(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் இன்றைய அசாதாரண நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்கும் படியும் எவ்வித வன்செயல்களில் ஈடுபட வேண்டாமெனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உதவி தலைவர் ஹில்மி அஹமட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் சுயநலவாதிகளும் குண்டர்களும் இந்த தற்போதைய அசாதாரண நிலைமையினைப் பயன்படுத்தி இன வன்முறைகளை உருவாக்குவதற்கும், கொள்ளையிடுவதற்கும் முயற்சிக்கலாம். நாட்டு மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அரசியல் பேதமின்றி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டுமெனக் கோருகிறோம்.
அலரி மாளிகைக்கு முன்னாலும், காலி முகத்திடலிலும் கடந்த 30 நாட்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையிலே தமது எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அவர்கள் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னணியிலிருந்த அரசியல் தலைவர்கள் உட்பட அமைச்சர்களை உடனடியாக கைது செய்யுமாறு நாம் பொலிஸ்மா அதிபரைக் கோருகிறோம். அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கான அத்தாட்சிப் புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் உள்ளன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறும் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுமாறும் வேண்டுகிறோம்.
20ஆவது மற்றும் 19ஆவது அரசியல் திருத்தத்தை அமுலுக்கு கொண்டுவருமாறும் கோருகிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசொன்றினை நிறுவுமாறும் அரசியல் கட்சிகளையும் கோருகிறோம் ை விடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli