ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு முற்பணம் செலுத்த வேண்டாம்

அரச ஹஜ் குழு

0 445

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஒரு சில ஹஜ் முக­வர்கள் இவ்­வ­ரு­ட ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக கூறி ஹஜ் கட­மைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்­க­ளிடம் ஹஜ் யாத்­தி­ரைக்­காக முற்­பணம் கோரி­வ­ரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள அரச ஹஜ் குழு எவ­ருக்கும் முற்­பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­காக இது­வரை சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கையைத் தொடர்பு கொள்­ள­வில்லை. ஹஜ் கோட்டா தொடர்பில் ரம­ழா­னிலே சவூதி ஹஜ் அமைச்சு தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளும் இந்­நி­லையில் ஹஜ் யாத்­தி­ரைக்குத் திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அரச ஹஜ் குழுவின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கிடைக்கும் வரை பொறு­மை­யாக இருக்­கு­மாறு அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் பொது­மக்­களைக் கோரி­யுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரி­விக்­கையில், ‘இவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­க­ளுக்­கென ஹஜ் முக­வர்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

நாடு பொரு­ளா­தார ரீதியில் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் ஹஜ் கட­மைக்­கான அனு­மதி கிடைக்­குமா என்­பதும் சந்­தே­கத்­திற்­கி­ட­மா­க­வுள்­ளது. எனவே பொது­மக்கள் ஒரு சில ஹஜ் முக­வர்­களின் உறு­தி­மொ­ழி­களை நம்பி முற்­பணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

அவ்வாறு முற்பணம் செலுத்தப்பட்டால் அதற்கு அரச ஹஜ் குழுவோ, திணைக்களமோ பொறுப்பாக மாட்டாது எனவும் அவர் கூறினார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.