இலங்கை ஊடகத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சியின் மறைவு

0 503

இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் சிங்­கள மொழி மூல முறைப்­பாட்டு பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் கமல் லிய­னா­ராச்­சியின் மறைவு சிங்­கள மொழி­மூல ஊட­கத்­து­றைக்கு மட்­டு­மல்­லாது இலங்கை திரு­நாட்டின் ஊட­கத்­து­றைக்கு பேரி­ழப்­பாகும். ஊட­கத்­து­றையில் அவ­ரது பங்­க­ளிப்பு ஊட­க­வி­ய­லா­ள­ராக, ஊடக வள­வா­ள­ராக, ஊடக அவ­தா­னி­யாக, ஊடக சமூ­கத்­து­ட­னான நண்­ப­ராக என்று பல்­வேறு துறை­க­ளிலும் இருந்து வந்­தது என்று இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் விடுத்­துள்ள இரங்கல் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
2022 பெப்­ர­வரி 20 ஆம் திகதி பயா­க­லையில் திடீர் மார­டைப்பு கார­ண­மாக கமல் லிய­னா­ராச்சி மர­ணிக்கும் வரையில் ஊட­கத்­து­றைக்­காக அய­ராத பங்­க­ளிப்பை வழங்கி வந்­துள்ளார்.

கமல் லிய­னா­ராச்சி ‘யுக்­திய’ பத்­தி­ரிகை மூலம் ஊடகத் தொழிலை ஆரம்­பித்து பின்னர் லக்­பிம பத்­தி­ரி­கையில் நீண்ட கால­மாக ஊட­க­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாட்டு பொறுப்­ப­தி­கா­ரி­யாக சிங்­கள மொழி மூல முறைப்­பா­டு­க­ளுக்கு பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்ட அவர் சிறிது காலம் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவில் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழ­மையும் கூட அலு­வ­லகம் வந்து பணி­யாற்­றிய அவரின் இழப்பு சிங்­கள மொழி ஊட­கத்­து­றைக்கு ஈடு செய்ய முடி­யா­த­தாகும்.

அவர் இந்த ஊடகப் பணியை முன்­னெ­டுத்த இவ்­வ­ளவு காலமும் எந்த சந்தர்ப்பத்­திலும் இன, மத, மொழி அடிப்­ப­டையில் பாகு­பாடு காட்­டி­ய­தில்லை. அனைத்து பேதங்­க­ளுக்கும் அப்பால் இருந்து சேவை­யாற்­றிய ஒரு­வ­ரா­வ­தோடு ஊடக சுதந்­திரம், ஊட­கங்­களில் வெளி­வரும் போலிச் செய்­தி­களால் சமூ­கத்தில் இனங்­க­ளுக்கும் மத ரீதி­யா­கவும் ஏற்­படும் பாதிப்­புக்­க­ளுக்கு எதி­ரா­கவும் போரா­டிய ஒரு­வ­ரா­வ­தோடு ஊட­க­வி­ய­லாளர்கள் ஊடக பணியை செய்­கின்ற போது ஊடக ஒழுக்­கக்­கோ­வையை பின்­பற்­றி­யவர்களாக சமூகப் பொறுப்­புணர்வோடு ஊடக தொழிலில் ஈடு­பட வேண்டும் என்ற இலட்­சி­யத்தில் பாடு­பட்ட ஒரு­வ­ராவார்.

அவர் இலங்கை பத்­தி­ரிகை முறைப்­பாட்டு ஆணைக்­கு­ழுவில் ஓர் அதி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய போதும் ஊட­கத்­து­றைக்கும் ஊட­க­வி­ய­லாளர்களுக்கும் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டும்­போ­தெல்லாம் நாட்டில் உள்ள ஊடக அமைப்­புக்கள், சுதந்­திர ஊடக இயக்கம் உட்­பட ஊடக தரப்­பி­னரை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அமைப்­புக்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக குரல் கொடுத்த ஒரு­வ­ராவார்.

நாட­ளா­விய ரீதியில் ஊட­க­வி­ய­லாளர்களின் அறி­விலும் ஆற்­றல்­க­ளிலும் ஒரு திறன் விருத்தி ஏற்­பட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் ஏற்­பாடு செய்யும் ஊடக பயிற்சி நெறி­களில் சிறந்த ஈடு­பாட்­டுடன் பங்­கு­பற்­றி­ய­தோடு இலங்கை முழு­வ­திலும் கட­மை­யாற்றும் எல்லா ஊட­க­வி­ய­லாளர்களு­டனும் இன, மத, மொழி பேதங்­க­ளுக்கு அப்பால் நின்று அனை­வ­ரதும் நண்­ப­னாக செயற்­பட்டார்.

ஊடக ஒழுக்­கக்­கோவை, தகவல் அறி­வ­தற்­கான உரிமைச் சட்டம், புல­னாய்வு ஊட­க­வியல் என்று பல துறை­களில் சிறந்த பரிச்­சயம் பெற்ற ஊடக வள­வா­ள­ராக கட­மை­யாற்­றிய அவரின் இழப்பு ஊடக சமூ­கத்­திற்கு பேரி­ழப்­பாக அமை­வ­தோடு ஈடு செய்ய முடி­யாத ஒரு வெற்­றி­டத்­தையும் ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

தெற்கின் பயா­க­லையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கமல் லியனாராச்சி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவதோடு அவரது மணைவி கமனி லியனாராச்சியும் ஒரு சிறந்த ஊடகவியலாளராவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை பயாகலையில் இடம்பெற்றன. ஏராளமான ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் பிரமுகர்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் இறுதிக் கிரியைகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.