மினாரா அகற்றப்பட்டது பிரச்சினைக்குரிய விடயமல்ல

முஸ்லிம் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் வத்துகும்புரே தம்மரத்தன தேரர்

0 579

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூர­கல ஜெய்­லானி பள்­ளி­வாசல் மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை என தெரி­வித்­துள்ள கூர­கல புனித பூமிக்குப் பொறுப்­பான வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர், விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கிறேன். என்னை ஆத்­தி­ர­மூட்­டா­தீர்கள். இவ்­வி­வ­கா­ரத்தை அடிப்­ப­டை­வா­தத்­துக்கு இட்­டுச்­செல்­லா­தீர்கள். சூபி முஸ்­லிம்­களை நான் கெள­ர­வப்­ப­டுத்­து­கிறேன். என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்கு வாருங்கள்’ என்றும் தெரி­வித்­துள்ளார்.

கூர­கல தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் மினாரா கட்­ட­மைப்பு அண்­மையில் இன­வா­தி­களால் அகற்­றப்­பட்­டமை தொடர்பில் வின­வி­ய­போதே கூர­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; கூர­கல புனித பூமி அபி­வி­ருத்­தித்­திட்டம் தற்­போது துரி­த­க­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

புனித பூமியில் அமைந்­தி­ருக்கும் பள்­ளி­வாசல் ஸியாரம் மற்றும் கொடி­கம்பம் என்­பன அகற்­றப்­ப­ட­மாட்­டாது. இவை அபி­வி­ருத்தி செய்­யப்­படும். ஸ்ரீபாத போன்று இப்­ப­குதி அபி­வி­ருத்­திக்கு உட்­ப­டுத்­தப்­படும்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு பெற்றுக் கொடுப்­ப­தற்­காக அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை மற்றும் வக்பு சபை என்­ப­ன­வற்­றுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்தேன். ஆனால் வக்பு சபையோ, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையோ என்­னுடன் பேச­வில்லை. கடி­தங்­க­ளுக்குப் பதில் கிடைக்­க­வில்லை. நானே கொழும்­புக்கு வந்து உலமா சபையைச் சந்­தித்தேன். ஆனால் எவ்­வித பலனும் ஏற்­ப­ட­வில்லை. அன்று பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொண்­டி­ருக்க முடியும். இன்று பூதா­க­ர­மா­கி­விட்­டது.

இவ்­வி­வ­கா­ரத்தில் சுமு­க­மான தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக முயற்­சித்­தாலும் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து ஒத்­து­ழைப்பு கிடைக்­க­வில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் சபை ஒன்று கூடி பேசி­யி­ருக்­கி­றார்கள். ஆனால் என்­னுடன் பேச­வில்லை. என்­னுடன் பேசுங்கள் என்றே கூறு­கிறேன்.

இவ்­வி­வ­கா­ரத்தை சர்­வ­தேச மட்­டத்­துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று வேண்­டிக்­கொள்­கிறேன். அதி­கா­ரத்தைக் கைப்­பற்றிக் கொள்­வ­தற்கு இவ்­வி­வ­கா­ரத்தை அர­சி­ய­லாக்க வேண்டாம்.

தற்­போது கூர­க­லயின் பழைய பாதை பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. புதிய வீதிக்­கட்­ட­மைப்பு நிறு­வப்­பட்­டுள்­ளது. எனவே மினாரா கட்­ட­மைப்பு அமைந்­துள்ள பாதை அவ­சி­ய­மற்­ற­தாகும். அதனால் மினாரா அகற்­றப்­பட்­டதில் எந்த பிரச்­சி­னை­களும் இல்லை.

கூர­கல அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் என்­னுடன் கலந்து பேச முன்­வ­ர­வேண்டும். கூர­கல பகுதி தொல்­பொருள் வல­ய­மாகும். இங்­குள்ள பிரச்­சி­னை­களை கலந்து பேசித் தீர்த்­துக்­கொள்­ளலாம். சூபி முஸ்­லிம்கள் இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு பெற்­றுக்­கொள்ள முன்­வர வேண்டும். அல்­லாது சமூக ஊட­கங்கள் மற்றும் ஊட­கங்கள் மூலம் அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்­பு­வ­தனால் நன்மை கிடைக்­கப்­போ­வ­தில்லை.
அத்­தோடு நாம் ஏதும் தவறு செய்­தி­ருந்தால் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுத்­துங்கள். கூர­கல பகுதி பெளத்­தர்­களின் தொல்­பொருள் வல­ய­மாகும். நான் ஏதும் குற்­றங்கள் செய்­தி­ருந்தால் பொலிஸில் முறை­பாடு செய்­யுங்கள் என்றார்.

நிர்­வாக சபை உறுப்­பினர் ஏ.எம்.ஜே.எம். ஜவுபர்
இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜவு­பரை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு வின­வி­யது. அவர் விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் நிர்­வாக சபை உட­ன­டி­யாக செயலில் இறங்கி செயற்­ப­ட­வேண்டும். ஆனால் எம்­ம­வர்கள் இது தொடர்பில் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. எங்­க­ளுக்குள் ஒரு சிறந்த தலை­மைத்­துவம் தேவை. இப்­பள்­ளி­வாசல் 800 வரு­டங்கள் பழை­மை­யா­ன­தாகும். எங்கள் வர­லாற்-று நிலங்கள், பூர்­வீகம் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். இவற்றை அழிப்­ப­தற்கே சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. ஜெய்­லா­னியைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு அனை­வரும் முன்­வ­ர­வேண்டும் என்றார்.

சூபி தரீக்­காக்­களின் உயர்­பீட நிர்­வாக சபை உறுப்­பி­னர்
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் சுமூ­க­மான தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்கு சூபி தரீக்­காக்­களின் உயர்­பீட நிர்­வாக உறுப்­பினர் ரியாஸ் ­சா­லியை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு வின­வி­யது.

சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் நெல்­லி­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்கிறது. எமது பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். தரீக்காக்களின் உயர்பீடம் அனைத்து மக்களையும் இனங்களையும் கெளரவப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கே விரும்புகிறது.

நெல்லிகல தேரருடன் கலந்துபேசி இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்பதில் எமக்கு நம்பிக்கையிருக்கிறது.

ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடனன்றி எம்முடனே கலந்துரையாடப்படவேண்டும் என ரியாஸ்சாலி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.