டாக்டர் ஷாபியின் கைதானது வைத்திய துறைக்கு இழுக்கு

அஸாத் சாலியும் பழிவாங்கப்பட்டார் என சபையில் தலதா அத்துகோரல சுட்டிக்காட்டு

0 388

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பத்­தி­ரி­கை­களில் வெளி­யான பொய்க்­குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் வைத்­தியர் ஷாபி மற்றும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி போன்­ற­வர்கள் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்­டார்கள்.

இவ்­வா­றான நிலை­மையை மாற்­று­வ­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் கீழ் தனி­யான மேற்­பார்வை பிரிவு ஒன்றை அமைத்து உரிய ஆதா­ரத்­துடன் கைது செய்­யும்­வ­கையில் சட்­டத்தில் திருத்தம் மேற்­கொள்­ள­ வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பி­னரும் முன்னாள் நீதி அமைச்­ச­ரு­மான தலதா அது­கோ­ரல தெரி­வித்தார்.

அத்­தோடு, டாக்டர் சாபியின் கைது முழு வைத்­திய துறைக்கும் ஏற்­பட்ட பாரிய இழுக்­காகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற நீதி அமைச்சின் கீழான குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறை சட்­டக்­கோவை, ஆள­ணி­யி­ன­ருக்­கெ­தி­ரான கண்­ணி­வெ­டி­களைத் தடை­செய்தல் சட்­ட­மூலம், நீதித்­துறை (திருத்தச்) சட்­ட­மூ­லங்கள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,
வழக்கு விசா­ர­ணை­களை விரை­வாக முடித்­துக்­கொள்­வ­தற்காக நாளாந்தம் வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது நல்ல விடயம். என்­றாலும் நாளாந்தம் வழக்கு விசா­ரணை மேற்­கொள்ளும் போது நிதி தொடர்­பான பிரச்­சினை சாதா­ரண மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது. எமது காலத்தில் பாரிய மோச­டி­கா­ரர்கள் தொடர்பில் விசா­ரிக்க ட்ரயல் எட் பார் விசா­ரணை முன்­னெ­டுத்தோம். அவர்­க­ளுக்கு நிதி பிரச்­சினை ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

அத்­துடன் வழக்கு தாம­தத்தை குறைக்க நீதி­ப­திகள், நீதி­மன்ற வச­திகள் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். தாம் விரும்­பிய சட்­டத்­த­ர­ணியை தெரிவு செய்யும் உரிமை வழங்­கப்­பட வேண்டும். நீதி­ப­திகள் நிய­மிக்­கையில் அவர்­களின் தகைமை,செயற்­திறன் குறித்து கவனம் செலுத்த வேண்டும். மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் நிய­மிக்­கையில் சட்­டமா அதிபர் திணைக்­களம், தற்­பொ­ழு­துள்ள நீதி­ப­தி­களின் கருத்தும் பெறப்­ப­டு­கி­றது. நீதி­ப­தி­க­ளுக்கு பயிற்சி வழங்கும் நிறு­வ­னத்தை மேலும் பலப்­ப­டுத்த வேண்டும்.

அத்­துடன் தற்­போது ஊடக பிர­பல்­யங்கள் கைது செய்யும் நட­வ­டிக்கை இடம்­பெ­று­கின்­றது. எந்த கார­ண­மு­மின்றி ஊட­கத்தில் சொல்­வதை வைத்து சிலர் தடுத்­து­வைக்­கப்­ப­டு­கின்­றனர். வைத்­தியர் ஷாபி அதற்கு சிறந்த உதா­ரணம். கீர்த்தி மிக்க வைத்­தி­ய­ரான அவர் தடுத்து வைக்­கப்­பட்டார். பெண்கள் சம்­பந்­த­மாக 4000 சத்­தி­ர­சி­கிச்சை தொடர்பில் பத்­தி­ரி­கை­யொன்றில் வெளி­யான செய்­தியை வைத்து அவரை பின்­தொ­டர்ந்து சென்று கார­ண­மின்றி ஒன்­றரை வரு­டங்கள் வரை தடுத்து வைக்­கப்­பட்டார்.அவர் பட்ட கஷ்­டங்­களை ஊட­க­மொன்­றுக்கு கூறி­யி­ருந்தார். இவை அர­சியல் பழி­வாங்­கல்­க­ளாக கூட இருக்­கலாம். அவரின் கைது முழு வைத்­திய துறைக்கும் ஏற்­பட்ட பாரிய இழுக்­காகும். அவரின் பிள்­ளைகள் மன­த­ளவில் பாதிக்­கப்­பட்­டனர்.

அதே­போன்று மேல்­மா­காண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி என்ன அடிப்­ப­டையில் தடுத்து வைக்­கப்­பட்டார். இன்று விடு­விக்­கப்­பட்­டுள்ளார். அதனால் விசா­ரணை நடத்தும் நிறு­வ­னங்கள் தங்­க­ளுக்கு தேவை­யா­ன­வாறு செயற்படுகின்றன.சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் தனியான மேற்பார்வை பிரிவு ஒன்றை அமைத்து தகவல்களை உறுதி செய்த பின்னர் சட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க சி.ஐ.டி அல்லது பொலிசாருக்கு வழிகாட்டவும் உரிய ஆதாரத்துடன் கைது செய்யும்வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.