செயலணி முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் இலக்கு வைப்பது ஏன்?

ஞானசாரரிடம் நீதியமைச்சர் நேரடியாக கேள்வி

0 333

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிறு­வப்­ப­ட­வில்லை. நாட்டில் பல்­வேறு தனியார் சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.

இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை மாத்­திரம் இலக்கு வைப்­பது பொருத்­த­மற்­றது என நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி கடந்த சனிக்­கி­ழமை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­ல­ணி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்தார்.

நீதி­ய­மைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலை­வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லா­ள­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர் உட்­பட செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் ஏழுபேர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதில் முஸ்லிம் உறுப்­பி­ன­ர் ஒருவரும் கலந்து கொண்­டி­ருந்தார்.

கலந்­து­ரை­யா­டலில் நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி தொடர்ந்தும் கருத்­துத்­தெ­ரி­விக்­கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­ப­தியின் எண்­ணக்­கரு தொடர்பில் ஆராய்ந்து ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கா­கவே அமைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் ஓர் இக்­கட்­டான நிலைக்குத் தள்­ளி­விடும் வகையில் ஆலோ­ச­னை­க­ளையும் சிபா­ரி­சு­க­ளையும் வழங்­கு­வ­தற்­காக அல்ல.

முஸ்லிம் தொடர்­பான விவ­கா­ரங்கள் முஸ்லிம் சமு­தா­யத்தின் கருத்­து­க­ளையும் பெற்றுக் கொண்­டதன் பின்பு எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யிலே கையா­ளப்­ப­ட­வேண்டும். இச்­செ­ய­லணி ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு மாத்­தி­ரமே நிறு­வப்­பட்­டுள்­ளதே ஒழிய சட்டம் இயற்­று­வ­தற்­காக அல்ல.

சட்டம் அல்­லது சட்ட திருத்­தங்கள் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் பின்பு சட்ட வரைபு திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­படும். அதன்பின் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­படும். சட்­டமா அதி­பரின் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்பு மீண்டும் அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். அதன்­பின்பு குறித்த சட்டம் அல்­லது சட்­ட­தி­ருத்­தங்கள் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்­பும்­கூட எதிர்ப்­புகள் இருந்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் அதுவே நடை­மு­றை­யாகும்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­லணி முஸ்­லிம்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களைக் கையாண்டு அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­தொன்று அல்ல என்றார்.

வக்பு சபைத் தலைவர்
வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனும் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டி­ருந்தார். வக்பு சபைத் தலை­வ­ரிடம் ஞான­சார தேர­ரினால் சில விளக்­கங்கள் கோரப்­பட்­டன.

நாட்டில் பல பகு­தி­களில் வர­லாற்று புகழ்­வாய்ந்த ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ள­தாக சூபி முஸ்­லிம்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணி­யிடம் புகார் செய்­துள்­ளார்கள். இந்த ஸியா­ரங்கள் மீண்டும் திறக்­கப்­ப­ட­வேண்டும் என ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் பதி­ல­ளிக்­கையில் வக்பு சபைக்­கென சில சட்ட ஒழுங்கு விதிகள் உள்­ளன. அதன்­மூ­லமே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் நிலவும் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை நாங்­களே கலந்து பேசி தீர்த்துக் கொள்­கிறோம். எங்­க­ளுக்குள் நிகழும் இவ்­வா­றான சிறிய பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்த்துக் கொள்­ளலாம் என ஆராய்ந்து வரு­கிறோம் என்றார்.

வெளி­வி­வ­கார அமைச்சர்
பொது மக்கள் பாது­காப்பு அமைச்சருடன் கலந்­து­ரை­யாடல்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான ஜனா­தி­பதி செய­லணி வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத்­வீ­ர­சே­கர ஆகி­யோ­ரையும் சந்­தித்து செய­ல­ணியின் செயற்­பா­டுகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­யது.

இக்­க­லந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் ஊடக பிரிவு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனா­தி­ப­தியின் எண்­ணக்­க­ரு­வினை நிறை­வேற்­றிக்­கொள்­­வ­தற்­காக ஜனா­தி­பதி செய­ல­ணி­யினால் ஜனா­தி­ப­திக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கையின் பிரே­ர­ணை­களை ஆராய்ந்து உரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­வ­தாக குறிப்­பிட்ட அமைச்­சர்கள் தெரி­வித்­துள்­ளார்கள்.

இலங்கை ‘ஒரே நாடு என்­பதால் ஒரே சட்டம்’ அவ­சி­ய­மாகும். நாட்டின் தேசிய பாது­காப்­பினை உறுதி செய்து கொள்­வ­தற்­கா­கவே நாட்­டினுள் ஒரே சட்டம் அமுல் நடத்­தப்­பட வேண்டும் என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.
நீதிக்­கட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்கொள்ளப்பட்டுள்ள டிஜிட்டல் செயல்முறை, புதிய நீதிமன்றங்கள் மற்றும் நீதியமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் நீதியமைச்சர் கலந்துரையாடலின் போது தெளிவு படுத்தனார்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாட்டின் வெளிவிவகார கொள்கைகள் அரசாங்கம் பங்கேற்கவுள்ள வெளிநாட்டு மாநாடுகள் தொடர்பில் கலந்துரையாடலின் போது விளக்கமளித்தார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.