அரபுக் கல்லூரிகளை மட்டுப்படுத்துங்கள்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அரசு ஆலோ­சனை

0 511

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்­டி­லுள்ள அரபுக் கல்­லூ­ரி­களின் எண்­ணிக்­கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்­டுப்­ப­டுத்­தும்­படி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளது.

தற்­போது நாட்டில் 317 அர­புக்­கல்­லூ­ரிகள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. 132 அரபுக் கல்­லூ­ரிகள் பதிவு செய்­யப்­ப­டாது இயங்கி வரு­கின்­றன. 32 அர­புக்­கல்­லூ­ரிகள் பதிவு செய்­யப்­பட்டும் இயங்­கா­ம­லி­ருக்­கின்­றன. இந்த எண்­ணிக்­கை­யையே 50க்கும் 75க்கும் இடையில் மட்­டுப்­ப­டுத்­தும்­படி கோரப்­பட்­டுள்­ளது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் ‘விடி­வெள்­ளி‘க்குத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், ‘பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்­புக்­குழு மற்றும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபார்­சு­களில் அர­புக்­கல்­லூ­ரிகள் 50க்கும் 75 க்கும் இடையில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்புக் குழுவில் இரண்டு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அங்கம் வகித்­தனர். பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்­புக்­குழு தனது சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை 2020ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதத்­திலும், ஜனா­தி­பதி ஆணைக்­குழு தனது அறிக்­கையை 2020 மே மாதத்­திலும் வெளி­யிட்­டி­ருந்­தது.

அர­புக்­கல்­லூ­ரிகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அரசின் கோரிக்­கைக்கு நாங்கள் எமது ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யி­ருக்­கிறோம். ஒவ்வொரு மாவட்­டத்­திலும் இயங்­கி­வரும் முன்­னணி அர­புக்­கல்­லூ­ரி­க­ளுடன் அப்­ப­கு­தி­யி­லுள்ள சிறிய அர­புக்­கல்­லூ­ரிகள் ஒன்­றி­ணைக்­கப்­பட வேண்டும். அப்­போது எண்­ணிக்­கையை மட்­டுப்­ப­டுத்­தலாம்.
அத்­தோடு அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு பொது­வான பாட­திட்டம், பொது­வான பரீட்சை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆங்­கிலம் கட்­டா­ய­மாக போதிக்­கப்­பட வேண்­டு­மென நாங்கள் கூறி­யி­ருக்­கிறோம்.

அர­புக்­கல்­லூ­ரி­களை மட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்பில் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு ஆலோ­சித்து வரு­கி­றது.

தற்­போது எமக்­குள்ள பிரச்­சினை என்­ன­வென்றால் பதிவு செய்­யப்­பட்ட அர­புக்­கல்­லூ­ரி­களில் பல முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு உரிய தக­வல்­களை, உண்­மை­யான தக­வல்­களை வழங்­கு­வ­தில்லை. கல்­லூ­ரி­களில் என்ன படித்துக் கொடுக்­கப்­ப­டு­கி­றது. கல்­லூ­ரிக்கு நிதி­யு­தவி எங்­கி­ருந்து கிடைக்­கி­றது எனும் விப­ரங்கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

அர­புக்­கல்­லூ­ரி­களை மறு­சீ­ர­மைத்தல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நாங்கள் 34 பேர் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளோம். இக்­கு­ழுவில் பி.எச்.டி. பட்டம் பெற்­றுள்ள உல­மாக்கள், மெள­ல­விகள், அர­புக்­கல்­லூ­ரி­களில் ஆசி­ரி­யர்­க­ளாக நீண்ட காலம் அனு­ப­வ­முள்­ள­வர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், அரபுக் கல்­லூ­ரி­களின் விரி­வு­ரை­யா­ளர்கள் உள்­ள­டங்­கு­கின்­றனர். இக்­குழு ஆய்­வு­களை மேற்­கொண்டு அறிக்கை தயா­ரிக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்­புக்­ கு­ழுவில் அனைத்துக் கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களும் அங்கம் வகித்­தார்கள். இக்­கண்­கா­ணிப்­புக்­குழு பதிவு செய்­யப்­ப­டாத குர்ஆன் மத்­ர­ஸாக்கள் மூடப்­பட வேண்டும் எனவும், மக்தப் கல்வி முறைமை நிறுத்­தப்­பட வேண­டு­மெ­னவும் பரிந்­து­ரைத்­துள்­ளது.

அத்­தோடு அர­புக்­ கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு பாட­சா­லைக்­கல்வி கட்­டாயம் என சிபா­ரிசு செய்­துள்­ளது. 5 வயது முதல் 15 வயது வரை மாண­வர்­க­ளுக்கு பாட­சா­லைக்­கல்வி கட்­டா­ய­மாகும். சனி, ஞாயிறு தினங்­களில் அர­புக்­கல்­லூரி பாட­நெ­றிகள் வழங்­கப்­பட வேண்டும். அல்­லது 16 வயதில் அர­புக்­கல்­லூரி பாடத்­திட்டம் வழங்­கப்­பட வேண்டும் என பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்பு குழுவும் , ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவும் பரிந்­து­ரைத்­துள்­ளன.

அர­புக் ­கல்­லூ­ரிகள் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான கூட்டம்
அர­புக்­கல்­லூ­ரி­களை மறு­சீ­ர­மைப்­பது தொடர்­பான கூட்­ட­மொன்று நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு மென்­ட­ரீனா ஹோட்­டலில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்ஸார் தலை­மையில் நடை­பெற்­றது. நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக நீதி­ய­மைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி கலந்­து­கொண்டார்.

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.இஷாக், அலிசப்ரி ரஹீம், வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன், அரபுக்கல்லூரிகள் மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி அஸ்ஹர் அஸாஹிம், குழு உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சூபி தரீக்கா பீடம், ஷரீஆ கவுன்ஸில், சூரா கவுன்ஸில், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான இரண்டாம் கட்ட கூட்டமொன்று ரமழானுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்படும் என பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.