வனாத்துவில்லு வெடிபொருட்கள் களஞ்சிய விவகாரம்: மே 20 இல் பிணை தொடர்பான உத்தரவு

வழக்குக்கு முன்னரான ஒன்றுகூடலுக்கு திகதி குறிப்பு

0 334

(எம்.எப்.எம்.பஸீர்)
புத்­தளம் – வனாத்­து­வில்லு, லக்டோஸ் தோட்­டத்தில், வெடி­பொ­ருட்­களை சேக­ரித்து களஞ்­சி­யப்­ப­டுத்தும் மற்றும் உற்­பத்தி செய்யும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் தடை செய்­யப்­பட்ட அமைப்பின் முக்­கி­யஸ்­த­ரான நெளபர் மெள­லவி உள்­ளிட்ட 6 பேருக்கு எதி­ராக சட்ட மா அதிபர் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்த வழக்கில் பிர­தி­வா­தி­களின் பிணை கோரிக்கை தொடர்­பி­லான நீதி­மன்ற உத்­த­ரவு எதிர்­வரும் மே 20 இல் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த விவ­கார வழக்கு விசா­ர­ணைகள், கடந்த திங்­க­ளன்று ( 4) இவ்­வ­ழக்­கினை விசா­ரணை செய்­ய­வென புத்­தளம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில், விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போதே இதற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. அத்­துடன் தொடர்ச்­சி­யாக இவ்­வ­ழக்­கினை விசா­ரணை செய்ய ஏற்­க­னவே திக­தி­களைக் குறித்­துள்ள சிறப்பு நீதி­மன்றம், மே 30,31 ஆம் திக­தி­க­ளிலும், ஜூன் 1,7,9 ஆம் திக­தி­க­ளிலும் அவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது என தீர்­மா­னித்து இதற்­காக 9, 11 முதல் 15 வரை­யி­லான சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு சாட்­சியம் வழங்க மன்றில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வித்­தலும் முதற்­கட்­ட­மாக அனுப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறான நிலையில் எதிர்­வரும் மே 20 ஆம் திகதி பிணை உத்­த­ர­வுக்கு மேல­தி­க­மாக, ‘வழக்கு விசா­ர­ணைக்கு முன்­ன­ரான ஒன்­று­கூ­ட­லுக்­கான’ ( pre trial conference) திக­தி­யா­கவும் நீதி­மன்றம் தீர்­ம­னித்­துள்­ளது.

இவ்­வ­ழக்கில், மர­ண­ம­டைந்­துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்­மது அஹ­மது ஹஸ்தூன் ஆகி­யோ­ருடன் இணைந்து, வனாத்­து­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்கும் மற்றும் தயா­ரிக்கும் இட­மொன்­றினை முன்­னெ­டுத்து சென்­ற­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 6 பேருக்கும் எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்­லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்­படும் மொஹம்மட் இப்­ராஹீம் சாதிக் அப்­துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெள­லவி அல்­லது மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்­படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெள­லவி ஆகிய 6 பேருக்கே மேற்­படி குற்றப் பகிர்வுப் பத்­திரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நாச­கார அல்­லது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் எண்­ணத்­துடன் வனாத்­து­வில்லு பகு­தியில் வெடி­பொ­ருட்­களை சேக­ரிக்க சதி செய்­தமை, யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்­டாக்கள் உள்­ளிட்ட வெடி­பொ­ருட்­களை சேக­ரித்­தமை, வெடி­பொ­ருட்­களை உற்­பத்தி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக விஷேட குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வெடி­பொருள் சேக­ரிப்பு, தயா­ரிப்பு, ஆயுத பயிற்சி உள்­ளிட்­ட­வற்­றுக்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் அனைத்து பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ராக குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, முதல் பிர­தி­வா­தி­யான அபூ தஹ்தா எனப்­படும் மொஹம்மட் முபீஸ் மீது, பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளித்­தலை தடுக்கும் சர்­வ­தேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய வனாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.