ஏறாவூரில் நஸீர் அஹமடின் அலுவலகம் ஆடைத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்

உறவினர்களின் வீடு, உணவகமும் தாக்கப்பட்டன

0 496

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­மு­றை­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் சுற்­றாடல் அமைச்­சரும் முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான நஸீர் அக­மட்டின் அலு­வ­லகம், அவ­ருக்குச் சொந்­த­மான ஆடைத் தொழிற்­சா­லைகள் என்­பன தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன. அத்­துடன் அவ­ரது உற­வி­னர்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு மற்றும் உண­வகம் என்­ப­னவும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

நாட­ளா­விய ரீதியில் ஆளும் தரப்பு அர­சி­யல்­வா­தி­களின் சொத்­துக்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந் நிலை­யி­லேயே இறு­தி­யாக இடம்­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது சுற்­றாடல் அமைச்­ச­ராக பதவி வகித்த நஸீர் அக­மட்டின் சொத்­துக்­களும் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

வாடகைக் கட்­டி­ட­மான அவ­ரது அர­சியல் அலு­வ­ல­கத்­திற்கு தீ வைக்­கப்­பட்­ட­தோடு, அவ­ரது சகோ­த­ரரின் வீடு ஒன்றும் சகோ­த­ரரின் புதல்­வ­ருக்குச் சொந்­த­மான உண­வகம் ஒன்றும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளது.

இதே­வேளை நஸீர் அக­மட்­டிற்குச் சொந்­த­மான ஏறாவூர், புன்­னைக்­குடா வீதியில் அமைந்­துள்ள மூன்று ஆடைத்­தொ­ழிற்­சா­லை­களும் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன. இவற்றில் ஒரு தொழிற்­சாலை முற்­றாக சேத­மாக்­கப்­பட்­டுள்­ளது. அங்­கி­ருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்­தி­ரங்கள், மின் பிறப்­பாக்­கிகள், ஜன்னல் கண்­ணா­டிகள் என்­ப­னவும் அடித்து நொறுக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் இத் தொழிற்­சா­லையில் பணி­பு­ரிந்த ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட யுவ­திகள் தொழில்­வாய்ப்­பு­களை இழக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் சம்­பவ இடங்­க­ளுக்கு விரைந்­த­போதும் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­ய­வில்லை.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் அக­மட்­டிற்கு எதி­ராக ஒன்று திரண்ட பெருந்­தி­ர­ளானோர் செவ்­வாய்க்­கி­ழமை மாலை­யி­லி­ருந்து நள்­ளி­ரவு வரை இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இச் சம்­பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசா­ர­ணை­களை முன்னெடுத்து வருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.