இம்ரான் கானின் அரசு கவிழும் ஆபத்து

0 364

பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானை பதவி வில­கு­மாறு அந்­நாட்டு எதிர்க்­கட்­சிகள் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்ற நிலையில், அவ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எதிர்­வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வாக்­கெ­டுப்­புக்கு வர­வுள்­ளது.

இந்­நி­லையில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்­சியின் கூட்­டணிக் கட்­சி­களில் ஒன்­றான முத்­தா­ஹிதா குவாமி மூவ்மென்ட் நேற்று மாலை தனது ஆத­ரவை வாபஸ் பெற்­றது. இதனால் பாகிஸ்தான் அரசு நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­துக்கு முன்­ன­தா­கவே கவிழும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ ள­ாகவே பாகிஸ்­தானில் விலை­வாசி உயர்வு, பொரு­ளா­தார மந்­த­நிலை என பிரச்­சி­னை­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இதற்கு இம்ரான் கானின் மோச­மான ஆட்­சி­மு­றையே காரணம் என எதிர்க்­கட்­சிகள் குற்­றஞ்­சாட்டி வந்தன. இந்­நி­லையில் இம்ரான் கானுக்கு அவ­ரது கட்சி எம்.பி.க்களே எதிர்ப்பு தெரி­விக்கத் தொடங்­கினர். சுமார் 22 எம்.பி.க்கள் பிர­தமர் இம்ரான் கான் மக்கள் நம்­பிக்­கையை இழந்­து­விட்­ட­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளனர்.

பாகிஸ்தான் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க மொத்­த­முள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆத­ரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்­சிக்கு 155 எம்.பி.க்கள் உள்­ளனர். ஆளும் கூட்­ட­ணிக்கு பிற கட்­சி­களைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆத­ரவு உள்­ளது. இதில் தற்­போது 24 பேர் அரசு மீது அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளனர். இவர்கள் அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளித்தால் அரசு கவிழ்ந்­து­விடும் ஆபத்து என்ற நிலையில் தான் நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்­தை­இம்ரான் கான் எதிர்­கொண்­டுள்ளார்.
இந்­நி­லையில் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்­சியின் கூட்­டணிக் கட்­சி­களில் ஒன்­றான முத்­தா­ஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆத­ரவை வாபஸ் பெற்­றது. அது­மட்­டு­மல்­லாமல் எதிர்க்­கட்­சி­யுடன் கைகோர்த்­துள்­ளது.

பாகிஸ்தான் பாரா­ளு­மன்­றத்­திற்கு 2023 இல் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. ஆனால், தேர்­தலை முன் கூட்­டியே நடத்த வேண்டும் என்­பது இம்­ரானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் கூட்­டணிக் கட்­சி­யி­னரின் கோரிக்­கை­யாக உள்­ளது. இது­வரை கட்சி, கூட்­டணிக் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து உறு­தி­யான சமிக்­ஞைகள் ஏதும் கிடைக்­காத நிலையில் ஆத­ர­வா­ளர்­களின் எண்­ணிக்­கையை தக்க வைக்க இம்ரான் கடும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறார். ஆட்­சியைத் தக்­க­வைத்து 2023 இல் தேர்­தலை எதிர்­கொள்ள வேண்டும் என்­பதே அவரின் திட்டம்.

இம்ரான் கான் தனது கட்­சியின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யி­ன­ருடன் தொடர்ந்து ஆலோ­சித்து வந்தார். இதில் பலோ­சிஸ்தான் அவாமி கட்சி தனது ஆத­ரவை விலக்கிக் கொண்டு ஆளுங்­கட்­சிக்கு மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எம்­கி­யூஎம் கட்­சியும் எந்த நேரத்­திலும் ஆத­ரவை விலக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் நேற்று நள்­ளி­ர­வி­லி­ருந்து ஆத­ரவை விலக்கியுள்ளது. அவர்கள் சிந்து மாகாண ஆளுநர் பதவியைக் கேட்டு இம்ரான் கானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாகவே பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.