முஸ்லிம் சமய திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து வினவியது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி

0 421

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் மற்றும் அதி­கா­ரி­களை அழைத்து திணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் மற்றும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­வி­யது.

செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான சார தேரர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்­ஸாரை செய­ல­ணியின் தலை­மை­ய­கத்­துக்கு நேரில் அழைத்து விப­ரங்­க­ளைக்­கேட்­ட­றிந்து பதிவு செய்து கொண்டார்.

செய­ல­ணியின் தலைவர் ஞான சார தேரர் காதி­ நீ­தி­மன்­றங்­களின் செயற்­பா­டுகள் மற்றும் ‘பத்வா’ தொடர்­பான தெளி­வு­களை பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்­ஸா­ரிடம் கேட்­ட­றிந்து கொண்டார். இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் எழுந்­துள்ள விமர்­ச­னங்கள் தொடர்­பிலும் கருத்து வின­வினார். ஞான­சார தேரரின் கேள்­வி­க­ளுக்கு பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் பதி­ல­ளிக்­கையில்; ‘காதி நீதி­மன்ற முறைமை இந்­நாட்டில் பல­த­சாப்­தங்­க­ளாக அமுலில் இருக்­கி­றது. இம்­மு­றை­மையை முஸ்­லிம்கள் விரும்­பு­கி­றார்கள். இங்கு விரை­வாக தீர்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஏனைய நீதி­மன்­றங்­களில் போல் வழக்­குகள் கால­தா­ம­த­மா­வ­தில்லை. இம்­மு­றையில் குறை­பா­டுகளும் உள்­ளன. இக்­கு­றை­பா­டுகள் நீக்­கப்­பட்டு சீர்த்­தி­ருத்­தப்­ப­ட­வேண்டும். திருத்­தங்­களை முஸ்­லிம்­களும் வர­வேற்­கின்­றார்கள். காதி­நீ­தி­மன்றில் வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு தரப்­பினர் கவுன்­ஸி­லிங்க்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அங்கு சுமு­க­மான தீர்­வுகள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வேண்டும். கவுன்­ஸிலிங் முறைமை முஸ்லிம் நாடு­களில் அமுலில் இருந்து வரு­கி­றது என்றார்.

இதற்கு கருத்து வெளி­யிட்ட ஞான­சார தேரர் குடும்ப நீதி­மன்றம் போன்ற இந்த கவுன்­ஸிலிங் முறைமை இலங்­கைக்கும் உகந்­த­தாகும். இது எல்­லோ­ருக்கும் நன்மை பயக்கும் என்றார். இவ்­வி­ட­யத்தை குறித்துக் கொள்ளும் படியும் செய­ல­ணியின் அலு­வ­லர்­க­ளுக்கு உத்­த­ரவு வழங்­கினார்.

‘பத்வா’ தொடர்­பான கேள்­வி­க­ளுக்கு பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் கருத்துத் வெளி­யி­டு­கையில் ‘பத்வா’ என்­பது மார்க்க அபிப்­பி­ரா­ய­மாகும். இதனை சிலர் விரும்­பு­வ­தில்லை. இதில் சட்­டத்­தன்மை இல்லை. முஸ்லிம் நாடு­களில் இந்த ‘பத்வா’ வழங்கும் முறைமை நடை­மு­றை­யி­லுள்­ளது என்றார்.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ள­ரிடம் அரபுக் கல்­லூ­ரிகள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள் தொடர்­பிலும் வின­வப்­பட்­டது. இதற்குப் பணிப்­பாளர் பதி­ல­ளிக்­கையில், அர­புக்­கல்­லூ­ரிகள் மற்றும் மத்­ர­ஸாக்கள் ஒரு புதிய ஒழுங்­கு­மு­றை­மையின் கீழ் கொண்டு வரப்­படும். இதற்கு உல­மாக்­களின் ஆலோ­ச­னைகள் பெற்­றுக்­கொள்­ளப்­படும். இதற்­கென தற்­போது சட்­ட­ரீ­தி­யான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கி­றது. இவ்­வி­வ­கா­ரத்தில் சூபி தரீக்கா, ஷரீஆ கவுன்ஸில் சூராக் சபை, உலமா சபை என்­ப­வற்­றுடன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­படும். 2019 ஆம் ஆண்டு மே மாதம் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற மேற்பார்வைக் குழுவின் அறிக்­கை­யி­னது சிபா­ரி­சுகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களின் அடிப்­ப­டை­யில் இவ்­வி­ட­யங்கள் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதேவேளை ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலைவர் ஞான­சார தேரர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டுகள் திருப்தி அளிப்­ப­தாகத் தெரி­வித்­த­துடன் பாராட்­டினார். திணைக்­க­ளத்­தின்­மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்தார். பணிப்பாளர் வெளிநாட்டு தூதுவராக இருந்து அனுபவம் பெற்றவர். பெளத்த விவகாரங்களிலும் பரிச்சயம் உள்ளவர் என்றார்.

பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸாருடன் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான மெளலவி ஏ.எம்.ரிஸ்மி, மெளலவி ஏ.ஏ.ஆரிஸ் ஆகியோரும் சந்திப்பில் பங்கு கொண்டிருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.