சஹ்ரானுடன் அடிக்கடி தொடர்புகொண்ட நபரை இராணுவ புலனாய்வுப் பிரிவு காப்பாற்றியது ஏன்?

- முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமை மீறல் மனுவூடாக வெளிச்சத்துக்கு வரும் தகவல்கள்

0 352

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று (2019.04.21) நடாத்­தப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து, அத்­தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக செயற்­பட்ட சஹ்ரான் ஹசீ­முடன் அடிக்­கடி தொடர்­பினை ஏற்­ப­டுத்­திய நபர் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது, அந் நபரை பாது­காப்பு அமைச்சு ஊடாக இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் அப்­போ­தைய பிர­தானி சூல கொடித்­து­வக்கு மீட்டுச் சென்­றுள்­ளமை தொடர்பில் விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் அவ்­வாறு சி.ஐ.டி. பிடி­யி­லி­ருந்து மீட்டு இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களால் அழைத்து செல்­லப்­பட்ட நபர் யார் எனும் கேள்வி தற்­போது பர­வ­லாக எழுந்­துள்­ளது.
தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, இலங்கை சி.ஐ.டி.யின­ருடன் இணைந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ அதி­கா­ரிகள், தொழில் நுட்ப ரீதி­யி­லான உத­வி­களை செய்­தி­ருந்­தனர். அவர்கள் தற்­கொலை குண்­டு­தா­ரி­களின் இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களை பகுப்­பாய்வு செய்து விசா­ர­ணை­க­ளுக்­கான தக­வல்­களை வழங்­கி­யி­ருந்­தனர். இந் நிலையில் இணைய அடை­யாள முக­வரி ஒன்­றினை ( ஐ.பி. முக­வரி) கண்­ட­றிந்த எப்.பி.ஐ. அதி­கா­ரிகள், அத­னூ­டாக சஹ்­ரா­னுடன் ஒருவர் அடிக்­கடி தொடர்பில் இருந்­துள்­ள­மையை வெளிப்­ப­டுத்தி சி.ஐ.டி.யின­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.

அதன்­பி­ர­காரம் நபர் ஒரு­வரை சி.ஐ.டி.யினர் விசா­ரணை செய்­துள்ள நிலையில், அவர் சஹ்ரான் தொடர்­பிலோ அல்­லது தேசிய தெளஹீத் ஜமா அத் தொடர்­பிலோ தக­வல்­களை வெளிப்­ப­டுத்த மறுத்­துள்ளார். இத­னை­ய­டுத்து, பாது­காப்பு அமைச்சின் ஊடாக சி.ஐ.டி.யினரை அனு­கி­யுள்ள அப்­போ­தைய இரா­ணுவ புல­னாய்வுப் பணிப்­பாளர் சூல கொடித்­து­வக்கு, அந் நபரை மீட்டுச் சென்­ற­தா­கவும், குறித்த நட­வ­டிக்­கைகள் இரா­ணுவ புல­னாய்வு நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­டை­யது என அவர் தெரி­வித்­த­தா­கவும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உயர் நீதி­மன்­றுக்கு, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றதை தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி. இற்கு தலைமை வகித்த அத்­தி­ணைக்­க­ளத்தின் அப்­போ­தைய பிர­தானி ஓய்­வு­பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர தாக்கல் செய்­துள்ள 36 பக்க அடிப்­படை உரிமை மீறல் மனுவின் 59 ஆம் இலக்­க­மி­டப்­பட்ட விட­யத்தில் மேற்­படி விவ­காரம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், பிர­தான தற்­கொலை குண்­டு­தா­ரி­யான சஹ்ரான் ஹசீமின் மிக நெருங்­கிய சகா­வான ‘குட்டி சஹ்ரான்’ அல்­லது மாத்­தளை சஹ்­ரா­னுடன் அரச உளவுச் சேவையின் அதி­காரி ஒருவர் மிக நெருக்­க­மான தொடர்பில் இருந்­தமை வெளிப்­பட்­டி­ருந்­தது. ‘ சொனிக் சொனிக் ‘ எனும் பெயரால் அறி­யப்­பட்ட குறித்த அரச உளவுச் சேவை அதி­காரி தொடர்பில் கூடுதல் தக­வல்கள் தற்­போது ஷானி அபே­சே­க­ரவின் அடிப்­படை உரிமை மீறல் மனு­வூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சஹ்ரான் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கா­மையால் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்­த­தாக கூறி குளி­யாப்­பிட்­டிய நீதிவான் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பீ அறிக்கை பிர­காரம் தான் கைது செய்­யப்­ப­டு­வ­தையும் தடுப்புக் காவலில் வைக்­கப்­ப­டு­வ­தையும் தடுத்து உத்­த­ர­வி­டு­வ­துடன் தனக்கு 10 கோடி ரூபாவை நட்­ட­ஈ­டாக செலுத்த உத்­த­ர­வி­டு­மாறும் கோரி குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­துள்ளார்.

சட்­டத்­த­ரணி மஞ்­சுள பால­சூ­ரிய ஊடாக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குறித்த மனுவில், 14 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில், மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­காரம், கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீவு பொலிஸ் காவ­ல­ரணில் இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் முதல் ஒவ்­வொரு சம்­பவம் தொடர்­பிலும் சி.ஐ.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் தொடர்பில் ஷானி அபே­சே­கர விவ­ரித்­துள்ளார்.

அதில் வவுண தீவு சம்­பவம் தொடர்பில் சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தா­கவும், அந்த சம்­பவம் தொடர்பில் 5.12.2018, 8.12.2018, 14.12.2018 மற்றும் 03.01.2019 ஆம் திக­தி­களில் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வினர் தமக்கு அறிக்­கை­களை அளித்த நிலையில், அவை அனைத்­திலும் அந்த குற்­றத்தின் பின்னால் புலிகள் இருப்­ப­தா­கவே கூறப்­பட்­ட­தாக ஷானி அபே­சே­கர சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­விட 03.12.2018 அன்று அரச உளவுச் சேவை பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜய­வர்­தன, சி.ஐ.டி. பிர­தா­னிக்கு வழங்­கிய தக­வலும், அத­னூ­டாக மீட்­கப்­பட்ட ‘ மோட்டார் சைக்கிள் ஜகட் ‘ மற்றும் பாட­சாலை பை ஆகி­யன தொடர்­பிலும் ஷானி அபே­சே­கர சந்­தேகம் வெளி­யிட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலையில், மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு சம்­ப­வத்தை அடுத்து உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் விக்­ர­ம­சே­க­ரவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே சி.ஐ.டி.க்கு சஹ்ரன் தொடர்பில் முதன் முறை­யாக தக­வல்கள் வெளிப்­பட்­ட­தா­கவும், எனினும் அரச உளவுச் சேவை மற்றும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­விடம் அந்த தக­வல்கள் இருந்தும் அவற்றை தம்­முடன் பகிர்ந்­து­கொள்­வ­தி­லி­ருந்து உளவுப் பிரி­வுகள் தவிர்ந்­தி­ருந்­துள்­ள­தாக ஷானி அபே­சே­கர தனது மனு­வூ­டாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், பிர­தான தற்­கொலை குண்­டு­தா­ரி­யான சஹ்ரான் ஹசீமின் மிக நெருங்­கிய சகா­வான ‘குட்டி சஹ்ரான்’ அல்­லது மாத்­தளை சஹ்­ரா­னுடன் அரச உளவுச் சேவையின் அதி­காரி ஒருவர் மிக நெருக்­க­மான தொடர்பில் இருந்­தமை வெளிப்­பட்­டி­ருந்­தது. ‘ சொனிக் சொனிக் ‘ எனும் பெயரால் அறி­யப்­பட்ட குறித்த அரச உளவுச் சேவை அதி­காரி தொடர்பில் கூடுதல் தக­வல்கள் தற்­போது ஷானி அபே­சே­க­ரவின் அடிப்­படை உரிமை மீறல் மனு­வூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

குறித்த மனுவில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமைய, சொனிக் சொனிக் எனும் பெயரால் அறி­யப்­படும் அரச உளவுச் சேவை அதி­காரி உப பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டார என்­பவர் ஆவார். விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்ட சிம் அட்டை ஒன்­றினை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணையில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த சிம் அட்­டையின் பதிவு தொடர்பில் விசா­ரித்த போது, அது கொழும்பு நகர போக்­கு­வ­ரத்து பிரிவின் பெண் பொலிஸ் சார்ஜன் ஒரு­வரின் பெயரில் இருந்­த­தா­கவும் அவரை விசா­ரித்த போது, அந்த சிம் அட்டை தன்­னுடன் தொடர்பில் இருக்கும் உளவுச் சேவை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டா­ர­வுக்கு தான் பெற்­றுக்­கொ­டுத்­தது எனவும் தெரி­வித்­த­தாக முன்னாள் சி.ஐ.டி. பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர தனது அடிப்­படை உரிமை மீறல் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதன்­போது உப பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டா­ரவை தான் விசா­ரிக்க முயன்­ற­தா­கவும், அப்­போது அரச உளவுச் சேவையின் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த சம்பத் லிய­னகே, அவரை விசா­ரிக்க வேண்டாம் எனவும் அது உளவுத் துறையின் திட்டப்படி முன்னெடுக்கப்பட்ட தொடர்பாடல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அக்கோரிக்கையை தான் நிராகரித்து உப பொலிஸ் பரிசோதகர் பண்டாரவை விசாரணை செய்ததாகவும், அவர் எந்த விடயத்தையும் வெளிப்படுத்த மறுத்ததாகவும் ஷானி அபேசேகர மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தாக்குதலுக்கான பொறுப்பை சர்வதேச பயங்கரவாத கும்பலான ஐ.எஸ். ஐ.எஸ். ஏற்பதற்கான கோரிக்கை இந்த மாத்தளை சஹ்ரான் எனும் சந்தேக நபராலேயே முன் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.