பெருநாள் தினத்தன்று கோர விபத்து இரு சகோதரிகள் ஸ்தலத்திலேயே பலி

ஹெட்டிப்பொலவில் சம்பவம்; பெற்றோர், சகோதரர் படுகாயம்

0 374

(குரு­நாகல் நிருபர்)
நோன்புப் பெருநாள் தின­மான நேற்று முன்­தினம் குடும்­பத்­துடன் உற­வினர் வீட்­டுக்குச் செல்­லும்போது இடம்­பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரிகள் பலி­யா­கி­யுள்­ள­துடன் பெற்­றோரும் சகோ­தரர் ஒரு­வரும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

ஹெட்­டிப்­பொல பிர­தே­சத்­தி­லேயே இவ்­வி­பத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாரம்­மல மடி­கே­பெ­ண­த­னி­கொட பகு­தியைச் சேர்ந்த யூ.எல்.ஜாபிரின் குடும்­பத்­தினர் நோன்புப் பெருநாள் தொழு­கையை நிறை­வேற்­றி­விட்டு மனை­வியின் ஊரான ஹெட்­டிப்­பொ­ல­விற்கு கட்­டு­பெத்த வீதியின் ஊடாக முச்­சக்­கர வண்­டியில் செல்லும் போது மூன­மல்­தெ­னிய என்ற இடத்தில் எதிரே வந்த ட்ரக் வண்டி ஒன்­றுடன் நேருக்கு நேர் மோதி­யதில் இவ்­வி­பத்து இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்தில் சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ மதீனா தேசிய பாட­சா­லையின் உயர்­தர பிரிவில் கல்வி பயிலும் ஆக்கிலா என்ற மாண­வியும் நூரா­ணியா மகா வித்­தி­யா­ல­யத்தில் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் ஆதிலா என்ற மாண­வி­யுமே உயி­ரி­ழந்­தனர். இவர்­க­ளது சகோ­த­ர­ரான தரம் ஆறில் கல்வி பயிலும் அப்­துல்லாஹ் படு­கா­ய­ம­டைந்த நிலையில் குளி­யாப்­பிட்டி வைத்­தி­ய­சா­லையின் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இவர்­க­ளது பெற்­றோரும் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

விபத்­தின்­போது உயி­ரி­ழந்த சகோ­த­ரி­களின் ஜனாஸா நேற்று பிற்­பகல் மடிகே பெண்­த­னி­கொட ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.