மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : கைது செய்யப்பட்டோரில் வழக்கு தொடரப்படாத 13 பேர் விடுவிப்பு

ஏழு பேருக்கு பிணை; பத்து பேர் குறித்து விசாரணை தொடர்கிறது

0 344

(எம்.எப்.எம்.பஸீர்)
மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­ப­டாத 13 பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

கடந்த மூன்று வரு­டங்கள் மற்றும் இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக இவர்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்­து­வந்த நிலை­யி­லேயே நேற்று மாவ­னெல்லை நீதிவான் தம்­மிக ஹேம­பால இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

அத்­துடன் மேலும் 7 பேரை பிணையில் விடு­விக்க நீதிவான் உத்­த­ர­விட்டார். சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய இந்த உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்த நீதிவான், விசா­ர­ணைகள் நிறை­வ­டை­யாத 10 பேரின் விளக்­க­ம­றியல் காலத்தை மட்டும் நீடித்து உத்­த­ர­விட்டார்.

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் 46 பேர் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டனர்.

அவர்­களில் 16 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக மட்டும் கேகாலை மேல் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்ள நிலையில் அவ்­வி­சா­ர­ணைகள் எதிர்­வரும் மே 18 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் கேகாலை மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான யகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­ப­டு­கி­றது. இந் நிலை­யி­லேயே, ஏனைய 30 பேர் குறித்த விட­யங்கள் மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றின் பொறுப்பில் உள்­ளது. அந்த விட­யங்­களே நேற்று விசா­ர­ணைக்கு வந்­தன. இந்த 30 சந்­தேக நபர்­களில் பலர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹை­ருடன் சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ் ஆஜ­ரானார். இந் நிலை­யி­லேயே சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய 10 பேர் விடு­விக்­கப்­பட்­டனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இதில் 46 பேர் கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர்­களில் 16 பேருக்கு எதி­ராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர் மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்­த­ரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பயங்க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.
இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.