அழிவுப் பாதையில் நாடு!

0 498

நாடு வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு மிக மோச­மா­ன­தொரு நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளதை நாம் கண்­கூ­டாகக் கண்டு கொண்­டி­ருக்­கிறோம். எரி­பொருள் தட்­டுப்­பாடு நாட்டை முற்­றாக முடக்க நிலைக்கு கொண்டு சென்­றுள்­ளது. எரி­பொருள் நிரப்­பு­வ­தற்­காக வாக­னங்கள் பல கிலோ மீற்­றர்கள் தூரம் வரி­சையில் காத்து நிற்க வேண்­டி­யுள்­ளது. பல வாக­னங்கள் எரி­பொ­ரு­ளின்றி வீதி­க­ளி­லேயே கைவிடப்­பட்­டுள்­ளன. போது­மான எரி­பொருள் இல்­லா­ததால் பல மணி நேர மின்­துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இது தினமும்10 மணி நேர­மாக அதி­க­ரிக்­கப்­ப­டலாம் என்றும் செய்­திகள் கூறு­கின்­றன.
இலங்கை வங்­கு­ரோத்து நிலைக்கு வந்­து­விட்­ட­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளன. உலகில் ஏலவே வங்­கு­ரோத்­தை­ய­டைந்த பல நாடு­களின் வரி­சையில் இப்­போது இலங்­கையும் புதி­தாக இணைந்து கொள்­ள­வுள்­ளமை நமது துர­திஷ்­ட­மாகும்.

அர­சாங்கம் கொவிட் 19 பர­வலே இந்த பொரு­ளா­தார நெருக்­க­டிக்குக் காரணம் எனக் கூறி­னாலும் அது மாத்­தி­ரன்றி முறை­யற்ற பொரு­ளா­தார முகா­மைத்­து­வமே இதற்­கான பிர­தான காரணம் என பொரு­ளியல் நிபு­ணர்கள் ஆதா­ர­பூர்­வ­மாக நிறுவி வரு­கின்­றனர்.
அர­சாங்­கத்தின் உயர்­வான செல­வி­னங்கள் மற்றும் வரிக் குறைப்­பு­களால் அரச வரு­மானம் குறைந்­துள்­ளது. சீனா­வுக்கு பாரிய கடன்­களை மீளச் செலுத்த வேண்­டி­யுள்­ளமை, இந்த தசாப்­தத்­தி­லேயே அந்­நிய செலா­வணி இருப்பு இந்த ஆட்­சி­யி­லேயே அதிகம் குறைந்­தமை மற்றும் கொவிட் நெருக்­க­டியின் உட­னடி தாக்கம் மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் வீழ்ச்சி ஆகி­ய­வற்றால் இலங்கை இந்த நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக பொரு­ளியல் ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அர­சாங்கம் இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து எவ்­வாறு வெளி­வ­ரு­வது எனச் சிந்­திக்­காது தமக்கு மத்­தியில் அர­சியல் சித்து விளை­யாட்­டுக்­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. நிதி­ய­மைச்­ச­ருக்கும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பல அமைச்­சர்­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டுகள் நில­வு­வதை வெளிப்­ப­டை­யாகக் காண முடி­கி­றது. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்­சிகள் நேற்று தனி­யாக மாநாடு ஒன்றை நடாத்தி நாட்டை நெருக்­க­டி­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான திட்ட யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. இதன் மூலம் அர­சாங்­கத்­தினுள் பாரிய பிளவு ஏற்­பட்­டுள்­ளமை தெளி­வா­கி­றது. அர­சியல் வேறு­பா­டு­களை மறந்து அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்­டிய இந்த சந்­தர்ப்­பத்தில் இவ்­வாறு கட்சி ரீதி­யாக பிள­வு­ப­டு­வது நாட்டை மேலும் படு­கு­ழியில் தள்­ளவே வழி­வ­குக்கும்.

மறு­புறம் ஜெனீ­வி­வாவில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் பல­மாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வேண்டி வத்­திக்கான் சென்­றுள்ள கர்­தினால் மல்கம் ரஞ்சித், பாப்­ப­ர­சரைச் சந்­தித்து தமது போராட்­டத்­திற்கு உத­வு­மாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்­திப்பு இலங்கை அர­சாங்­கத்­திற்கு பாரிய அழுத்­தங்­களைக் கொண்டு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அது மாத்­தி­ர­மன்றி ஜெனீ­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சேல் பச்­லெட்டைச் சந்­தித்­துள்ள கர்­தினால், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லின சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­டு­பி­டிக்கும் விட­யத்தில் ஐ.நா.வின் உத­வி­யையும் கோரி­யுள்ளார். மேலும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஹரின் பெர்­ணான்டோ மற்றும் மனுஷ நாண­யக்­கார ஆகி­யோரும் தற்­போது ஜெனீ­வாவில் உள்­ளனர். நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கின் கீழ் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க சிறை வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அவர்கள் ஜெனீ­வாவின் கவ­னத்தை ஈர்த்து வரு­கின்­றனர்.

அதே­போன்று இலங்­கையில் அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தினை முற்­றாக ஒழிப்­ப­தற்­கான அழுத்­தத்தை வழங்­கு­மாறும் ஜெனீ­வாவில் இம்­முறை அழுத்தம் வழங்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் நேற்­றைய தினம் ஜெனீ­வாவில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் முஸ்­லிம்கள் பலரும் இணை­ய­வ­ழியில் பங்­கு­பற்றி பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்­துக்கு எதி­ரான தமது நிலைப்­பா­டு­களை முன்­வைத்­துள்­ளனர். இந்த அர­சாங்கம் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுத்­து­வரும் கொள்­கை­களை தெளி­வாக அதில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு 19 மாதங்கள் அநி­யா­ய­மாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமும் இதில் பங்­கு­பற்றி தனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாரிய பொய்ப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து, பெரும்­பான்மை மக்­களை திசை திருப்­பியே ஆட்­சிக்கு வந்­தது. குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்­களை தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்­த­துடன் கொவிட் ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக எரித்­ததன் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் சாபத்தை சம்­பா­தித்துக் கொண்­டது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மூலம் இந்த அர­சாங்கம் அர­சியல் இலாபம் அடைந்து கொண்டதாகவும் வாக்குறுதியளித்தபடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாது வேடிக்கை பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினர் ஆதங்கப்படுகின்றனர். இன்று இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து ஆட்சிக் கதிரையில் அமர்த்திய பெரும்பான்மை மக்கள் கூட பொருளாதார நெருக்கடியினால் தினமும் சாபமிடுகின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது.

எனவே அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் மக்களின் சாபங்களைச் சம்பாதித்துக் கொண்டு அழிவுப்பாதையில் செல்வதானது இறுதியில் முழு தேசத்தையுமே பாதிக்கச் செய்யப் போகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் உதவி மிகவும் அவசியம். ஆனால் தற்போது ஜெனீவாவில் நடக்கும் நிகழ்வுகள் அந்த நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்வதாகவே உள்ளன. இதற்கும் அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிற்போக்கான கொள்கைகளே காரணமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.