு­ண­வர்­த­னவின் களுத்­துறை இல்லம் பிர­தே­ச­வா­சி­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முன்னாள் அமைச்சர் ரமேஸ் பத்­தி­ர­ணவின் இல்­லமும் பொது­மக்­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. அவ­ரது இல்­லத்­தின்­மீது தாக்­குதல் நடத்­திய பொது­மக்கள் வீட்டை தீயிட்­டுக்­கொ­ளுத்­தினர்.

முன்னாள் அமைச்சர் நிமல் லன்­சாவின் நீர்­கொ­ழும்பு இல்லம் அப்­ப­குதி மக்­களால் தீயிட்­டுக்­கொ­ளுத்­தப்­பட்­டது.

முன்னாள் அமைச்சர் அருந்­திக பெர்­னாண்­டோவின் வீடும் பொது­மக்­களால் சேதப்­ப­டுத்­தப்­பட்டு, தீயிட்­டுக்­கொ­ளுத்­தப்­பட்­டது.

மொரட்­டுவை நகர மேயர் சமன்லால் பெர்­னாண்­டோவின் வீடும் பொது­மக்­களால் தாக்­கப்­பட்­டது. மொரட்­டுவைப் பகு­தியில் அமைந்­துள்ள அவ்­வீடு மீது தாக்­குதல் நடத்­திய அப்­ப­குதி மக்கள் அவ்­வீட்டைத் தீயிட்­டுக்­கொ­ளுத்­தி­யுள்­ளனர். மறுநாள் மொரட்­டுவ நகர சபையின் உடை­மை­களும் எரிக்­கப்­பட்­டன.

‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ மீது ஆளுந்­த­ரப்பு ஆத­ர­வா­ளர்கள் நடாத்­திய மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­தல்­களை வழி­ந­டத்­தி­ய­வ­ராக நம்­பப்­படும் ஆளுங்­கட்­சியின் தொழிற்­சங்­கத்­த­லை­வர்­களில் ஒரு­வ­ரான மஹிந்த கஹந்­த­க­மவின் வீட்­டின்­மீதும் பொது­மக்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.
கொழும்பு வொகசால் வீதியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டின்­மீது இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அமை­திப்­போ­ராட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடாத்த ஆத­ர­வா­ளர்­களை அழைத்­து­வந்­த­வர்­களில் ஒரு­வ­ராகக் கரு­தப்­படும் வளல்­லா­விட்ட பிர­தே­ச­ச­பையின் தலைவர் உதேனி அத்­து­கோ­ர­ளவின் வீடும் அப்­ப­குதி மக்­களால் அடித்து உடைக்­கப்­பட்­டுள்­ளது. வீட்டில் அவர் இருக்­கா­த­போதும், வீட்­டுக்குள் நுழைந்த பொது­மக்கள் அங்­கி­ருந்த சொத்­துக்கள் மற்றும் அவ­ரது ஜீப் வண்டி ஒன்­றி­னையும் அடித்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சனத் நிஷாந்­தவின் வீடு பொது­மக்­களால் அடித்து, தீவைத்து எரிக்­கப்­பட்­டுள்­ளது. புத்­த­ளத்தில் அமைந்­துள்ள அவ­ரது வீடு இதனால் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சனத் நிசாந்த அமைதி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள்­மீது நடாத்­தப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டியே இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஆளுங்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுபா பஸ்­கு­வாலின் மத்­து­கம இல்லம் அப்­ப­குதி மக்­களால் அடித்து உடைக்­கப்­பட்­டது.
இரத்­தி­ன­புரி மாவட்ட பொது­ஜன பெர­மு­னவின் அர­சியல் தலை­வ­ரான அகில சாலிய எல்­லா­வெ­லவின் பலாங்­கொ­டையில் அமைந்­துள்ள வீடு அப்­ப­குதி மக்­களால் அடித்து சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் பலாங்­கொடை பகு­தியில் பெரும் பதற்­ற­நிலை நில­வி­யது.

ஆளுங்­கட்­சிக்கு ஆத­ர­வான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமின் புத்­தளம் இல்லம் மீதும் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் பாரா­ளு­மன்­றுக்குத் தெரி­வான நஸீர் அக­மதின் சொத்­துக்கள் மீதும் மக்கள் தாக்­குதல் நடத்­தினர்.

ஆளுந்­த­ரப்புப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ குட்­டி­யா­ராச்­சியின் வீட்­டின்­மீதும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. பண்­டா­ர­வளை பகு­தியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்­டின்­மீதே இவ்­வாறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

குரு­ணாகல் நகர மேயர் துசார சஞ்­சீ­வவின் வீட்­டின்­மீதும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­னாண்­டோவின் ‘வலது கர­மாகக்’ கரு­தப்­படும் குரு­ணாகல் மேயரின் வீட்­டுக்குள் நுழைந்த பிர­தே­ச­வா­சிகள் வீட்­டினை அடித்து உடைத்து, தீவைத்துக் கொளுத்­தினர். அத்­துடன் மேயர் துசார சஞ்­சீ­வ­விற்கு சொந்­த­மான ஜீப் வண்­டி­யொன்று கொழும்­பி­லி­ருந்து குரு­ணா­கலை நோக்கிப் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­த­போது மீரி­கம பகு­தி­யில்­வைத்து பொது­மக்­களால் வழி­ம­றிக்­கப்­பட்­டது. அமைதி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­கள்­மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்ட பின்னர் தப்­பிச்­செல்லும் வழியில் அந்த ஜீப் வண்டி இவ்­வாறு மறிக்­கப்­பட்டு சேதப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­போது அவ்­வண்­டியில் மது­பான போத்­தல்­களும் கூரிய ஆயு­தங்­களும் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொலிஸ் திணைக்­க­ளத்­துக்கு பொறுப்­பாக இருந்த முன்னாள் அமைச்சர் பிர­சன்ன ரண­துங்­கவின் வீட்டின் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது. அவ­ரது வீட்டின் மீது தாக்­குதல் நடாத்­திய பொது மக்கள் அவ்­வீட்டை தீயிட்டு கொழுத்­தி­யுள்னர்.

அண்­மையில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்து, இரா­ஜாங்க அமைச்­சினைப் பெற்­றுக்­கொள்ள அர­சாங்கம் பக்கம் தாவிய, குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்த பண்­டா­ரவின் வீடும் பொது மக்­களின் இலக்­குக்கு உள்­ளா­கி­யுள்­ளது.
இத­னி­டையே நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்­டுள்ள அரச எதிர்ப்பு போராட்­டங்­களின் இடையே, அம்­பாந்­தோட்டை மெத­மு­லன வளாகம் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது. அங்கு ஒன்று கூடிய மக்கள், அங்கு டி.ஏ. ராஜ­பக்ச ஞாப­கார்த்த தூபியை அடித்து உடைத்து வீழ்த்­தி­யுள்­ளனர்.

இந்த தூபியை அமைக்க பொது மக்­களின் பணம் விரயம் செய்­யப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச மீது குற்­றச்­சாட்டு உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அதே­போன்று பசில் ராஜ­பக்­ச­வுக்கு சொந்­த­மா­ன­தாக கரு­தப்­படும் மள்­வா­னை­யி­லுள்ள சொகுசு வீடும் தாக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் சமல் ராஜ­பக்­சவின் அலு­வ­ல­கமும் தாக்­கப்­பட்­டது.

முன்னாள் அமைச்சர் காமினி லொக்­கு­கேயின் ஹோகந்த வீட்டின் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டது. அவ­ரது மீட்டின் மீது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் வீட்டை தீயிட்டு கொளுத்­தினர்.

கம்­பஹா நகர மேயர் எரங்க சேன­நா­யக்­கவின் வீடும் பொது மக்­களால் தாக்­கப்­பட்டு தீயிட்டு கொளுத்­தப்­பட்­டுள்­ளது.

இதனை விட, ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச உள்­ளிட்ட பல முக்­கிய பிர­மு­கர்­களின் ஜோதி­ட­ராக கரு­தப்­படும் ஞானா அக்கா என பல­ராலும் அறி­யப்­பட்ட கே. ஞானா­வ­தியின் அனு­ரா­த­புரம் – நுவ­ர­வெவ குளத்­துடன் கூடி­ய­தாக அமைக்­கப்­பட்ட சுற்­றுலா ஹோட்டல் மற்றும் அவ­ரது வீடு ஆகி­ய­வற்றின் மீதும் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.
ஆளும்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மன்றி பொது ஜன பெர­மு­னவின் ஆத­ர­வா­ளர்­க­ளான டான் பிரி­யசாத் மற்றும் இசைக் கலைஞர் இராஜ் ஆகி­யோரின் வீடு­களும் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. இவர்கள் கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரங்­களின் முன்­னின்­ற­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் பல முன்னணி அரசியல்வாதிகளின் வீடுகளும் எரித்து சாம்பராக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­லவின் கண்டி வீடு, விதுர விக்­ர­ம­நா­யக்­கவின் ஹொரணை இல்லம், விமல் வீர­வன்­சவின் ஹோக­கன்­தர இல்லம், முன்னாள் பிரதி சபா­நா­யகர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டி­யவின் வீடு, முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் வீடு, பந்துல குணவர்தனவின் நுகேகொட இல்லம் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் வீடு, சன்ன ஜயசுமனவின் அநுராதபுர இல்லம், பிரசன்ன ரணதுங்கவின் உடுகம்பொல இல்லம், துமிந்த திஸாநாயக்கவின் வீடு, சந்திரசேனவின் வீடு, நுவன் அத்துகோரளவின் வீடு, சஹான் பிரதீப் கடுவெல இல்லம், சிறிபால கம்லத்தின் பொலனறுவை இல்லம், கோகிலா குணவர்தனவின் மீரிகம இல்லம், திஸ்ஸ குட்டியாராச்சியின் பண்டாரவளை இல்லம், சிந்தக மாயாதுன்னேவின் புத்தளம் இல்லம் மற்றும் அலுவலகம், அநுராத ஜயரத்னவின் கம்பளை அலுவலகம், குணபால ரத்னசேகரவின் குருணாகல் இல்லம், அகில சாலிய எல்லாவெலவின் பலாங்கொடை இல்லம், டி.பி.ஹேரத்தின் வாரியபொல இல்லம், பவித்ரா வன்னியாராச்சியின் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல இல்லங்கள், சந்திம வீரகொடியின் வீடு, அத்தனகல பிரதேசசபை தலைவரின் வீடு, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேசசபை தலைவரின் வீடு, வல்லலவிட்ட பிரதேசசபை தலைவர் வீடு, எல்பிட்டி பிரதேசசபை தலைவர் வீடு, ஹொரணை மேயர் இல்லம், முன்னாள் அமைச்சர் காஞ்சன வீரசேகரவின் மாத்தறை வீடு, நிபுண ரணவக்கவின் வீடு, மிலான் ஜயதிலகவின் வீடு அகில எல்லாவலவின் வீடு நீர் கொழும்பு கிராண்ட் டீசா ஹோட்டல், நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல், லக்ஸ்மன் பெரேரா, இந்துனில் ஜகத் குமார, மொஹான் டி சில்வா, சஹன் பிரதீப், அசோக பிரியந்த ஆகியோரின் சொத்துக்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

பொது ஜன பெரமுன ஆதரவாளர்களைத் தூண்டி கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்கும் நோக்கில் வைக்கப்பட்ட தீயானது இன்று அவர்களுக்கு வினையாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் இனவாதத்தை விதைத்து இவர்கள் முன்னெடுத்த அரசியல் இன்று அவர்களைப் பதம் பார்த்துள்ளது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், ஊழல் மோசடிகள், வசீம் தாஜுதீன் உள்ளிட்டவர்களின் படுகொலைகளின் சாபங்கள் இவ்வளவு வேகமாகப் பலிக்கும் என யார்தான் நினைத்திருப்பார்கள்?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.