ஆப்கான் பாதுகாப்பு படையை இலக்குவைத்து தற்கொலை தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு

0 596

ஆப்கானிஸ்தானின் முக்கிய புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்களை இலக்குவைத்து காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இரவு நேர சோதனைகளை நிறைவுசெய்து திரும்பிக் கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளை இலக்குவைத்து நேற்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதலானது பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டு அணியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதல் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எவ்வித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.