(றிப்தி அலி)
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து நாட்டில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட முடியாது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
“பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையிலேயே குறித்த பள்ளிவாசல்களின் பெயர்களை வெளியிட முடியாது” என முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்சார் தெரிவித்தார்.
கடந்த 2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை அடுத்து நாட்டில் செயற்பட்ட 16 பள்ளிவாசல்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து மூடப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி அறிவித்திருந்தது.
எனினும், குறித்த பள்ளிவாசல்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இதனையடுத்தே நாட்டில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் பெயர் விபரங்களையும் அதற்கான காரணங்களையும் அறியும் நோக்கில் தகவலறியும் விண்ணப்பமொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli