‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அடிப்படை காரணம் குர்ஆன்’: நாமல் குமாரவின் கருத்துக்கு உலமா சபை கடும் கண்டனம்

0 411

சமூக ஊட­க­மொன்றில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில் ‘உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு அடிப்­படை காரணம் குர்ஆன்’ என நாமல் குமார தெரி­வித்­தி­ருந்த கருத்தை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்க்கம் நுராமித் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 2022.02.28 ஆம் திகதி சமூக ஊட­க­மொன்றில் நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு அடிப்­படைக் காரணம் புனித அல்­குர்ஆன் ஆகும் என்ற கருத்தை சர்ச்­சைக்­கு­ரிய ஒரு நபர் முன்­வைத்­தி­ருப்­பதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மிக வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

அல்­குர்ஆன் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் வலி­யு­றுத்தும் புனித வேத­மாகும். இதற்கு அதன் போத­னைகள் ஆதா­ர­மாக அமை­கின்­றன. உல­கத்­தா­ருக்கு அரு­ளாக அனுப்­பப்­பட்ட நபி (ஸல்) அவர்கள் உலகில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் நிலை­நாட்­டி­னார்கள் என்­பதை வர­லாறு சான்று பகர்­கின்­றது.

இலங்கை சனத்­தொ­கையில் 9.7 வீதம் மக்­க­ளாலும், உல­க­ளவில் 1.8 பில்­லியன் மக்­க­ளாலும் பின்­பற்­றப்­ப­டக்­கூ­டிய புனித அல்­குர்­ஆ­னையும், இறுதித் தூத­ரையும் இழி­வாக பேசி அறி­வுப்­பூர்­வ­மற்ற முறையில் விமர்­சிப்­ப­தா­னது உள்­நாடு மற்றும் சர்­வ­தேச முஸ்­லிம்­களின் மத உணர்வை புண்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. பேச்சு சுதந்­தி­ரத்தை மற்­ற­வர்­களின் உணர்­வு­களை நிந்­திக்­கக்­கூ­டிய வகை­யிலும் மக்கள் மதிக்­கக்­கூ­டிய விட­யங்­களை அகௌ­ர­வப்­ப­டுத்தும் வகை­யிலும் பயன்­ப­டுத்­து­வது கண்­டிப்­பாக தடுக்­கப்­பட வேண்­டிய அதே­நேரம் அதற்­கெ­தி­ராக உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

சுய இலாபம் கருதி மக்கள் மத்­தியில் சந்­தே­கங்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் அமை­தி­யின்­மை­யையும் ஏற்­ப­டுத்தும் இவ்­வா­றான பேச்­சுக்­க­ளுக்­கெ­தி­ராக அவ­சர நட­வ­டிக்கைள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்று உரிய அதி­கா­ரி­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்டிக் கொள்­கின்­றது.

குறித்த விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அவ­ச­ரப்­ப­டாமல் நிதா­ன­மா­கவும் அமை­தி­யா­கவும் செயற்­பட வேண்­டு­மென்றும், முஸ்­லிம்­களை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த விளையும் இவ்வாறான நபர்கள் வரலாறு நெடுகிலும் காணப்பட்டுள்ள அதேநேரம் இவ்விடயங்களை முஸ்லிம்கள் அறிவு ரீதியாகவும் தூரநோக்குடனும் அணுக வேண்டுமென்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.