ஜும்ஆத் தொழுகை குறித்து உலமா சபையின் அறிவிப்பு

0 322

கொவிட் 19 பர­வ­லுக்கு முன் ஜும்ஆத் தொழுகை நடை­பெற்ற மஸ்­ஜி­து­களில் மாத்­திரம் இனி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கையை நடத்­து­மாறு அகில இலங்கை ஜம்­இய்துல் உலமா அறி­வித்­துள்­ளது.

அத்­தோடு, தொடர்ந்தும் சுகா­தார வழி­காட்­டல்­களை பின்­பற்­று­மாறும் உலமா சபை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் ஃபத்வாக் குழு செய­லாளர் அஷ் ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
கொவிட் 19 அதி­க­மாக பரவிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில் மக்கள் மஸ்­ஜித்­களில் ஒன்­று­கூடும் எண்­ணிக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் ஜும்ஆக்­களை தக்­கி­யாக்கள், ஸாவி­யாக்கள் போன்ற பல இடங்­க­ளிலும் நடாத்­து­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வழி­காட்­டி­யி­ருந்­தது.

எனினும் தற்­போது கொரோ­னா­வு­டைய தாக்கம் குறைந்து, மஸ்­ஜித்­களில் ஒன்­று­கூடும் எண்­ணிக்கை தளர்த்்­தப்­பட்டு, நிலைமை கட்­டுக்­கோப்­பான ஒரு நிலைக்கு வந்­தி­ருப்­பதன் கார­ணத்­தி­னாலும், ஜும்­ஆ­வுக்­கென்று ஷாபிஈ மத்­ஹபில் சில முக்­கி­ய­மான நிபந்­த­னைகள் இருப்­ப­தாலும் குறிப்­பாக அனை­வரும் ஒரு இடத்தில் ஒன்­று­சேர முடி­யாத நிலைமை இருந்­தாலே தவிர, ஒரு ஊரில் ஒரு இடத்தில் மாத்­தி­ரமே ஜும்ஆ நடாத்­தப்­பட வேண்டும் என்ற நிபந்­த­னைக்கு அமை­வாக, ஏற்­க­னவே (கொவிட் 19 பர­வ­லுக்கு முன்) ஜும்ஆத் தொழுகை நடாத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த மஸ்­ஜித்­களில் மாத்­திரம் சுகா­தார வழி­காட்­டல்­களைப் பேணி ஜும்ஆக்­களை நடாத்­து­மாறு மஸ்ஜித் நிர்­வா­கி­களை கேட்டுக் கொள்­கின்றோம்.

சுகா­தார வழி­காட்­டல்­களைப் பேணி ஒரு ஊரில் ஒரு இடத்தில் ஜும்ஆவை நடாத்த முடி­யாமல் இருந்தால் மாத்­திரம் பிறி­தொரு இடத்தில் ஜும்ஆவை நடாத்­தலாம். எனினும் ஓர் ஊரில் மார்க்க வழி­காட்­டல்­களைப் பேணாது பிறி­தொரு இடத்தில் ஜும்ஆ நடை­பெ­று­மாயின் ஷரீ­அத்தின் பார்­வையில் இரண்­டா­வது ஜும்ஆ செல்­லு­ப­டி­யற்­ற­தாகும் என ஷாபிஈ மத்­ஹபைச் சேர்ந்த அறி­ஞர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

எனவே இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் விடயத்தில் ஜம்இய்யாவின் கிளைகள் தத்தமது பிரதேசத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டி உதவுமாறு வேண்டிக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.