ரம்மியமான சூழலுடன் உணவு வங்கித் திட்டத்தை அமுல்படுத்தும் மாவனல்லை, வயல்கடை ஜும்ஆ பள்ளிவாசல்

0 440

அஸ்ஹர் ஹாஸிம்

கேகாலை மாவட்­டத்தில் மாவ­னல்லை தேர்தல் தொகு­தியில் வயல்­கடை எனும் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தாருஸ்­ஸலாம் ஜும்ஆ பள்­ளி­வாசல் தொழு­கை­யா­ளி­களைக் கவர்ந்­தி­ழுக்கும் வண்ணம் அழ­கிய சூழலில் அமையப் பெற்­றுள்­ள­துடன் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு பயன்­தரும் பல திட்­டங்­க­ளையும் அமுல்­ப­டுத்தி வரு­கின்­றமை பாராட்­டத்­தக்க விட­ய­மாகும்.

மலை­ய­கத்தின் நுழை­வா­யிலாம் மாவ­னல்­லை­யி­லி­ருந்து கண்­டியை நோக்கி செல்லும் பொழுது ஹிங்­குள்ளை சந்­தி­யி­னூ­டாக அளுத்­நு­வர பாதையில் 3 கி.மீ தூரத்தில் வயல் வெளி­க­ளுக்கு மத்­தியில் இப் பள்­ளி­வாசல் அமையப் பெற்­றுள்­ளது. இதன் கட்­டிட அழகும் சுற்­றி­யுள்ள பூங்கா அமைப்பும் கண்ணை கவர்­வ­ன­வாகும்.

1943 இல் தக்­கி­யா­வாக அமைக்­கப்­பட்ட இப்­பள்­ளி­வாசல் 2001 ஆம் ஆண்டு முதல் உயன்­வத்தை மஸ்­ஜிதுன் நூர் தாய்ப் பள்­ளியின் பரி­பா­ல­னத்தின் கீழ் ஜும்ஆ பள்­ளி­வாக தர­மு­யர்த்­தப்­பட்­டது. பின்னர் அவ­சியம் கருதி பள்­ளி­வாசல் இரண்டு மாடிக் கட்­டி­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

பள்­ளியின் அழ­கிய மினாரா, மிம்பர் மற்றும் அறபு எழுத்­த­ணிகள் கண்­களைக் கவர்­வ­ன­வாகும். இந்த ஊரி­னூ­டாக பயணம் செய்யும் பெண் பிர­யா­ணிகள் தொழு­வ­தற்கும் மல­ச­ல­கூட வச­தி­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கும் தேவை­யான வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இப் பள்­ளி­வா­சலில் சக­ல­ருக்கும் முன்­மா­தி­ரி­யான நலன்­புரி வேலைத்­திட்டம் ஒன்று அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை விசேட அம்­ச­மாகும். கீழ் மாடி வெளிப்­பள்­ளியில் அழ­கிய அமைப்பில் பசித்­த­வர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக உணவு வங்கி பெட்­டி­யொன்­றையும் அமைத்­துள்­ளது.

அதில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. “ உங்கள் தேவை என்ன என்று அல்லாஹ் நன்கு அறிவான். நீங்கள் ஒரு தொழு­கை­யா­ளி­யாயின் உங்கள் வீட்டில் இன்­றைய நாள் உண­வுக்கு கஷ்டம் இருப்பின் இங்­கி­ருந்து ஒரு பொதியைப் பெற்று உங்கள் தேவையை நிறை­வேற்றிக் கொள்­ளுங்கள். இது போன்று இன்­னொ­ரு­வரின் தேவையை நிறை­வேற்ற விரும்­பினால் உங்­களால் முடி­யு­மான ஒரு பொதியை இங்கே வைக்­கலாம். அதே போன்று படைத்த ரப்­பையும் கொடுத்து உத­விய. கரங்­க­ளையும் மறக்­காமல் நன்றி செலுத்­துங்கள். கொடுக்கும் சக்தி உள்­ள­வரை பிற­ருக்கு கொடுத்து மகி­ழுங்கள்.” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­சலின் சூழலை மெரு­கூட்டும் வகையில் பள்­ளியைச் சுற்றி வர பூந்­தோட்ட அமைப்பும் காணப்­ப­டு­கி­றது. நுவ­ரெ­லியா உட்­பட பல பாகங்­க­ளி­லி­ருந்தும் கொண்டு வரப்­பட்டு நடப்­பட்­டுள்ள மலர்ச் செடி­களும் உயர்ந்து நிற்கும் ஒவ்­வொரு வகை­யான மரங்­களும் கண்­களைக் கவர்­வ­துடன் பள்­ளி­வா­சலை நோக்கி மக்­களை ஈர்ப்­ப­ன­வா­கவும் உள்­ளன.

வட்ட அமைப்­புக்­க­ளாக வரிசை அமைப்­புக்­க­ளாக பூஞ்­செ­டிகள் பள்­ளியைச் சுற்றிக் காணப்­ப­டு­வ­தோடு மக்­களின் கண்­களைக் கவ­ரக்­கூ­டிய பல வகை­யான, பல நிறங்­களை கொண்ட பெரிய மீன்­களும் தொட்­டி­களில் இடப்­பட்­டுள்­ளன.

தூரத்தே தெண்­படும் தெவ­ன­கல குன்றும் பத­லே­கலக் குன்றும் நாமெல்லாம் ஒன்று என வனப்புக் கூறு­கின்­றன. ஹிங்குள்ள அழுத்நுவர பாதையால் செல்வோர் இப்பள்ளிவாசலின் அழகினால் கவரப்பட்டு மன நிறைவாக தொழுது விட்டுச் செல்கின்றனர்.

இப் பள்­ளி­வா­சலில் முறை­யாக பேணப்­படும் சுற்றுச் சூழலும் இங்கு அமுல்­ப­டுத்­தப்­படும் உணவு வங்கித் திட்­டமும் ஏனைய பிர­தேச பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் முன்­மா­தி­ரி­மிக்­க­ன­வாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.