யுத்தத்திற்கு பின்னர் முஸ்லிம்களை இலக்குவைத்து அரசியல் நோக்கத்திற்காக இனவாதம் தூண்டப்பட்டது

நியூஸிலாந்து உயர்ஸ்தானிகரிடம் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

0 420

யுத்த வெற்­றியின் பின்னர், 2009ஆம் ஆண்­டுக்குப் பிறகு இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், அத­னூ­டாக நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் பதி­லாக, அர­சியல் நோக்­கங்­களை அடைந்து கொள்­வ­தற்­காக பொது­வாக சிறு­பான்மை மக்­களை குறிப்­பாக முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து இன­வா­தத்தை தூண்டும் நட­வ­டிக்­கைகள் அதி­க­ளவில் இடம்­பெற்­று­ வ­ரு­வ­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், நியூ­சி­லாந்து உயர்ஸ்­தா­னிகர் மைக்கல் அப்­லெடன் தம்மைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டியபோது சுட்­டிக்­காட்­டினார்.

இலங்­கைக்கும் மாலை­தீ­விற்­கு­மான நியூ­சி­லாந்தின் உயர்ஸ்­தா­னிகர் மைக்கல் அப்­லிடன், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்­கீமை கட்­சியின் “தாருஸ்­ஸலாம்” தலை­மை­யத்தில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

தற்­போ­தைய நெருக்­க­டி­யாக அர­சியல் கள நில­வ­ரத்தை மையப்­ப­டுத்­தி­ய­தாக உரை­யாடல் இடம்­பெற்­றது. நியூ­ஸி­லாந்தில் இடம்­பெற்ற கோர­மான கிரைஸ்ச் சேர்ச் பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பிர­தமர் ஜசிந்தா ஆர்டர்ன் மிகவும் சிறப்­பான விதத்தில் மனி­தா­பி­மா­னத்­துடன் நடந்து கொண்டார் என ஆரம்­பத்­தி­லேயே அவர் உயர்ஸ்­தா­னி­க­ரி­டத்தில் நன்றி தெரி­வித்தார்.

பிரஸ்­தாப சந்­திப்பின்போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்தி சிறு­பான்மை சமூ­கத்­தினர் அநேகர் போதிய சாட்­சி­யங்­க­ளின்றி கைது செய்­யப்­பட்டு, வரு­டக்­க­ணக்­காக சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அந்த சட்டம் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு அதற்குப் பக­ர­மாக வேறு சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­டலாம். ஆனால் உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளையும் மீறி, அதில் அர­சாங்­கத்­துக்கு தேவை­யான விதத்தில் சில திருத்­தங்­களை மட்டும் செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்.

நான் முன்னர் நீதி அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­துள்ளேன். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்றி விசா­ரணை செய்த பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு­விலும் இடம்­பெற்­றி­ருந்தேன். அந்த தாக்­குதல் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு குற்­ற­மி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும்.ஆனால், அனைத்தும் மர்­ம­மாக இருக்­கி­றது.

அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு அதன்­மீது இப்­போது வெறுப்பு அதி­க­ரித்­துள்­ளது. அர­சாங்கம் சரி­வர பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்­யாததன் விளை­வாக நாடு பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நாணய நிதி­யத்­திடம் தஞ்­சம­டைந்­தி­ருக்க வேண்­டிய கால­கட்டம் தாம­த­மா­கி­விட்­டது.ஆனால், இன்னும் முடியும். எதற்­கெ­டுத்­தாலும் கொவிட் 19 தொற்றைக் காரணம் காட்டி சமா­ளித்து கொண்டு போகின்­றனர்.
முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் பல­வி­த­மான தொல்­லை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். முஸ்லிம் எங்­க­ளது சமய, கலாச்­சார ஆடைகள் அணி­வ­தற்கு பெரும்­பாலும் அனு­மதி அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. எங்­க­ளது நில­பு­லங்கள் ஆக்­கி­ர­மிக்கப்படு­கின்­றன. தப்தர் ஜெய்லானி போன்ற முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரிய புரா­தன இடங்கள் கூட பறிக்­கப்­ப­டு­கின்­றன.

முஸ்­லிம்­களின் விவாக விவா­க­ரத்து சட்­டத்­திலும் பிரச்­சி­னை­களைக் கிளப்­பி­யுள்­ளனர். தேர்­தல்­களை உரிய காலத்தில் நடத்­தாமல் தாம­த­மாக்கிக் கொண்டே போகின்றனர் என்றார்.

முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் தான் எழு­திய இலங்கை முஸ்­லிம்கள் பற்­றிய ஆய்வு நூலின் பிர­தி­யொன்­றையும் உயர்­ஸ­்தா­னி­க­ரிடம் கைய­ளித்தார். உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் ஆலோ­சகர் தமது ஜய­சிங்ஹ மற்றும் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரின் இணைப்புச் செய­லா­ளரும் கல்­முனை மாந­கர பிரதி மேய­ரு­மான ரஹ்மத் மன்சூர் ஆகி­யோரும் இதன்போது உடனிருந்தனர்.-  Vidivelli

Leave A Reply

Your email address will not be published.