ஜெய்லானி பள்ளிவாசலை கொழும்பில் உள்ளவர்கள் நிர்வகிக்க இடமளிக்க முடியாது

நெல்லிகல வத்துரேகும்புர தம்மரதன தேரர் குற்றச்சாட்டு

0 630

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பில் குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளி­லி­ருந்து பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­வர்கள் கூர­க­லயில் இன நல்­லி­ணக்­கத்தை மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்­டினை சிதைப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். கொழும்­பி­லி­ருந்து வந்து நஞ்சு விதை­களை விதைக்கும் முயற்­சி­க­ளுக்கு நீங்கள் அகப்­பட்டுக் கொள்ள வேண்­டா­மென கூர­கல முஸ்­லிம்­களை வேண்­டிக்­கொள்­கிறேன் என கூர­கல நெல்­லி­கல வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரி­வித்தார்.

கூர­க­லயில் கிரிக்­கெட்­போட்­டி­யொன்­றினை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது ‘இப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுடன் நாம் இருக்­கிறோம்’. எங்கள் பன்­சலை இருக்­கி­றது. கூர­க­லயில் முஸ்­லிம்­களின் வழி­பா­டு­களை நாம் இல்­லாமற் செய்ய மாட்டோம். புதி­தாக நாம் வழி­ப­டு­வ­தற்கு ஓர் இடம் ஏற்­பாடு செய்து தரு­கிறோம். சிவ­னொ­ளிபாதமலை போன்று கூர­க­லயை மாற்­றவே நாம் விரும்­பு­கின்றோம்.

சிவ­னொளிபாத­ம­லை ­போன்று கூர­க­லயை உரு­வாக்­கு­வதை விரும்­பாத முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் கொழும்பில் குளி­ரூட்­டிய அறை­க­ளி­லி­ருந்து கொண்டு எதிர்க்­கி­றார்கள். அவர்கள் உங்­களை நெறிப்­ப­டுத்­து­கி­றார்கள். இவர்­களின் சூழ்ச்­சி­க­ளுக்கு கூர­கல முஸ்­லிம்கள் அடி­மை­யா­கி­வி­டா­தீர்கள்.

அவர்கள் இப்­ப­குதி ஏழை முஸ்­லிம்­க­ளுக்கு உத­வு­வ­தில்லை. இப்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தில்லை. அதனால் கூர­கல பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை பலாங்­கொடை முஸ்­லிம்கள் கையேற்க வேண்­டு­மென நாம் கூறு­கிறோம்.

ஏன் நீங்கள் உங்கள் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை 150 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு நிர்­வ­கிக்க இட­ம­ளித்­துள்­ளீர்கள்-?

முஸ்­லிம்­க­ளுடன் எமக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. நாங்கள் முஸ்­லிம்­க­ளுடன் நல்­லி­ணக்­கத்­துடன் வாழவே விரும்­பு­கிறோம். கூர­கல பகு­தியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் பெளத்த இளை­ஞர்­க­ளுக்கு மத்­தியில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே கிரிக்கெட் போட்­டி­யினை நாம் ஏற்­பாடு செய்தோம்.
முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் ஏதும் பிரச்­சி­னைகள் இருந்தால் அவற்றை நாம் கலந்­து­ரை­யாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கூர­கல ரஜ­ம­கா­வி­கா­ரையின் கார­ண­மா­கவே இப்­ப­குதி வீதிக்­கட்­ட­மைப்பு உட்­பட பல்­வேறு அபி­வி­ருத்­திகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

மோச­மான கொள்­கை­களைக் கொண்ட மக்கள் இக்­கி­ரா­மத்­திலும் இருக்­கி­றார்கள். நாம் அவர்­க­ளுக்குப் பயப்­ப­டப்­போ­வ­தில்லை.சவா­லாக எண்­ணு­வ­து­மில்லை. இங்கு எதிர்­கா­லத்தில் கலா­சார மத்­திய நிலையம் தொழிற்­ப­யிற்சி நிலையம் என்­பன அமைக்­கப்­படும். தொழிற்­பேட்­டை­யொன்றும் நிறுவ திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இப்பகுதி முஸ்லிம்களுக்கும், இளைஞர்களுக்கும் நான் ஒன்றைக் கூறவிரும்புகிறேன். உங்களது எதிர்காலம் கூரகல ரஜமகாவிகாரையிடமே உள்ளது. உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கூரகல ரஜமகாவிகாரையிடமே இருக்கிறது. முஸ்லிம்களின் பொருளாதார அபிவிருத்தி கூரகல விகாரை மூலமே ஏற்படவுள்ளது. உங்களது பயணம் எம்முடனே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.