ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை சட்டத்தின் முன் நிறுத்துக

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

0 351

ஜன­நா­யக ரீதி­யாக ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்டு வருவோர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக அதன் பதில் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
தற்­போது நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் நெருக்­கடி நிலை தொடர்­பாக தமது எதிர்ப்பை முன்­வைத்து ஜன­நா­யக ரீதியில் காலி முகத்­தி­ட­லிலும் அலரி மாளி­கைக்கு முன்­னாலும் ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­ட­வர்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யா­னது மிகவும் கவ­லை­யையும் வருத்­தத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரான இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

இத்­தாக்­குதல் தொடர்பில் நியா­ய­மான மற்றும் வெளிப்­ப­டை­யான ஒரு விசா­ரணை நடாத்­தப்­பட்டு, இதனை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படல் வேண்­டு­மென்று சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை நாம் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் சகல தரப்பினரும் வன்முறையை தவிர்ந்து அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.