ஆளுமைமிக்க இராஜதந்திரியாக தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவு

0 355

2021 ஆம்‌ ஆண்டின்‌ இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்­கான ஆளு­மை­மிக்க நபர்­களின்‌ பட்­டி­யலில் ஓமா­னுக்­கான இலங்கைத்‌ தூதுவர்‌ அமீர்‌ அஜ்வத்‌ உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.
உலக வளர்ச்சி மன்­றத்தின்‌ 2022 ஆம் ஆண்டின்‌ ஜன­வரி மாத சஞ்­சிகை தனது 2021 ஆம்‌ ஆண்டின்‌ சிறந்த ஆளு­மை­மிக்க நபர்­களின்‌ பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

அதில் ஓமா­னுக்­கான இலங்கைத்‌ தூதுவர்‌ அமீர்‌ அஜ்வத்‌ ‘2021 ஆம்‌ ஆண்டின்‌ இரா­ஜ­தந்­திர உற­வு­க­ளுக்­கான ஆளுமை மிக்க நபர்” எனப் பெயர்­சூட்­டப்­பட்­டுள்ளார்.
இரா­ஜ­தந்­திரம்‌ மற்றும்‌ இரு தரப்பு உற­வு­களில்‌ மைல்­கற்­களை உரு­வாக்­கு­வதில்‌ சிறந்த பங்­க­ளிப்பை வழங்­கி­ய­மைக்­காக இலங்‌கைத்‌ தூதுவர்‌ அமீர்‌ அஜ்­வத்­துக்கு இந்த கௌரவம்‌ வழங்­கப்­பட்­டுள்­ளது.

2021 ஆம்‌ ஆண்டில்‌ பல்­வேறு துறை­களில்‌ தமது தொழில்‌ மற்றும்‌ சொந்த வாழ்வில்‌ உலக வளர்ச்­சிக்குப்‌ பங்­க­ளிப்புச்‌ செய்த உலகின்‌ பல நாடு­களைச்‌ சேர்ந்த ஆளுமைமிக்க நபர்‌கள்‌ இத் தெரிவில்‌ இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.