காலி முகத்திடல் போராட்டத்தில் இஸ்லாமிய அடைப்படைவாதமா?

0 530

ஏ.ஆர்.ஏ.பரீல்

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ள­டங்­க­ளாக ஒட்டு மொத்த அர­சாங்­கத்­தையும் பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி கடந்த 9 ஆம் திகதி முதல் கொழும்பு காலி முகத்­தி­டலில் இடம் பெற்­று­வரும் போராட்டம் நாளுக்கு நாள் விரி­வ­டைந்தும் வீரி­ய­ம­டைந்தும் வரு­கி­றது.

அமை­தி­யான முறையில் இன, மத, அர­சியல் பேதங்­க­ளுக்கும் அப்பால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் இப்­போ­ராட்­டத்தை குழப்­பு­வ­தற்­கான முயற்­சிகள் திட்­ட­மி­டப்­பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக பாது­காக்­கப்­பட்­டுள்ள உரி­மை­களில் ஒன்­றான அமை­தி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­படும் மக்கள் போராட்­டங்­களை சட்­டத்­துக்குப் புறம்­பான வழி­மு­றை­களைப் பயன்­ப­டுத்தி அடக்­கு­வ­தென்­பது அடிப்­படை மனித உரிமை மீற­லாகும். இதனை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளது.

இது­வரை காலம் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆட்­சி­யா­ளர்கள் நாட்டை நிர்­வ­கித்து வந்­தமை நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு தடை­யாக இருந்­தது. நாடு இன்று பொரு­ளா­தார ரீதியில் வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ள நிலை­யிலும் இன­வாத குழுக்­களும், அமைப்­பு­களும் இன­வா­தி­களும் தொடர்ந்தும் நாட்டில், இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை­யினை உரு­வாக்க முயற்­சிப்­பது அபா­ய­க­ர­மா­ன­தாகும்.

போராட்­டத்தில் இஸ்­லா­மிய அடைப்­ப­டை­வா­தி­களா?
கடந்த காலங்­களில் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக வன்­செ­யல்­களைத் தூண்­டி­விட்டு குளிர்­காய்ந்த பொது­பல சேனா அமைப்பு மீண்டும் களத்தில் இறங்­கி­யுள்­ளமை மிகவும் பயங்­க­ர­மா­ன­தாகும். அளுத்­கம, திகன, கண்டி மற்றும் அம்­பாறை போன்ற பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் இருந்த இன­வாத பெளத்த அமைப்­பினை அனை­வரும் அறி­வார்கள்.

இந்­நி­லையில் காலி முகத்­தி­டலில் கடந்த 9 ஆம் திகதி முதல் இடம்­பெற்­று­வரும் மக்கள் போராட்­டங்­களை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத போராட்­ட­மாக பொது­ப­ல­சேனா அமைப்பு திசை திருப்­பு­வ­தற்கு முயன்று வரு­கி­றது. காலி முகத்­திடல் போராட்­டத்தில் முஸ்­லிம்­களும் பங்­கேற்று வரு­கி­றார்கள்.

எரி­வாயு, எரி­பொ­ருட்­க­ளுக்­கான தட்­டு­ப்பாடு, அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களின் விலையில் பாரிய அதி­க­ரிப்பு, மருந்­துப்­பொ­ருட்­களின் தட்­டுப்­பாடு, பால்­மா­வுக்­கான பற்­றாக்­குறை போன்­ற­வற்­றினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களே இப்­போ­ராட்­ட ­க­ளத்தில் இறங்­கி­யுள்­ளார்கள். இந்­நி­லையில் முஸ்­லிம்­களும் இப்­போ­ராட்­டத்தில் இணைந்து கொண்­டுள்­ள­மையை எவ­ராலும் எதிர்க்க முடி­யாது.

பொது­ப­ல­சேனா அமைப்பு காலி முகத்­திடல் மக்கள் போராட்டம் குறித்து ஊடக அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. இந்த எதிர்ப்பு போராட்­டத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே கள­மி­றங்­கி­யுள்­ள­தாக பொது­பல சேனாவின் ஊடக அறிக்கை தெரி­விக்­கி­றது.

முஸ்­லிம்கள் பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேரர் மற்றும் அனைத்து பெளத்த மகா­நா­யக்க தேரர்­களை குறி வைத்து எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­வதை போராட்ட களத்தில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது எனவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சியல் வேறு­பா­டு­க­ளின்றி இடம்­பெற்று வரும் இளைஞர் யுவ­தி­களின் போராட்­டத்தில் சந்­தர்ப்­ப­வாத மத அடிப்­ப­டை­வா­திகள், தீவி­ர­வா­திகள், மற்றும் நாட்டின் சிங்­கள பெளத்­தர்­களை எதிர்ப்­ப­வர்கள் தங்­க­ளது இலக்­கினை நிறை­வேற்­றிக்­கொள்­ள­வ­தற்கு போராட்­டக்­க­ளத்தை பயன்­ப­டுத்­து­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ள­தெ­னவும் பொது­ப­ல­சே­னாவில் ஊடக செய­லாளர் எரந்த கே நவ­ரத்ன அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

நாட்டை ஊழல் நிறைந்த அர­சியல்வாதி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கவே காலி முகத்­திடல் போராட்­டத்தில் முஸ்லிம்கள் ஏனைய மக்­க­ளுடன் இணைந்து போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். நாடு இன்­றுள்ள நிலையில் அதனைக் காப்­பாற்­று­வதே போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளோரின் இலக்­காக இருக்­கி­றது.

இந்­நி­லையில் சந்­தர்ப்­ப­வாத இன­வாத பெளத்த அமைப்பு தனது சுய­ந­லத்­துக்­காக இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் திட்­டத்தை நிறை­வேற்றும் வகையில் முஸ்­லிம்­களை அடிப்­ப­டை­வா­தி­க­ளாக முத்­திரை குத்­து­வது நாட்டை மீண்டும் பாதா­ளத்தில் தள்­ளி­வி­டு­வ­தற்கு சம­மாகும்.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை இந்­நாட்டில் பரப்­பு­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்து கொண்­டி­ருக்கும் சல­பி­வா­திகள், வஹாப்­வா­திகள், ஜமா அத்தே இஸ்­லா­மியின் கொள்­கை­வா­திகள் காலி முகத்­திடல் போராட்­டத்தில் கலந்து கொண்­டி­ருப்­பதை நாம் தற்­போது இனம் கண்­டுள்ளோம் எனவும் பொது­பல சேனாவின் ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்ட களத்தில் ஈடு­பட்­டுள்ள முஸ்­லிம்கள் ஏனைய மக்­க­ளுடன் இணைந்து அமை­தி­யான முறை­யிலே போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அவர்கள் அர­சாங்­கத்­துக்கும், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கும் எதி­ரா­க­வே­கோ­ஷ­மெ­ழுப்­பு­கின்­றனர். கோத்­தா­பய வீட்­டுக்குப் போ என்றே குர­லெ­ழுப்­பு­கின்­றனர். இவர்களை எப்­படி வஹாப்வாதி­க­ளாக சலப்­வா­தி­க­ளாக , ஜமாஅத்தே இஸ்­லா­மிய கொள்­கை­வா­தி­க­ளாக இனங் காண­மு­டியும். பொது­ப­ல­சே­னாவின் இவ்­வா­றான அறிக்­கைகள் நாட்­டினுள் மீண்டும் பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்கும். நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும்.

அர­சுக்­கெ­தி­ரான போராட்­டங்­களில் மக்­கள் இன, மத, அர­சியல் பேத­மின்றி ஒன்­று­பட்­டு­விட்­டனர். இன மத­வா­தத்தை தூண்டி குளிர்­காய்ந்­த­வர்­க­ளையும் அதி­கா­ரத்தில் இருந்­த­வர்­க­ளையும் மக்கள் இனங்­கண்­டு­விட்­டனர். தாம் இது­வரை காலம் இவர்­களால் ஏமாற்­றப்­பட்டு விட்­டதை உணர்ந்து விட்­டனர். இந்த மாற்­றத்தை சகிக்க முடி­யாத பொது­ப­ல­சேனா அமைப்பு மீண்டும் முருங்­கை­ம­ரத்தில் ஏறிக்­கொண்­டுள்­ளது.

ஒமல்பே சோபித தேரர்
அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நாட்டு மக்கள் ஒன்­றி­ணைந்து கடந்த 9 ஆம் திகதி முதல் காலி முகத்­தி­டலில் முன்­னெ­டுத்­து­வரும் போராட்டம் மதத்­தையோ,இனத்­தையோ முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­தான போராட்­ட­மல்ல என ஒமல்பே சோபித தேரர் தெரி­வித்­துள்ளார். கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

அவர் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்; ‘நாட்டின் எதிர்­கா­லத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி இனம், மதம் ஆகி­ய­வற்றைத் துறந்து நாட்டு மக்கள் ஒன்­றி­ணைந்து போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள வேளையில் பெளத்த தேரர்கள் என குறிப்­பிட்­டுக்­கொண்டு அர­சியல்வாதி­க­ளுக்கு சார்­பாக செயற்­படும் தரப்­பி­னர்கள் கடந்த வாரம் கொழும்பில் போலி­யான போராட்­டங்­களை நம்பி சிங்­கள, பெளத்த மக்­க­ளாணை மீது கை வைக்க வேண்டாம்’ என குறிப்­பிட்டுக் கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்­டமை முற்­றிலும் வெறுக்­கத்­தக்­க­தாகும். அவர்­களின் செயற்­பாடு பெளத்த அறக்­கொள்­கைக்கு முர­ணா­ன­தாகும்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ மீதும் அவர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் மீதும் நாட்டு மக்­க­ளுக்கு துளி­ய­ளவும் நம்­பிக்­கையோ, விருப்­பமோ கிடை­யாது. மக்­களின் அதி­ருப்­தியை பெற்­றுக்­கொண்டு சிறந்த அரச நிர்­வா­கத்தை முன்­னெ­டுக்க முடி­யாது என பெளத்த அறக் கொள்கை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. பெளத்த அறக் கொள்­கை­யினை அரச தலை­வர்கள் பின்­பற்­று­வார்­க­ளாயின் அவர்கள் எப்­போதோ பதவி வில­கி­யி­ருக்க வேண்டும். மக்­களின் அபி­லாஷை, மக்­க­ளா­ணைக்கு மதிப்­ப­ளித்து ஜனா­தி­பதி உட்­பட முழு அர­சாங்­கமும் பதவி விலக வேண்டும் என்றார்.

பொது­ப­ல­சேனா போன்ற இன­வாத அமைப்­பு­களே தொடர்ந்தும் இன­வாத கருத்­து­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக தற்­போது பெரும்­பான்மை சமூ­கத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கின்­றமை நாட்டில் இன ஒற்­று­மைக்கு ஓர் ஆரம்பம் எனலாம்.

கடும்­போக்கு நிலையம் (Radical Centre)
‘‘இன­வாத சக்­திகள் மக்கள் போராட்­டத்தை குழப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன. மக்கள் புரட்­சியை அடக்­கு­வ­தற்கு இன­வாதம் மற்றும் மத­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் சக்­திகள் மீண்டும் உயிர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளது முயற்­சி­களை மக்கள் போராட்டம் தோற்­க­டித்­துள்­ளது‘‘ என கடும் போக்கு நிலையம் தெரி­வித்­துள்­ளது. கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கடும்­போக்கு நிலை­யத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஹரேந்­திரன் கிருஷ்­ண­சாமி இவ்­வாறு தெரி­வித்தார்.

இவ் ஊடக மாநாட்டில் கடும்­போக்கு நிலை­யத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கேசால் ஜய­சிங்க, ஜயனி அபே சேகர ஆகி­யோரும் கருத்து வெளி­யிட்­டார்கள்.

இன­வாதம், மத­வாதம் பலாத்­கா­ர­மாக பொது­மக்கள் மீது ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக திணிக்­கப்­பட்­டது. இது அர­சியல் வாதி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மாகும். இன்று மக்­களால் அத்­திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மக்கள் போராட்­டத்தை சுய­நலம் கரு­திய பொது­பல சேனா அமைப்பு அடிப்­ப­டை­வா­தி­களின் செயற்­பாடு என பிர­சாரம் செய்­கி­றது. இதனை மக்கள் நம்­ப­மாட்­டார்கள்.
‘பொது­ப­ல­சே­னாவில் இப்­போது சூழ்ச்­சிக்­கா­ரர்கள் இல்லை’ என அவ்­வ­மைப்பின் ஊடக செய­லாளர் எரந்த கே நவ­ரத்ன முக­நூலில் பதி­விட்­டுள்ளார். இந்­தப்­ப­திவின் மூலம் ஏற்­க­னவே பொது­ப­ல­சே­னாவில் சூழ்ச்சிக்காரர்கள் இருந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. எரந்த கே நவரத்ன ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுள்ளவர்கள்
இந்­நாட்டில் நூற்­றாண்டு கால­மாக வாழ்ந்­து­வரும் முஸ்­லிம்கள் நாட்டுப் பற்­றுள்­ள­வர்கள். இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்­காக போராடி பங்­க­ளிப்புச் செய்­த­வர்கள்.
தங்­க­ளுக்­கென்று தனி­நாடு கோரா­த­வர்கள் இந்­நி­லையில் அண்­மைக்­கா­ல­மாக அவர்கள் இலக்கு வைக்­கப்­பட்டு வரு­கி­றார்கள்.

முஸ்­லிம்கள் ஆண்­டாண்டு கால­மாக அனு­ப­வித்து வந்த உரி­மை­க­ளுக்கு சவால்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றைப்­ப­றிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அர­சுக்­கெ­தி­ரான மக்கள் போராட்­டங்­க­ளிலும் இன­வா­தி­களால் முஸ்­லிம்கள் சந்­தேகக் கண்­கொண்டே நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.

என்­றாலும் மக்கள் மத்­தியில் தற்­போது மாற்­றங்கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. பெரும்­பான்மை மக்கள் இன,மத­வா­தி­களைப் புறக்­க­ணித்து வரு­கி­றார்கள். அவர்­க­ளுக்­கெ­தி­ராக குர­லெ­ழுப்­பு­கி­றார்கள். நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு, நல்­லி­ணக்கம் வளர்­வ­தற்கு நாம் பிரார்த்திப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.