மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?

0 610

கலாநிதி எம்.சி. ரஸ்மின்

மார்ச் 31ஆம் திகதி தொடங்­கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயா­தீ­ன­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. மக்­களின் ஏகோ­பித்த சுய எழுச்­சி­யாக அமைந்த, வன்­மு­றை­யற்ற இப்­போ­ராட்டம் புதிய ஒரு குடி­யு­ரிமைக் கலா­சா­ரத்தை தோற்­று­வித்­துள்­ளது. மேல்­வர்க்க மக்­களின் அன்­றாட வாழ்க்கை பாதிக்­கப்­படும் வரை இவ்­வா­றான ஒன்று சாத்­தி­யப்­ப­ட­வில்லை. பேரா­சி­ரியர் ஜய­தேவ உயன்­கொட குறிப்­பி­டு­வது போன்று, இரண்­டு­வா­ரங்­க­ளாக இடம்­பெறும் இப்­போ­ராட்டம் ‘மக்கள் வளா­கம்’­ஒன்றை தோற்­று­வித்­துள்­ளது.

ஆயி­ரக்­க­ணக்­கான இளைஞர் யுவ­தி­களும் பொது­மக்­களும் இனிமேல் இன­வாதம் எடு­ப­டாது என்ற ஒரு சுலோ­கத்தை முன்­வைக்­கின்­றனர். இது ஒரு நல்ல சுலோகம் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. இந்த அர­சாங்கம் இன­வாதம், சம­ய­வாதம், பெரும்­பான்மை சிறு­பான்மை பாகு­பாடு என்­ப­ன­வற்றை முன்­னி­றுத்தி மக்­களை துண்­டா­டி­விட்­ட­து­என்றும் மக்கள் ஏமாந்து விட்­டார்கள் என்றும் ஆத்­தி­ரத்­துடன் பேசப்­ப­டு­கின்­றது.

இப்­போது சமூ­கங்­களை பிரித்­தாளும் அர­சாங்­கத்தின் சூழ்ச்சி புரிந்­து­விட்­டது. முஸ்லிம் மக்கள் எமது உடன்­பி­றப்­புகள் இந்த நாட்டில் அவர்­க­ளுக்கும் அநீதி இழைக்­கப்­பட்­டு­விட்­டது. அவர்­களும் இந்­நாட்டில் வாழும் சம உரிமை உள்ள பிர­ஜைகள் என்­றெல்லாம் அதி­க­மான பெரும்­பான்­மை­யினர் பேசு­வ­தையும் பர­வ­லாகக் காண­மு­டி­கின்­றது.

உணவுப் பண்­டங்கள் பரி­மா­றப்­பட்­டன. பிக்கு ஒரு­வ­ருக்கு மழை படாமல் கவ­சங்­களை தலைமேல் பிடித்து உப­சாரம் செய்த முஸ்லிம் பெண்ணின் படம் சமூக வலைத்­த­ளங்­களில் சிலா­கித்துப் பேசப்­பட்­டது. சகல இனங்­களைச் சேர்ந்­த­வர்­களும் இணைந்து புகைப்­படம் எடுத்து சமத்­து­வத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதனை ஒரு புதிய மாற்றம் என்றே கரு­து­வதில் தவ­றில்லை.

என்­னு­டைய ஒரு மாண­வ­ரையும் சமத்­து­வத்தை வெளிப்­ப­டுத்தும் பலர் மத்­தியில் ஒரு­வ­ராகக் கண்டேன். அவர் சுமார் ஒரு­வ­ருட காலம் வரை மக்கள் அர­சாங்கச் செயற்­பாடு ஒன்றில் என்­னோடு கலந்து கொண்டு கட­மை­யாற்­றி­யவர். தென் மாகா­ணத்தைச் சேர்ந்­தவர். ஒரு நல்ல கலைஞன். இளைஞர். நூற்­றுக்­க­ணக்­கான இளம் சிங்­கள மாண­வர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டவர். முஸ்லிம் மக்கள் மீது தான் கொண்­டி­ருந்த காழ்ப்­பு­ணர்வை நினைத்து பல சந்­தர்ப்­பங்­களில் மனம் உரு­கினார். கண் கலங்கி அழுதும் உள்ளார். சக முஸ்லிம் இளைஞர் யுவ­தி­களைப் பார்த்து இவர்கள் என் உற­வி­னர்கள் என்று மனம் வருந்திக் கூறி­யவர். மிகுந்த தலை­மைத்­துவ ஆளுமை கொண்­டவர். ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்னர் முற்­று­மு­ழு­தாக மாறி­விட்டார். தேசா­பி­மா­னி­யாக மாறிய அவர் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் முஸ்­லிம்­களை எதிர்த்து எழு­தினார்.

முஸ்­லிம்கள் பெரும்­பா­லா­ன­வர்கள் இன­வா­திகள் என எழு­தினார். யார் மத்­தியில் தனது தப்­பான காழ்ப்­பு­ணர்வை நினைத்து மனம் வருந்­தி­னாரோ அவர்கள் இருக்­கின்ற சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தேசா­பி­மானக் கவி­தை­களை எழுதிக் கொட்­டினார். ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால் முஸ்­லிம்கள் போராட்­டத்­திற்கு வழங்கும் பங்­க­ளிப்பை அதிகம் பாராட்டி இப்­போது சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் எழு­து­ப­வர்­களுள் இவர் முதன்­மை­யா­னவர். இது ஒரு உதா­ரணம் மாத்­தி­ரமே. இது­போன்று பல சம்­ப­வங்­களை பட்­டி­ய­லிட்டுச் சொல்ல முடியும். இன்று சிலா­கித்து எழுதும் பலர் ஒரு காலத்தில் ராஜ­பக்ச அர­சாங்­கத்தை வலுப்­ப­டுத்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்­தி­ய­வர்­களே.எனவே இந்த மாற்­றத்தை சுய­வா­சிப்பின்,தர்க்க ரீதி­யான பரி­தலின், கற்­றலின், உரை­யா­டலின் பேறாக ஏற்­பட்­டது எனக் கொள்ள முடி­யா­துள்­ளது.

சமூக வலைத்­த­ளங்­களில் முஸ்­லிம்கள் அதிகம் சிலா­கித்துப் பேசப்­ப­டு­வ­தாலும் நூற்­றுக்­க­ணக்­கான சிங்­கள இளை­ஞர்கள் இன, மத, பெரும்­பான்மை சிறு­பான்மை பேதங்­களை எதிர்த்துப் பேசு­வ­தாலும், இனிமேல் இன­வாதம் மேல் கிழம்­பாது – வலு­வி­ழந்து விட்­டது என்ற முடி­வுக்கு வர­மு­டி­யுமா? இன­வா­தத்­திற்கு இனிமேல் இட­மில்லை எனக் கரு­து­வது யதார்த்­த­மா­னதா? அல்­லது அதனை எவ்­வாறு புரிந்து கொள்­வது?

பிர­தமர் மகிந்த ராஜ­பக்­சவும் ஜனா­தி­பதி கோட்­டாவும் இன­வா­தத்தை ஏற்­ப­டுத்தி ஆட்­சியைக் கைப்­பற்­றி­னார்கள் என்ற பொது அபிப்­பி­ராயம் பர­வ­லாகப் பேசப்­ப­டு­வ­துண்டு. சிலர் இன­வா­தத்தைப் பயன்­ப­டுத்தி ராஜ­பக்ச குடும்பம் சிங்­கள மக்­களை ஏமாற்றி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களைத் தூண்­டி­விட்டு ஆட்­சி­பீடம் ஏறி­யது என அடித்­துச்­சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதில் எதுவும் பொய்­யில்லை.
ஆனால், இலங்கை அர­சி­யலை ஆட்­டிப்­ப­டைக்கும் இன­வாதம் பற்றி முஸ்­லிம்கள் புரிந்­து­கொள்ள வேண்­டிய முழு­மை­யன உண்மை இது மட்டும் அல்ல.

அடிப்­ப­டையில், இன­வாதம் என்­பது சிங்­கள முஸ்லிம் மக்­களின் தெரி­வல்ல. மாறாக, இலங்கை அர­சி­யலை இயக்க வைக்கும் பிர­தான உபாய சத்­தி­யா­கவே இன­வாதம் காலந்­தோறும் இருந்து வந்­துள்­ளது. இதன் பூர்­வீ­கத்தை தேடிப் பார்ப்­பது இங்கு அவ­சி­யப்­ப­டாது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்­கள சட்­ட­மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை ஒரு பிர­தான மைற்­கல்­லாகக் கொண்டால், அதனைத் தொடர்ந்து ஆட்­சி­பீடம் ஏறிய சகல அர­சாங்­கங்­களும் இன­வா­தத்தை ஒரு பிர­தான ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.
ராஜ­பக்ச அர­சாங்கம் மாத்­திரம் இன­வாதம் கொண்­டது, ஐக்­கிய தேசிய கட்­சியோ அல்­லது சஜித் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்போ மித­வாத- நடு­நி­லைப போக்கு கொண்­டது என்று எந்த வகை­யிலும் கருத முடி­யாது. இன­வா­தத்தை போசித்து வளர்ப்­ப­வர்கள் இரண்டு முகாம்­க­ளிலும் நிறைந்­துள்­ளார்கள். சஜித், ராஜித, ஜெனரல் சரத்­பொன்­சேகா, சம்­பிக்க போன்­ற­வர்கள் பல்­லின சமூக ஒற்­று­மையை நேசிக்கும் திட­மான அர­சியல் தலை­வர்கள் என்ற சான்­றுப்­பத்­தி­ரத்தை யாரும் வழங்க முடி­யாது. ராஜ­பக்ச குடும்பம் இன­வா­தத்தை வெளிப்­ப­டை­யாக ஆத­ரித்து அனு­ச­ரணை வழங்­கு­கின்­றது, ஆனால், ஏனை­ய­வர்கள் தேவை ஏற்­படும் போது அதனை கையில் எடுக்கும் தகு­தி­யுள்­ள­வர்­களே.
இலங்கை அர­சி­யலில் இன­வாதம் என்­பது பிரித்து வைக்க முடி­யாத ஒரு நியதி. யாரும் இதனைக் கையில் எடுக்க முடியும். யார் இதனைக் கையி­லெ­டுத்­தாலும் அது செயற்­படும். யார் இதனைக் கையில் எடுத்­தாலும் முஸ்­லிம்கள் எல்லா வகை­யிலும் இதன் இலக்­காக முடியும்.

அர­சி­யல்­வா­தி­களின் கைக்­கூ­லி­க­ளாக இயங்கி வந்த இன­வாத ஏஜண்­டுகள் இன்­னமும் இருக்­கி­றார்கள். பொது வெளியில் அதி­க­மா­ன­வர்கள் பேசும்­போது அவர்கள் மௌன­மாக இருக்­கின்­றார்கள். சமூக நல்­லி­ணக்­கத்தை எத்­தனை இலட்சம் மக்கள் ஆத­ரித்து பேசி­னாலும் ஒரு சில இன­வாத ஏஜண்­டுகள் குறிப்­பாக ஞான­சார தேரர் போன்­ற­வர்கள் மிக இல­கு­வாக அத்­த­கைய ஆத­ரவை நலி­வ­டையச் செய்யும் ஆற்றல் கொண்­ட­வர்கள்.

இப்­போ­தைய நிலையில் இன­வா­தத்தின் கழுத்து நசுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அதன் தீய சக்­தியை ஒரு போதும் குறைத்து மதிப்­பிட முடி­யாது. தேவை­யான போது இது மேல் கிளம்பும். இன­வா­தத்தை தூண்டி விடும் அதி சக்­தி­வாய்ந்த ஊட­கங்கள் ஒவ்­வொரு நிமி­டமும் தமக்­கான வாய்ப்பு வரும்­வரை காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. எனவே, இன­வாதம் இனிமேல் ஏற்­ப­டாது என்று பெரு­மிதம் கொள்ள வேண்­டி­ய­தில்லை.

சமய கிரி­யை­களை காட்­சிப்­ப­டுத்தல்
போராட்­டத்தில் கலந்து கொள்ளும் முஸ்­லிம்­களின் வெளிப்­பா­டுகள் தொடர்பில் மிகவும் கார­சா­ர­மான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவை அசட்டை செய்­யப்­ப­ட­மு­டி­யா­தவை. கருத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­யவை. எவ்­வா­றா­யினும் போராட்­டத்தில் கலந்து கொள்ளும் முஸ்­லிம்கள் ஓர் ஊரில், ஒரு பாட­சா­லையில், ஒரே மத்­ர­சா­வி­லி­ருந்து வரும் ஒத்த தன்­மையும் கொண்­ட­வர்கள் அல்லர். இவர்கள் தன்­மையில், அனு­ப­வத்தில், அறிவில், வித்­தி­யா­ச­முள்­ள­வர்கள். யாரு­டைய புத்­தி­சா­லித்­து­வ­மான, சமூக வரை­வி­லக்­க­ணத்­திலும் அகப்­ப­டா­த­வர்கள். இன­வா­தத்தின் அடக்கு முறையை வித்­தி­யா­ச­மாக அதே­நேரம் தனித்­த­னி­யாக சந்­தித்த அனு­பவம் கொண்­ட­வர்கள். குறிப்­பாக இரண்டு பிர­தான முஸ்லிம் அர­சியல் அணி­யி­னாலும் ஏமாற்­றப்­பட்­ட­வர்கள். முஸ்லிம் சமய, அர­சியல் பிர­தான பீடங்­களின் சுய­ந­லத்தால், இய­லா­மையால், போதா­மையால் சிதறிப் போன­வர்கள்.
ஈஸ்டர் தாக்­கு­தலைத் தொடர்ந்து நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் நீதி வேண்டித் தவித்­த­போது முஸ்­லிம்­களின் பெயரால் இயங்­கு­கின்ற எந்­த­வொரு கட்­சி­யாலும், இயக்­கத்­தாலும் நியாயம் பெற்­றுக்­கொள்­ளா­த­வர்கள். தமது குடி­யு­ரி­மையை சுதந்­தி­ர­மாக வெளிப்­ப­டுத்தும் ஆர்வம் இருந்தும் அதற்­காக அவ­காசம் கிடைக்­கா­த­வர்கள். சுருக்­க­மாகச் சொல்­வ­தாக இருந்தால் ஒரு உயர்­மட்டத் தலை­மைத்­து­வத்­திலும் நம்­பிக்கை இழந்­த­வர்கள்.

இந்த நிலையில் கூச்­சல்­போட்டு அதான் சொல்­வ­தையோ, சமயக் கிரி­யை­களை காட்­சிக்கு விடு­வ­தையோ, தொழுகை நடத்­து­வ­தையோ, பதா­தை­களை ஏந்தி சத்­த­மிட்டு ஆத்­தி­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தையோ, இப்தார் செய்­வ­தையோ ஒரு பெரிய விட­ய­மாக அவர்கள் எடுத்­துக்­கொள்­ள­வேண்டும் என நினைக்க முடி­யாது.

இன­வா­தத்தை எதிர்த்து பகி­ரங்­க­மாகப் பேசக்­கூ­டாது, குடி­யு­ரி­மைக்கு உரிய பொது­வான கட­மை­க­ளுக்கு முன்­செல்­லக்­கூ­டாது, பொறு­மை­யாக இருக்­க­வேண்டும், அல்­லாஹ்வின் உதவி வரும்­வரை அவ­னிடம் பொறுப்புச் சாட்­டி­விட்டு சும்மா இருந்தால் போதும் என்­பன போன்ற உப­தே­சங்­களை கேட்டே குரல் இல்­லா­மல்­தேய்ந்து போன­வர்கள். இத்­த­கைய இன்னும் பல கார­ணங்­களால் அவர்கள் போராட்­டத்தை ஒரு வாய்ப்­பாக எடுத்­துக்­கொண்­டனர்.

எவ்­வா­றா­யினும் மக்கள் போராட்­டத்தில் முஸ்­லிம்கள் கலந்து கொள்­ள­வேண்­டி­யது கட்­டாயம். அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார அடக்கு முறையை திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­பட்ட நெருக்­கடி நிலையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்­டி­யது கடமை. பிர­ஜைகள் என்ற வகையில் நாடு ஒரு பேரா­பத்தை எதிர்­கொண்­டி­ருக்கும் சந்­தர்ப்­பத்தில் சக பிர­ஜை­க­ளுடன் கூட நிற்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது. அதில் எமது சமயக் கிரி­யைகள் இயல்­பாக நடந்­து­விட்­டுப்­போ­கட்டும். அதனை திட்­ட­மிட்டு அலங்­க­ரித்து, சோட­னை­பண்ணி, காட்­சிப்­ப­டுத்தும் போது, அது முன்­னர்­கு­றிப்­பிட்ட சந்­தர்ப்­ப­வாத இன­வாத சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பாக மாறி­வி­ட­மு­டியும். முஸ்­லிம்கள் இதற்­காக கூனிக்­கு­றுகி தமது சம­யக்­க­ட­மை­களை பின்­ன­டிக்­கவோ, மறைத்து நடத்­தவோ, தவிர்த்துக் கொள்­ளவோ அவ­சி­ய­மில்லை. தமது சமயக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய உரிமை முஸ்­லிம்­க­ளுக்கு உண்டு. அதே­போன்று அவற்றை சகித்­துக்­கொள்ள வேண்­டிய பக்­கு­வமும் கடப்­பாடும் ஏனை­ய­வர்­க­ளுக்கு இருக்க வேண்டும். ஆனால் காலி முகத்­தி­ட­லுக்கோ வேறு ஒரு இடத்­துக்கோ முஸ்­லிம்கள் வந்­தி­ருப்­பது ஒரு சமூக அர­சியல் கடப்­பாட்டை முன்­னி­றுத்தி என்­பதை மறந்து விட­மு­டி­யாது.

மெல்ல மேலெ­ழும்பும் இன­வாதம்
ஜனா­தி­ப­தியின் மிரி­ஹான வீடு முற்­று­கை­யி­டப்­பட்­டதைத் தொடர்ந்து ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு வெளி­யிட்ட அறிக்கை இன­வா­தத்­திற்­கான முதல் சக்­தி­மாத்­தி­ரை­யாக அமைந்­தி­ருந்­தது. ஒரு குறி­யீட்­டுக்­காக அரபு வசந்­தத்­துடன் தொடர்­பு­ப­டுத்தி மக்கள் எதிர்ப்பை அவர்கள் விளக்க முற்­பட்­டி­ருந்­தாலும் அது ஒரு அதிர்வை ஏற்­ப­டுத்தி விட்­டது. இன­வாத ஊட­கங்கள் சில அதன் உள்­ளர்த்தம் புரி­யா­த­வாறு ஒப்­பு­வித்­தன. படித்­த­வர்கள் மத்­தியில் இதற்­கான எதிர்ப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் இதனை பொது மக்கள் எவ்­வாறு எடுத்துக் கொண்­டார்கள் என்­பதை துல்­லி­ய­மா­கக்­கூற முடி­யாது.

கடந்த வாரம் பிர­த­ம­மந்­திரி மஹிந்த ராஜ­பக்­சவின் உரையைத் தொடர்ந்து சிலர் பகி­ரங்­க­மா­கவே இன­வா­தத்தை கையி­லெ­டுக்க முயற்­சித்­தனர். அவ­ரது செய்தி காத்­தி­ர­மான எந்த உள்­ள­டக்­கத்­தையும் கொண்­டி­ருக்­க­வில்லை. மாறாக, பழைய வன்­மு­றையை நினை­வு­ப­டுத்­தி­யது. இதனைத் தொடர்ந்து,களனிப் பிர­தே­சத்தைச் சேர்ந்த சிலர் – இன­வாத ஏஜன்­டு­களில் அடுத்த பிர­தா­னி­யான டான் பிரசாத் போன்றோர் முஸ்­லிம்கள் தமது வேலையைப் பார்த்துக் கொண்­டி­ருக்க வேண்டும் என்றும் பகி­ரங்க வணக்­கங்­களில் ஈடு­பட்டு இழி­வு­பட வேண்டாம் என்றும் அச்­சு­றுத்­திப்­பே­சிய காணொ­லிகள் சமூக ஊட­கங்­களில் அதிகம் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன. இவை வழமையான ஆதரவைப் பெறவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் சஹ்ரான் குழு­வினர் வெளி­யிட்ட காணொளி ஒன்றை அர­சாங்கம் அண்­மை­யில்­வெ­ளி­யிட்­டுள்­ளது. இது­வரை இந்த வீடியோ சிங்­கள மக்­க­ளி­ட­மி­ருந்து பாரிய ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒவ்­வொரு துரும்­பு­க­ளையும் அவ்­வப்­போது பாவித்துப் பார்க்கின்றனர்.

எவ்வாறாயினும் – அதிகமானவர்கள் பேசிக்கொண்டிருப்பதால் இனவாதம் மௌனமாக இருக்கின்றது. அரசாங்கத்தின் மீதான அதீத எதிர்ப்பு முஸ்லிம்கள் தொடர்பான அபிப்பிராயத்தில் சிறு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனவாதம் ஒழிந்து போகவும் இல்லை, அவ்வாறு முற்றாக ஒழிந்து போகவும் மாட்டாது. நீறுபூத்த தணல்போல மறைந்து கிடக்கும் இனவாதம் சற்று ஊதினால் இலகுவில் வெளியே வரும். எனவே, மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு முஸ்லிமும் தமது செயற்பாட்டின் எல்லையை புரிந்து செயற்படுவது கட்டாயம். தேசிய சூராசபை இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகள் காத்திரமானவை. அவற்றை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது சிறந்தது.

வன்முறையற்ற போராட்டம் வன்முறையை நோக்கி நகவர்வதற்கு பெரிதாக எதனையும் செய்ய வேண்டியதில்லை. ஏதாவது ஒரு இடத்தில் சற்றுச் சீண்டிப் பார்த்தாலே போதும், வன்முறை தானாக கட்டறுந்து போகும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு நடப்பது சகலரதும் கடமையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.