அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்?

0 617

அரசின் பணி­யா­னது அடிப்­ப­டையில் உல­கா­யத நோக்கு கொண்­ட­தாகும். நாட்­டிற்குத் தேவை­யான கொள்­கை­களை வகுத்­தலும் நடை­முறைப்படுத்­தலும், மக்­களின் உல­கா­யத தேவை­க­ளான நல்ல கல்வி, சுகா­தாரம், பொரு­ளா­தாரப் பாது­காப்பு, சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மாக மதிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்தல் என்­பன ஓர் அரசின் கட­மை­யாகும். நிகழ்­கால சூழ்­நி­லை­களை கருத்­தி­லெ­டுத்து இவை தொடர்­பாக தர்க்­க­ரீ­தி­யான தீர்­மா­னங்­களை அரசு மேற்­கொள்ளும்.

மதங்­களின் பணி இதி­லி­ருந்து முற்­றிலும் வேறு­பட்­டது. பிர­ப­ல­மான மதங்­களின் நம்­பிக்கை வழி­பா­டுகள் அனைத்தும் விசு­வா­சித்­த­லையும் பின்­பற்­று­த­லையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே கட்­டி­யெ­ழுப்பப்பட்­டுள்­ளன. அங்கு பகுத்­த­றிவு சார்ந்த சிந்­த­னைக்கு மிகவும் குறை­வான இடமே வழங்­கப்­ப­டு­கி­றது. மதத்தின் அடிப்­படைத் தத்­து­வங்­க­ளூ­டாக மிகவும் முன்­னேற்­ற­மான அர­சாட்சி மாதி­ரி­யொன்றை உரு­வாக்கத் தேவை­யான அடிப்­ப­டை­களை வகுத்துக் கொள்ள முடியும் என்­பது உண்­மையே. ஆயினும் இன்­றைய நிறு­வ­ன­ம­யப்­பட்ட மதங்கள் அவற்றின் அடிப்­படை சிந்­த­னை­களில் இருந்து விலகி அம் மத நிறு­வ­னங்­களின் இருப்பு, நிறு­வன உறுப்­பி­னர்­களின் நலன்கள் மற்றும் அவற்­றுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­களின் நலன்­களை பாது­காப்­தற்­கா­கவே இயங்­கு­கின்­றன. மேலும், அர­சியல் அதி­கா­ரத்தை பெறு­வதும் பொரு­ளா­தார வளங்­களை அடைந்து கொள்­வதும் இம் மத நிறு­வ­னங்­களின் முதன்மை இலக்­கு­க­ளாக மாறி­யுள்­ளன. எனவே, இந்த பத்­தியின் நோக்கம் நிறு­வ­ன­ம­ய­மாக்­கப்­பட்ட மதங்­களின் அர­சியல் பற்றி கலந்­து­ரை­யாடல் செய்­வதே அன்றி, அவ் மதங்­களின் அடிப்­படை நம்­பிக்கை கோட்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தல்ல.

நிறு­வ­ன­மய மதங்­களில் மதத் துற­வி­களும் மதத் தலை­வர்­களும் பகுத்­த­றி­வு­ட­னான பின்­பற்­றலை விட விசு­வா­சத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டதோர் பின்­பற்­றலை வளர்க்­கவே தங்கள் பக்­தர்­க­ளுக்கு வழி­காட்­டு­கி­றார்கள். உதா­ர­ண­மாக, மறு­பி­றப்பு, கர்ம பலன், விதி பற்­றிய நம்­பிக்கை, சொர்க்கம், நரகம், கடவுள் பற்­றிய விசு­வாசம் ஆகிய அனைத்தும் மனி­தனின் நம்­பிக்­கை­யுடன் தொடர்­பான விட­யங்­க­ளாகும்.
எனவே, பக்­தர்கள் தங்கள் மதத் துற­விகள் மற்றும் மதத் தலை­வர்கள் சொல்­வதை எவ்­வித மறுப்­பு­மின்றி மிகுந்த மரி­யா­தை­யு­டனும் பக்­தி­யு­டனும் நம்பி பின்­பற்­று­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் மதத் தலை­வர்கள் அர­சி­யலில் தலை­யி­டு­வதால், நன்கு சிந்­தித்து, கவ­ன­மாக தர்க்­க­ரீ­தி­யான முடி­வு­களை எடுக்க வேண்­டிய ஜனா­தி­பதித் தேர்தல் அல்­லது பொதுத் தேர்தல் போன்ற சந்­தர்ப்­பங்­களில் இது­போன்ற நம்­பிக்­கை­களை வளர்ப்­ப­வர்­களால் பொது­மக்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­வது தான் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் மிகப் பெரும் ஆபத்­தாக உள்­ளது.

இந்­நி­லைமை இலங்கை அர­சியல் சூழ­லுக்கு மிகவும் பொருந்­து­கிற ஒன்­றாக உள்­ளது. ஒவ்­வொரு முறை தேர்தல் நடை­பெறும் போதும் சமய நம்­பிக்கை கொண்ட மக்­களின் வாக்­கு­களை கவ­ரு­வ­தற்­கா­கவே பௌத்த பிக்­கு­களை முன்­நிலைப் படுத்­து­கின்­றனர். இவர்கள் நாட்­டிலே பௌத்த மதத்­திற்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும், எனவே பௌத்­தத்தை காப்­பாற்ற தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்டும் எனவும் பல்­வேறு வகையில் மக்­களை தூண்­டு­கின்­றனர். இலங்­கையின் சனத்­தொ­கையில் பெரும்­ப­குதி பௌத்­தர்­க­ளாக இருப்­பதால், இவ்­வா­றான பிர­சா­ரங்கள் மூலம் ஓர் பெளத்த வேட்­பாளர் இல­கு­வாக பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற முடி­கி­றது.

ஆனால் மக்­களின் உண்­மை­யான பிரச்­சனை பௌத்த மதத்தை பாது­காப்­பது அல்ல. தங்கள் பிள்­ளை­க­ளுக்கு நல்ல கல்­வியைப் பெற்­றுக்­கொ­டுப்­பது, சிறு­நீ­ரக நோய்க்கு சிகிச்சை பெறு­வது, பொரு­ளா­தாரப் பாது­காப்பு, முதுமைக் காலத்தில் அவர்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்­வ­தற்­கான பாது­காப்­பான சூழலை அமைத்துக் கொள்­வது என்­ப­னவே இவர்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­க­ளாக உள்­ளன.

எனினும், பௌத்த மதத்தை காப்­பாற்­றவே ஆட்­சி­யா­ளர்கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளதால், மேற்­கூ­றிய தங்களது தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை அவர்கள் ஓர் அரசியல் பிரச்சினையாக பார்ப்பதில்லை.

எனவே, தங்கள் கர்ம பலன் காரணமாகவே தங்களின் அடிப்படைத் தேவைகளை அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்று அவர்கள் தமது உள்ளங்களை ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர். எனவே, பொது மக்களின் நலனுக்காக அரசும், மதமும் வேறாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது பொதுமக்களுக்கே நன்மை பயக்கும் என்பதை நாம் அவர்களுக்கு அழுத்திக் கூறுதல் வேண்டும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.