கூரகல தப்தர் ஜெய்லானி விவகாரம்: கொழும்பில் இருந்து அறிக்கை விடுவதில் எவ்வித பயனுமில்லை

பேச்சுக்கு வருமாறு அழைக்கிறார் நெல்லிகல தேரர்

0 498

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
கூர­கல – தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் தொடர்பில் கண்­டன அறிக்கை வெ ளியி­டு­வ­தற்கு முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு எவ்­வித உரி­மை­யு­மில்லை. 26 முஸ்லிம் அமைப்­பு­களும் கொழும்பில் இருந்து அறிக்கை விடு­வதில் எவ்­வித பய­னு­மில்லை. பிரச்­சி­னையைத் தீர்த்­துக்­கொள்ள வேண்­டு­மென்றால் என்­னிடம் நேரில் வாருங்கள். பேச்­சு­வார்த்தை மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்வோம் என கூர­கல புனித பூமிக்­குப்­பொ­றுப்­பான வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன நெல்­லி­கல தேரர் அழைப்பு விடுத்­துள்ளார்.

வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை உட்­பட 26 முஸ்லிம் அமைப்­புகள் தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் மினாரா கட்­ட­மைப்பு இன­வா­தி­களால் அகற்­றப்­பட்­ட­மைக்கு எதி­ராக ஊடக அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது. மரபுச் சின்­னங்­களை அழிக்க வேண்டாம் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. இதற்குப் பதி­ல­ளிக்­கை­யிலே வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் ‘விடி­வெள்­ளி’­யிடம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னையை நேரில் கலந்துபேசி தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக கடந்த காலங்­களில் இரு தட­வைகள் ஜம் இய்­யத்துல் உலமா சபையை நேர­டி­யாக சந்­தித்­துள்ளேன். இரு­ த­ட­வைகள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடி­தங்­களை அனுப்­பி­யுள்ளேன். ஆனால் கடி­தங்­க­ளுக்கு இரு வரு­டங்கள் கடந்தும் பதில் எதுவும் கிடைக்­க­வில்லை. வக்பு சபைக்கும் கடிதம் அனுப்­பினேன். இது வரை காலமும் கடிதம் அனுப்­பினேன். இது வரை­கா­லமும் அவர்கள் மெள­ன­மா­கவே இருந்து வந்­துள்­ளார்கள்.

பள்­ளி­வா­சலின் முன்னாள் தலைவர் நபீஸ் மற்றும் நகீப் மெள­லானா, ரொஷானா அபு­சாயி ஆகி­யோரை கொழும்பில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கிறேன். பள்­ளி­வாசல் தலை­வர்கள் பத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­திலே ஆர்­வ­மாக இருக்­கி­றார்­க­ளே­யன்றி பள்­ளி­வாசல் மீது பற்று இல்லை. அத­னா­லேயே பள்­ளி­வாசல் இந்­நி­லை­மைக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

அறிக்­கை­விடும் அமைப்­பு­களில் சூபிக்கள் ஒரு­வ­ரு­மில்லை. இவ்­வா­றான அமைப்­புகள் பிரச்­சி­னையைத் தீர்ப்­பதில் ஆர்வம் காட்­டாமை இதனை அடிப்­ப­டை­வா­தத்­துக்கே இட்டுச் செல்லும். பள்­ளி­வா­ச­லுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள காணியில் வணக்­கஸ்­தலம் ஒன்று அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்கும் நாம் தயா­ராக இருக்­கிறோம்.
கடந்த 50 வருட கால­மாக இப்­பி­ரச்­சினை தொடர்ந்து கொண்டே இருக்­கி­றது. இப்­பி­ரச்­சினை மேலும் தொடர்ந்தால் இதனால் எதிர்­கா­லத்தில் கல­வ­ரங்கள் மூளலாம். அதனால் நாம் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு தீர்வு காண­வேண்­டி­யது அவ­சி­ய­மா-கும். எனவே கொழும்­பி­லி­ருந்து கொண்டு ஊடக அறிக்கை விடா­தீர்கள். நேரே கூர­க­ல­வுக்கு வாருங்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.