கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி

மஜ்மா நகரில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றன

0 6,738

எம்.ரீ.எம்.பாரிஸ்

கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழக்கும் நபர்­களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அரு­கி­லுள்ள மைய­வா­டி­க­ளி­லேயே நல்­ல­டக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அசேல  குண­வர்­த­னவின் கையெ­ழுத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்ள EPID/400/2019/ n- Cov  எனும் சுற்று நிருபம் ஊடாக அறி­வித்­துள்ளார்.

கடந்த ஒரு வரு­ட­மாக கொவிட்­டினால் உயி­ரி­ழப்­போரின் சட­லங்கள், ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகரின் அடை­யாளம் காணப்­பட்டு, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அனு­ம­தி­ய­ளித்த  காணியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வந்த நிலை­யி­லேயே  தற்­போது  அனைத்து மைய­வா­டி­க­ளிலும் அடக்கம் செய்ய முடியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய சுற்று நிருபம் என்ன கூறு­கி­றது?

சுகா­தார  சேவைகள் பணிப்­பா­ளரின் புதிய சுற்று நிரு­பத்­துக்கு அமைய, கொவிட் தொற்றால் உயி­ரி­ழந்­த­வரின் சடலம் 5ஆம் திகதி முதல் அவ­ரது உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது. அச்­ச­டலம் சவப்­பெட்­டிக்குள் வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் எவ்­வ­கை­யிலும் கசிவு ஏற்­ப­டாத பிரேத பையொன்­றுக்குள் சுகா­தார ஊழி­யர்­களால் வைக்­கப்­ப­ட­வேண்டும், குறித்த சடலம் சுகா­தாரத் தரப்­பி­னரால் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டதன் பின்னர் 24 மணி­நே­ரத்­திற்குள் அச்­ச­டலம் எந்­த­வொரு தகன சாலையில் தகனம் செய்­யப்­ப­டவோ அல்­லது எந்­த­வொரு மைய­வா­டி­யிலும் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டவோ வேண்டும், தகனம் அல்­லது அடக்கம் செய்யும் இடம் தவிர்ந்த வேறெந்­த­வொரு இடத்­திற்கும் சடலம் கொண்­டு­செல்­லப்­ப­டக்­கூ­டாது (வீடு­க­ளுக்கு சட­லங்­களை எடுத்துச் செல்ல முடி­யாது) எனவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் குறித்த தொற்­றுக்­குள்­ளா­ன­வரின் சடலம் பதப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது,  சட­லத்தை தகனம் அல்­லது அடக்­கம்­செய்யும் முறை சம்­பந்­தப்­பட்­ட­வரின் உற­வி­னர்­களின் விருப்­பத்­தின்­படி மேற்­கொள்­ளப்­ப­டலாம், சட­லத்தை அடக்கம் அல்­லது தகனம் செய்­வ­தற்­கான செல­வுகள் உற­வி­னர்­க­ளா­லேயே ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும், இதன்­பின்னர் அதற்­கு­ரிய செல­வுகள் சுகா­தார அமைச்­சி­னாலோ அல்­லது வேறு திணைக்­க­ளங்­க­ளி­னாலோ வழங்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தக­னமும் அடக்­கமும்

முன்­ன­தாக  கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயி­ரி­ழக்கும் அனை­வ­ரையும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சுடலை அல்­லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த  2020 ஏப்ரல்  4ஆம் திக­தி­யி­டப்­பட்டு சுகா­தார மற்றும் சுதேச வைத்­திய சேவைகள் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்­னி­யா­ராச்­சி­யினால் கடந்த 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி 2170/8 எனும் இலக்க வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது. இதனைத் தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் சட­லங்கள் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரின் விருப்­பத்­துக்கு மாறாக எரிக்­கப்­பட்­டன.

இக் காலப்­ப­கு­தியில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்ட பல்­வேறு போராட்­டங்­களின் கார­ண­மா­கவும் அழுத்­தங்கள் கார­ண­மா­கவும் கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழக்கும் எந்த ஒரு நப­ரையும் அடக்கம் செய்­யவோ அல்­லது தகனம் செய்­யவோ முடியும் என கடந்த  2021 பெப்­ர­வரி 25 ஆம் திக­தி­யி­டப்­பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து இறுதிக் கிரி­யைகள் தொடர்­பி­லான சுகா­தார அமைச்சின் வழி காட்டல் அடங்­கிய சுற்று நிரு­பத்­துக்­காக காத்­தி­ருக்க வேண்­டி­யேற்­பட்­டது. இதற்குள் அடக்கம் செய்யும் இடம் தொடர்பில் சிக்கல் ஏற்­ப­டவே, முதலில் இர­ணை­தீவில் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யப் போவ­தாக அர­சாங்கம் அறி­வித்­தது. எனினும் அந்த அறி­விப்­புக்கு பலத்த எதிர்ப்பு ஏற்­பட்­டது. இரணை தீவு மக்கள் அதற்கு எதி­ராக போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தனர்.

இந் நிலை­யி­லேயே,  ஓட்­ட­மா­வடி – மஜ்மா நகர் காணியில் கொரோனா தொற்­றுக்­குள்­ளாகி மர­ண­ம­டைந்த வர்கள் நல்­ல­டக்கம் செய்­ய­ப்படும் பணிகள் கடந்த 2021 மார்ச் 5 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஜனாஸா அடக்கம் ஆரம்பம்

நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களில் கொவிட்-19 ஜனாஸா நல்­ல­டக்­கத்­திற்குப் பொருத்­த­மான இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தும்  நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்ட வேளையில், மட்­டக்­க­ளப்பு, கோற­ளைப்­பற்று மேற்கு, ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் ஆளு­கைக்­குட்­பட்ட மஜ்மா நகர், சூடுபத்­தி­ன­சேனை கிராமம் அடை­யாளம் காணப்­பட்­டது.

இதனை ஓட்­ட­மா­வடி பிர­தேச சபையின் தவி­சாளர் ஏ.எம்.நௌபர் தலை­மையில் கோற­ளைப்­பற்று மேற்கு, மத்தி ஆகிய பிர­தேச செய­லா­ளர்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கல்­குடா கிளை, பிர­தேச முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்கள், பிர­தேச ஜும்ஆப் பள்­ளி­வா­சல்கள், மாவட்ட ரீதியில் காத்­தான்­குடி, ஏறாவூர் முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னங்­களின் ஒத்­து­ழைப்­புடன் இதற்­கான வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அவ­சர அவ­ச­ர­மாக ஜனாஸா நல்­ல­டக்­கத்­திற்கு முதல் நாளி­ரவு மயான பூமி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பகுதி  சுத்­தி­க­ரிக்­கப்­பட்டு, இலங்கை இரா­ணு­வத்­தி­னர்  ­மற்றும் சுகா­தா­ரத்­து­றை­யி­னரின் வழி­காட்­டலில் முத­லா­வது ஜனாசா நல்­ல­டக்கம் கடந்த 2021 மார்ச் மாதம் 05ஆம் திகதி அன்று பி.ப 4.00 மணி­ய­ளவில் கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபையில் பணி­யாற்றும் முஸ்லிம் ஊழி­யர்­க­ளினால் முஸ்லிம் மக்­களின் சமய அனுஷ்­டா­னங்­க­ளுடன் கொவிட்-19 சுகா­தார வழி­மு­றை­க­ளைப்­பேணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்­படி முதலில், கொரோ­னாவால் உட­யி­ரி­ழந்து வைத்­தி­ய­சாலை குளி­ரூட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏறாவூர் பகு­தியைச் சேர்ந்த இரு­வரின் ஜனா­ஸாக்­களும், பின்னர் காத்­தான்­குடி வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூவரின் ஜனா­ஸாக்­களும் ஓட்­ட­மா­வடி –  மஜ்மா நகர் மைய­வா­டியில் அடக்கம் செய்­யப்­பட்­டன. அன்று முதல் கடந்த சனிக்­கி­ழமை வரை மஜ்மா நகர் காணியில் சுமார் 3634 சட­லங்கள் நல்­ல­டக்கம்  செய்­யப்­பட்­டுள்­ளன. முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் மட்­டு­மன்றி, பௌத்­தர்கள், இந்­துக்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­களின் சட­லங்­களும் அங்கு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

இறுதி நாள் நல்­ல­டக்கம்

இந் நிலையில் கொவிட் சட­லங்­களை நாட்டின் எப்­ப­கு­தி­யிலும் உள்ள மைய­வா­டி­களில் சுகா­தார வழி­மு­றை­களைப் பேணி அடக்கம் செய்ய முடியும் என்ற சுற்று நிருபம் வெளி­யா­னதைத் தொடர்ந்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியில் அடக்கம் செய்யும் பணிகள் நிறை­வுக்கு வந்­தன. இதற்­க­மைய 3634 ஆவது சட­ல­மா­னது கடந்த சனிக்­கி­ழமை மாலை அடக்கம் செய்­யப்­பட்­டது. இதன் போது பிர­தேச சபை தவி­சாளர், செய­லாளர், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், இரா­ணு­வத்­தினர், சுகா­தா­ரத்­த­ரப்­பினர், பிர­தேச சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் எனப்­ப­லரும் கலந்து கொண்­டனர்.

இங்கு உரை­யாற்­றிய பிர­தேச சபைத் தவி­சாளர் ஏ.எம். நௌபர்,  இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி  அனு­ம­தி­ய­ளித்த ஜனா­தி­பதி, பிர­தமர், இரா­ணு­வத்­த­ள­பதி, சுகா­தார மற்றும் பாது­காப்புத் தரப்­பி­ன­ருக்கும் நாட­ளா­விய ரீதியில் இப்­ப­ணிக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய சிவில் சமூக நிறு­வ­னங்­களின் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கும்  தமது பிர­தேச மக்­க­ளுக்கும்  நன்­றி­க­ளையும் பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்தார். மேலும், அன்­றைய தினம் அங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான விசேட பிரார்த்­தனை நிகழ்வும் மைய­வா­டி வளா­கத்தில் இடம்­பெற்­றது.

இங்கு அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளது உற­வி­னர்கள் மைய­வா­டிக்கு விஜயம் செய்து பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச தேச சபையை முன்கூட்டி தொடர்பு கொள்வதன் மூலம் இதற்கான அனுமதி யைப் பெற்றுக் கொள்ள முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.