மகா சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசியல் தலைவர்களது பொறுப்பாகும்

புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென பேராயர் கோரிக்கை

0 347

மகா சங்­கத்­தி­னரின் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்­டி­யது அனைத்து அர­சியல் தலை­வர்­க­ளது பொறுப்­பாகும். ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் உகந்த வகையில் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­யது. இது­போன்ற செயற்­பா­டு­களை இப்­போ­தி­லி­ருந்­தா­வது நிறுத்தி, புதிய ஆரம்­ப­மொன்­றுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்டும் என்று சகல அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் கேட்டுக் கொள்­வ­தாக பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

பாப்­ப­ர­சரின் அழைப்பின் பேரில் வத்­திக்கான் சென்­றி­ருந்த பேராயர் நேற்று புதன்­கி­ழமை நாடு திரும்­பினார். இதன் போது கட்­டு­நா­யக்க விமான நிலைய வளா­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிடும் போது இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்று பரி­சுத்த பாப்­ப­ரசர் உறு­தி­யாக வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். குறிப்­பாக இது தொடர்பில் அரச தலை­வர்கள் அவ­தானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தற்­போ­துள்ள நிலைமை மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். எனவே அரச தலை­வர்கள் நாட்டைப் பற்றி சிந்­தித்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும் என்­பதை உணர்ந்­தி­ருப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். மகா நாயக்க தேரர்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களை நிரா­க­ரிக்க முடி­யாது. எனவே அவர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்கு நாட்டு தலை­வர்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

நாட­கங்­களை அரங்­கேற்­று­வது பிர­யோ­ச­ன­மற்­றது. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை வழங்­கு­வது அர­சியல் தலை­வர்­களின் பொறுப்­பாகும். ஜனா­தி­ப­திக்கும் , பிர­த­மருக்கும் உகந்த வகையில் சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். சட்­ட­மா­னது அவர்­க­ளுக்கு மேலானதாக இருக்க வேண்டும். எனவே இவ்வாறான நடைமுறைகளை இத்துடன் நிறுத்தி புதிய ஆரம்பமொன்றுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சகல அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.