சிறுபான்மையினருக்கு 13 ஆம் திருத்த விடயத்தில் அரசு உத்தரவாதத்தை வழங்க தவறிவிட்டது

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

0 468

13ஆவது திருத்­தத்தைப் பொறுத்­த­வரை, எதிர்­காலம் குறித்து சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டு­கின்ற விதத்தில் இந்த அர­சாங்கம் வெளிப்­படைத் தன்­மை­யுடன் செயற்­பட்டு,உரிய உத்­த­ர­வா­தங்­களை வழங்கத் தவ­றி­விட்­டது. அத்­துடன், தேர்­தல்­களை நடாத்­தாமல் இழுத்­த­டிப்புச் செய்யும் விவ­கா­ரமும் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­ம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ். ஜெய்­சங்­க­ரிடம் வலி­யு­றுத்திக் கூறினார்.

இலங்­கைக்கு விஜயம் செய்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ். ஜெய்­சங்­க­ருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் இடை­யி­லான சந்­திப்­பு­நேற்­று­முன்­தினம் கொழும்­பி­லுள்ள இந்­திய இல்­லத்தில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்­பரும் இந்­திய உயர்ஸ்­தா­னிகர் கோபால் பாக்­லேயும், உய­ர­தி­கா­ரி­களும் பங்­கு­பற்­றினர்.

அர்த்­த­முள்ள அதி­காரப் பகிர்­வுக்­கான ஏற்­பா­டுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்­சி­க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் இதன்­போது விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

தமிழ்­பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிர­யோகம் தமிழ், முஸ்லிம் மக்­களை உள்­வாங்கும் விட­ய­மாகும். உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­களில், தமிழ்­பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிர­யோ­கத்தை கையாள்­வ­தற்­கான முஸ்லிம் தரப்பின் கருத்தை இந்­திய தரப்­பினர் அங்­கீ­க­ரித்­தனர்.

இந்­திய – இலங்கை ஒப்­பந்தம் செய்­யப்­பட்­ட­போது, முஸ்­லிம்­களின் அபி­லா­சைகள் குறித்த விவ­கா­ரங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமிழர் தரப்பின் பிரச்­சி­னைகள் குறித்து ஆழ­மான புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்­டது. அதே­வே­ளையில், தம­து­கட்சி முஸ்லிம் சமூ­கத்தின் விவ­கா­ரங்­களில் அக்­க­றை­யுடன் மிகவும் நிதா­ன­மாக அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­வ­தையும் ரவூப் ஹக்கீம் சுட்­டிக்­காட்­டினார்.
இந்­திய உத­வி­யுடன் அமுல்­ப­டுத்­தப்­படும் மீன்­பிடித் துறை­முக அபி­வி­ருத்தி திட்­டங்­களில் ஒலுவில் ,மூதூர் போன்ற துறை­மு­கங்­க­ளையும் உள்­வாங்­கு­மாறு முஸ்லிம் காங்­கிரஸ் தரப்பில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் கோரிக்­கை­யொன்று முன்­வைக்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சமய, கலா­சார விவ­கா­ரங்­களில் சகல இனங்களும் இந்திய துணைக் கண்டத்துடனும், இலங்கையுடனும் தொடர்புபட்டு வளர்ச்சியடைந்துள்ளன. இதனை மேம்படுத்துவதற்கு சகல சமயங்களையும் உள்ளடக்கிய பயனுள்ள தொடர்பாடல் பொறிமுறையொன்றை இந்தியா முன்னெடுக்கும் என இதன்போது நம்பிக்கை வெளியிடப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.