(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.அவர் இளைஞர் விவகாரம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழுள்ள மனிதவள மற்றும் தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பி.எம்.அஷ்ரப் கடந்த வாரம் தனது பதவியினைப் பொறுப்பேற்று கடமையில் ஈடுபட்டார். இந்தப் பதவி உயர்வு 2021.07.01ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.கடந்த ஜனவரி 11ஆம் திகதி இவருக்கு பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமைச்சின் கீழுள்ள தேசிய திட்டமிடல் திணைக்களத்தில் மேலதிகப் பணிப்பாளராக நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்நியமனம் இரத்துச் செய்யப்பட்டு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றிய அஷ்ரப் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தலைமைத்துவ மேம்பாட்டுக்கான மையத்தின் பணிப்பாளராக பதவி வகித்த காலத்தில் அவரது முயற்சியால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் 153 பேர் இப்பயிற்சியைப் பூர்த்தி செய்தனர்.
அத்தோடு தற்போது ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் 225 பேருக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.- Vidivelli