தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் பாகிஸ்தானுக்கு ஒரு டொலரேனும் வழங்க கூடாது

ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலி

0 667

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ஒரு டாலர் கூட அமெரிக்கா நிதியுதவி செய்ய கூடாது. சில விஷயங்களில் எந் தெந்த நாடுகளுடன் உறவு வைத்து கொள்வது, எந்தெந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது என்பது குறித்து நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்  என ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘தி அட்லான்டிக்’ இதழுக்கு அளித்த பேட்டியில் நிக்கி ஹேலி மேலும் கூறியிருப்பதாவது,

நாம் கண்ணை மூடிக் கொண்டு ஏராளமான நிதியுதவிகளை அளித்து வருகிறோம். அதற்குப் பதில் அந்தப் பணத்தில் நாமே நடவடிக்கை எடுக்க முடியும். உதாரணத்துக்குப் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாட்டுக்கு பில்லியன் கணக்கில் அமெரிக்கா நிதியுதவி வழங்கியது. ஆனால், அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களை தீவிரவாதிகள் கொன்று வருகின்றனர். அவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவும், அடைக்கலமும் கொடுத்து வருகிறது. எனவே, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி கொடுக்கக் கூடாது. முதலில் அவர்கள் தீவிரவாதிகளை ஒடுக்கட் டும். நல்ல விஷயங்கள் நடந்தால், அதன்பிறகு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகவும், இராணுவத்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வந்தது. இந்த நிதியை (300 மில்லியன் டொலர்) அதிபர் ட்ரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.