போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

தேசிய ஷூரா சபை

0 480

காலி­மு­கத்­தி­டலில் ஒரு மாத கால­மாக, மிகவும் அமை­தி­யான முறையில் சாத்­வீக ரீதி­யாக போராடி வந்­த­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­தலை வன்­மை­யான கண்­டிப்­ப­தாக தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது. இது தொடர்பில் தேசிய ஷூரா சபையின் தலைவர் ரீ.கே.அஸூர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சாத்­வீகப் போராட்டம் ஜன­நா­யக நாட்டின் உரிமை என்­பதை அது வலி­யு­றுத்தும் அதே­வேளை இத்­தாக்­கு­த­லை­ய­டுத்து இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் இடம்­பெற்ற எதிர்­வி­ளை­வு­களின் போது உயிர்கள் மற்றும் சொத்­துக்கள் அழிக்­கப்­பட்­டமை கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

அர­சி­யல்­வா­திகள் முறை­யற்ற விதத்தில் சொத்­துக்­களை சேக­ரித்­தி­ருந்தால் அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வதே சரி­யா­னது. அத­னை­வி­டுத்து சொத்­துக்­களை அழிப்­ப­தையும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தையும் முற்­று­மு­ழு­தாக தவிர்க்­கும்­படி வேண்­டிக்­கொள்­கி­றோம்.

தூர நோக்­கோடு மேற்­கொள்­ளப்­படும் சாத்­வீகப் போராட்­டத்தை திசை திருப்பும் நோக்கில் சில சக்­திகள் இனங்­க­ளுக்கு இடை­யி­லான மோதல்­களை உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சித்து வரு­வ­தாக தக­வல்கள் வெளி­வ­ரு­வதால் அத்­த­கைய சதி­கார வலையில் சிக்­கி­வி­டாமல் அனை­வரும் முன்­னெச்­ச­ரிக்­கை­யோடு நடந்து கொள்ள வேண்­டு­ம்

இடைக்­கால நிர்­வா­க­மொன்று பற்­றிய கருத்­தா­டல்கள் இடம்­பெற்று வரு­கின்ற இச்­சூ­ழலில் இனம், மதம், மொழி, ஆகிய குறு­கிய எல்­லை­க­ளுக்கு அப்பால் நின்று அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் பொது­வான ஒரு இடைக்­கால தீர்வுத் திட்­டத்தை நோக்கி, எல்­லோரும் இதய சுத்­தி­யோடு முயற்­சி­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் தேசிய ஷூரா சபை அதற்­கான அனைத்து பங்­க­ளிப்­பு­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றது.

நீதி, நியாயம், பொரு­ளா­தார சமத்­துவம், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நட்­பு­றவு, தேசத்தின் வளர்ச்சி என்­ப­வற்றை இஸ்லாம் இலக்­காகக் கொள்­வ­தனால், இத்­த­கைய விழு­மி­யங்­களைக் கொண்ட புதிய அர­சியல் கலா­சா­ரத்தை வளர்ப்­ப­தற்கு ஏனைய இனங்­க­ளோடு முஸ்­லிம்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் முஸ்­லிம்­களை வேண்டிக் கொள்கிறது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் பொலிசார் தாமதமின்றியும் பக்கச் சார்பின்றியும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கண்டிப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபரை தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.