பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவூதி அரசுக்கு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

0 389

பல்­வேறு துறை­களில் நேரடி முத­லீ­டு­களை மேற்­கொள்­ளு­மாறு சவூதி அர­சுக்கு அழைப்பு விடுப்­ப­தாக, ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, அந்­நாட்டின் வெளி­நாட்டு அமைச்சர் இள­வ­ரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊ­திடம் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் வெளி­நாட்டு அமைச்­ச­ருடன் கடந்த திங்­க­ளன்று ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.
விவ­சாயம், புதுப்­பிக்­கத்­தக்க வலு­சக்தி உற்­பத்தி, தொழி­நுட்ப மேம்­பாடு மற்றும் துறை­முக நகர் சார்ந்த வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புகள் குறித்து ஜனா­தி­பதி இதன்­போது சுட்­டிக்­காட்­டினார்.

கொவிட் தொற்­று­நோயின் கார­ண­மாக, இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­பட்ட தாக்கம் தொடர்பில், இள­வ­ரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத்தின் அவ­தானம் செலுத்­தப்­பட்­ட­துடன், பரி­மாற்­றங்கள் குறைதல், சுற்­றுலாத்துறையின் வீழ்ச்சி, மின் உற்­பத்­தியில் வறட்­சி­யான கால­நி­லையின் தாக்கம் மற்றும் ஏற்­பட்­டுள்ள எரி­பொ­ரு­ளுக்­கான தேவை பற்­றியும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.

தமது நாடும் புதுப்­பிக்­கத்­தக்க வலு­சக்தி உற்­பத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்ட சவூதி வெளி­நாட்டு அமைச்சர், இலங்­கைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கத் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்தார்.

பல்­வேறு துறை­களில் இரு நாடு­க­ளுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் அப்துல் நசீர் அல் பர்ஹாத், சவுதி வெளி­வி­வ­கார அமைச்சின் பணிப்­பாளர் நாயகம் அப்துல் ரஹ்மான் அல் தாவூத், வெளி­நாட்டு அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல். பீரிஸ், ஜனா­தி­ப­தியின் செய­லாளர் காமினி செனரத் மற்றும் வெளி­நாட்டு அமைச்சின் செய­லாளர் அட்­மிரல் பேரா­சி­ரியர் ஜயநாத் கொலம்­பகே ஆகி­யோரும் இச்சந்திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, கடந்த திங்களன்று சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.