சஹ்ரான் குழுவினருடன் தொடர்புபட்டதாக கூறி கைதான எண்மர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

0 612

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து சஹ்ரான் குழு­வி­ன­ருடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறி கைது செய்­யப்­பட்ட ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த எண்மர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்­பான வழக்கு நேற்று முன்­தினம் கெப்­பித்­தி­கொல்­லாவ நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே, இவர்­களை சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக நீதிவான் அறி­வித்தார்.

இவர்கள் மீது சுமத்­தப்­பட்ட எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கும் ஆதா­ரங்கள் இல்லை என்­பதால் இவ்­வ­ழக்கை முன்­னெ­டுத்துச் செல்ல விரும்­ப­வில்லை என சட்­டமா அதிபர் திணைக்­களம் ஏலவே நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே இவர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

அடிப்­ப­டை­வாத மதக் கொள்­கை­களைப் பரப்­பி­யமை உட்­பட பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்வைத்து 2019 மே மாதம் 24 ஆம் திகதி ஹொர­வப்­பொத்­தான பொலிஸார் ஐவரைக் கைது செய்­தனர். அதே காலப்­ப­கு­தியில் மேலும் ஐவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­களில் 9 பேர் கைது செய்­யப்­பட்ட 6 மாதங்­களின் பின்­னரும் ஒருவர் இரண்­டரை வரு­டங்­களின் பின்­னரும் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே இவர்­களில் 8 பேர் சகல குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் இருவரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் கைது செய்­யப்­பட்ட சமயம், இவர்­களில் 5 பேரின் வங்கிக் கணக்­கு­களில் சுமார் 100 கோடி ரூபா பணம் இருந்­த­தாக சிங்­களப் பத்­தி­ரிகை ஒன்று போலி­யான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.