இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டயீடு வழங்குக

கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள் ஒன்றியம் அறிக்கை

0 386

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு கூட அமை­தி­யாக இருந்த நாட்டில் வன் செயலைத் தூண்டி முஸ்­லிம்­களின் உயிர், பொருள் சொத்­துக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­திய சேதங்­க­ளுக்கு அர­சாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கம்­பஹா மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்­றியம் அரசைக் கோரு­கின்­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின் சுமார் மூன்று வாரங்கள் நாடு அமை­தி­யான சூழ­லி­லேயே இருந்­தது. அதன் பின்பு திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் முஸ்லிம் பிர­தே­சங்கள் தாக்­கப்­பட்டு அவர்­களின் உயிர் உட­மை­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்ட போதும் குற்­ற­வா­ளிகள் தண்­ட­னை­யின்மை நிலையை அனு­ப­விக்க, அவர்கள் பொலி­ஸா­ரினால் விடு­விக்­கப்­பட்­டனர். இது அர­சாங்­கத்தின் சட்­டத்தின் ஆட்­சிக்கு முர­ணான செயல் என்­ப­தனால் இதற்­கான பொறுப்பை ஏற்று அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.

அண்­மைய வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் திட்­ட­மி­டப்­பட்ட அடிப்­ப­டையில் 2018 முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டதை உணர முடி­கின்­றது. அம்­பா­றையில் மலட்டுத் தன்­மையை உரு­வாக்கும் வில்­லை­களை ரொட்­டியில் சுட்டு வழங்­கு­வ­தாக பிர­சாரம் செய்து ஏற்­ப­டுத்­தப்­பட்ட வன் செயல் கார­ண­மாக அம்­பாறை பள்­ளி­வாசல் கூட சேதப்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் பின் தொட­ரப்­பட்ட இவ் வன்­செ­யலில் ஈடு­பட்ட இன­வாத கும்­பல்­க­ளுக்கும் உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் ஒரே பிரி­வி­ன­ரி­ட­மி­ருந்து அடைக்­கலம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்ற உண்மை தற்­போது வெளி­வந்­துள்­ளது.

இன­வா­தத்தை தூண்டி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன் செயல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் இரத்­தத்தின் மூலம் இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் விளை­வாக இந்த நாட்­டிற்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் மற்றும் பொரு­ளா­தார நெருக்­கடி தெய்­வீக பழி­வாங்கல் என பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் கூறிய உண்­மையை யாராலும் மறுக்க முடி­யாது.

நாடு எதிர்­நோக்கும் இந்த நெருக்­கடி நிலையில் அர­சாங்கம் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ச்­சி­யான ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந் நிலை­யிலும் கூட கடந்த கால நிகழ்­வு­களில் இருந்து படிப்­பினை பெறு­வ­தற்குப் பதி­லாக மீண்டும் மக்­களை இன மத ரீதி­யாக பிரிப்­ப­தற்கு எடுக்கும் முயற்­சி­களை நாம் வெகு­வாகக் கண்­டிக்­கிறோம்.

இதே போன்று இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் இழி­வு­ப­டுத்­திய பௌத்த பிக்கு ஒரு­வரை முஸ்­லிம்­களின் சட்­டங்கள் சம்­பந்த­மாக ஆராய்ந்து சிபா­ரிசு செய்ய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி செய­லணிக் குழுவின் தலை­வ­ராக நிய­மித்­ததை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடி­யாது. இது பல் இன மக்கள் வாழும் இலங்­கையில் சிறு­பான்மை முஸ்­லிம்­களை ஒரங்­கட்ட எடுக்கும் அர­சியல் முயற்­சி­யா­னதால் இந்த ஜனா­தி­பதி செய­லணி நட­வ­டிக்­கை­களை கம்­பஹா மாவட்ட புத்தி ஜீவிகள் ஒன்­றியம் கண்­டிக்­கின்­றது.

நாட்­டிற்­காக அல்­லாமல் தமது சந்­தர்ப்­ப­வாத இருப்பு மற்றும் வளர்ச்­சிக்­காக எவ்­வா­றான விலை கொடுத்தும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தமது மீட்பர்கள் மூலம் பல்வேறு சமூகங்களுக்கிடையில் இனவாதத்தை தோற்றுவித்த அரசியல்வாதிகளை இந்நாட்டு மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளதை கம்பஹா மாவட்ட புத்திஜீவிகள் மன்றம் பாராட்டுகிறது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.