கசாவத்தை ஆலிம் அப்பா ஸியாரம் நடந்தது என்ன?

0 3,511

ஏ.ஆர்.ஏ.பரீல்

சுமார் 130 வரு­ட­கால வர­லாற்றுப் புகழ்­மிக்க முஸ்­லிம்­களின் மர­பு­ரி­மை­களில் ஒன்­றான அக்­கு­றணை கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் வஹா­பிஸ கொள்­கை­க­ளு­டைய தீவி­ர­வாத குழுக்­களால் சிதைத்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறும் அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
இது தொடர்பில் சூபி தரீக்­காக்­களின் உயர்­பீ­டத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் ஏ.எல்.அஹமட் ரிஸி கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சூபி முஸ்­லிம்கள் ஸியா­ரங்­களை கெள­ர­வப்­ப­டுத்­து­கி­றார்கள். ஆனால் வஹா­பிஸ கொள்­கை­களைக் கொண்ட தீவி­ர­வா­திகள் ஸியா­ரங்­களை கண்­டிக்­கி­றார்கள். பாரம்­ப­ரிய முஸ்­லிம்­களின் இந்த வழி­பா­டு­களை வாய்­மொழி மூலம்,மற்றும் இலக்­கி­ய­ரீ­தியில் எதிர்க்­கி­றார்கள் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் சிதைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ்மா அதி­ப­ருக்கு முறை­யிட்­ட­தை­ய­டுத்து பொலிஸ்மா அதிபர் அல­வத்­து­கொட பொலிஸ் நிலைய பொறு-ப்­ப­தி­கா­ரியை தொடர்­பு­கொண்டு உரிய பாது­காப்பு வழங்­கு­மாறு கோரி­யுள்­ள­தாக டாக்டர் எ.எல்.அஹமட் ரிஸி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் அக்­கு­றணை பெரிய பள்­ளி­வாசல் வளா­கத்­தி­னுள்ளே அமைந்­துள்­ளது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தலைவர் மொஹமட் ராபியை தொடர்பு கொண்டு விடி­வெள்ளி வின­வி­ய­போது ‘குறிப்­பிட்ட ஸியாரம் உடைக்­கப்­ப­ட­வில்லை’. சிதைக்­கப்­ப­ட­வு­மில்லை. ஸியாரம் சிதைக்­கப்­பட்­ட­தாக பொய் வதந்­தியே பரப்­பப்­பட்­டுள்­ளது. எமது பாரம்­ப­ரியம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது என்று கூறினார்.

அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீ­டத்தின் பொதுச் செய­லாளர் அஹமட் ரிஸி, கசா­வத்தை ஆலிம் அப்பா பற்றி கருத்துத் தெரி­விக்­கையில், கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் இன்று பல தசாப்­தங்­க­ளுக்கு முன்பு ஒரு கட்­டி­டத்­துக்குள் அமைந்­தி­ருந்­தது. அக்­கட்­டி­டத்தின் கூரை மற்-றும் யன்­னல்கள் 1996 ஆம் ஆண்டு ஒரு குழு­வி­னரால் உடைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து ஸியாரம் மாத்­தி­ரமே எஞ்­சி­யது.

கசா­வத்தை ஆலிம் அப்பா மக்­காவில் ஷேகுல் உலமா என்ற பட்டம் பெற்­றவர். இவ­ரது சரி­யான பெயர் அஹ்மத் இப்னு முஹம்மத் என்­ப­தாகும். இலங்­கையில் முத­லா­வது மத்­ரஸா இவ­ரா­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. இவர் அறிஞர் சித்தி லெப்­பையின் ஆசி­ரி­ய­ராவார். அக்­கு­றணை பெரிய பள்­ளி­வா­சலைக் கட்ட உதவி செய்­த­வரும் இவரே.
கடந்த 26ஆம் திகதி இவர­து ஸியாரம் சிதைக்­கப்­பட்­டுள்­ளமை சிலரால் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்தே நாம் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறை­யிட்டோம். என்றார்.

அக்­கு­றணை பிர­தேச சபைத் தலைவர்
அக்­கு­றணை பெரிய பள்­ளி­வாசல் வளாகம், மைய­வாடி என்­பன காலத்­துக்குக் காலம் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­வது வழக்­க­மாகும். பள்­ளி­வா­சலின் நாலா பக்­கமும் மைய­வாடி அமைந்­துள்­ளது. ‘கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியா­ரத்தை சிதைக்­க­வேண்டும் என்ற தேவை எவ­ருக்கும் இல்லை. வேண்­டு­மென்றே ஸியாரம் ஒரு­போதும் சிதைக்­கப்­பட மாட்­டாது என அக்­கு­றணை பிர­தேச சபைத் தலைவர் இஸ்­திஹார் இமா­துதீன் தெரி­வித்தார்.

எம்.எச்.அப்துல் ஹலீம் எம்.பி.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் முன்ளாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம் கருத்து வெளி­யி­டு­கையில், இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் மறு­ம­லர்ச்­சிக்கும் கல்வி வளர்ச்­சிக்கும் தொண்­டாற்­றிய கசா­வத்த ஆலிம் அப்­பாவின் ஸியாரம் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். ஸியாரம் அமைந்­துள்ள பகுதி துப்­பு­ரவு செய்­யப்­பட்­டுள்­ளதை ஆதா­ர­மாகக் கொண்டே இக்­குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை, சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் மற்றும் பொலிஸார் அடங்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை ஏற்­பாடு செய்­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்றார்.

பள்­ளி­வா­சலின் முன்னாள் தலைவர் ரமீம்
ஸியாரம் அடங்­கி­யுள்ள அக்­கு­றணை பெரிய பள்­ளி­வாசல் முன்னாள் தலைவர் பீ.எ.சி.எம்.ரமீம் விடி­வெள்­ளிக்கு இவ்­வி­வ­காரம் தொடர்பில் பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்டார்.

‘அக்­கு­றணை பெரிய பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைத்­த­லை­வ­ராக 2001- 2010 வரை நான் கட­மை­யாற்­றி­யுள்ளேன். எனது பத­விக்­கா­லத்தில் பள்­ளி­வாசல் முழு­மை­யாக புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்­டது. ஸியா­ரத்தை உடைத்து அகற்ற வேண்­டு­மென்றால் அப்­போதே செய்­தி­ருக்­கலாம். ஆனால் ஸியாரம் பாது­காக்­கப்­பட்­டது. கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் அமைந்­துள்ள பகு­தியில் அன்­றி­லி­ருந்து இன்­று­வரை ஜனாஸா கூட அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஏனைய பகு­தி­க­ளிலே ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன.

எனது பத­விக்­கா­லத்தில் இ­ருந்­தது போன்றே தொடர்ந்தும் ஸியாரம் இருக்­கி­றது.
1996 ஆம் ஆண்­டிலே ஒரு பாரிய குழு­வி­னரால் ஸியாரம் அமைந்­துள்ள இடத்தில் கட்­டப்­பட்­டி­ருந்த கட்­டிடம் உடைக்­கப்­பட்­டது. அதன்­பின்பு எந்த சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­வில்லை.

ஸியாரம் உடைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸில் முறை­ப்பாடு செய்­யப்­பட்­டது. பொலிஸார் வருகை தந்து பார்­வை­யிட்­டனர். அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­ற­வில்லை என அவர்கள் உறுதி செய்­தனர்.

சூபி தரீக்­காக்­களின் நிர்­வாக உறுப்­பினர் ரியாஸ் சாலி
சூபி தரீக்­காக்­களின் நிர்­வாக உறுப்­பினர் ரியாஸ் சாலி இவ்­வி­வ­காரம் தொடர்பில் பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்டார்.

ஸியா­ரங்கள் எமது வர­லாற்று தொல்­பொ­ருட்­க­ளாகும். இதனுள் ஒரு வர­லாறு உள்­ளது. நாட்டின் பல இடங்­களில் ஸியா­ரங்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன.இன்றேல் மூடப்­ப­டு­கின்­றன. வஹா­பிஸ கொள்­கை­களைக் கொண்ட குழுக்கள் இவற்றை நிறுத்­திக் கொள்ள வேண்டும். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ‘ஸியா­ரங்கள்’ உடைக்­கப்­ப­டக்­கூ­டாது என அறிக்கை விட­வேண்டும்.

கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியாரம் உடைக்­கப்­பட்­டுள்­ளது. அதனை பள்­ளி­வாசல் நிர்­வாகம் முழு­மை­யாக மீள நிர்­மா­ணித்துத் தர­வேண்டும். ஸியா­ரங்­க­ளுக்­காக அகில இலங்கை சூபி தரீக்­காக்­களின் உயர்­பீடம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.ஸியா­ரங்­களைப் பாது­காக்கும் என்றார்.

ஸியா­ரத்தை புனர் நிர்­மா­ணிக்­கு­மாறு கோரிக்கை
கசா­வத்தை ஆலிம் அப்­பாவின் ஸியா­ரத்தை புனர் நிர்­மாணம் செய்து தரு­மாறு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி வக்பு சபை­யிடம் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

கசா­வத்தை ஆலிம் அப்­பாவை நேசிக்கும் அக்­கு­ற­ணையைச் சேர்ந்த குழு­வினர் இந்தக் கோரிக்­கையை வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரிஹலிம்தீனிடம் முன்­வைத்­தி­ருந்­தனர். ஆனால் வக்பு சபை­யினால் இது தொடர்பில் எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கசாவத்தை ஆலிம் அப்பா ஸியாரம்

வக்பு சபை­யி­ன் தலை­வ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 1996 ஆம் ஆண்டு ஆலிமின் ஸியாரம் ஒரு குழு­வி­னரால் சிதைக்­கப்­பட்­டுள்­ளது. வஹா­பிஸ கொள்­கை­வா­தி­களே இந்தச் செயலை புரிந்­துள்­ளனர். நூற்­றாண்டு கால­மாக இந்த ஸியாரம் நாட்டின் பல்­வேறு பகு­தி­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களால் தரி­சிக்­கப்­ப­டு­கி­றது. இது வர­லாற்­றுப்­புகழ் பெற்ற ஸியா­ர­மாகும். எனவே இந்த ஸியா­ரத்தை புனர்­நிர்­மாணம் செய்­யு­மாறு வேண்­டிக்­கொள்­கிறேன் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1996 ஆம் ஆண்டு ஸியாரம் உடைக்­கப்­பட்டு பல­த­சாப்­தங்கள் கடந்தும் புன­ர­மைக்­கப்­ப­டா­தி­ருந்­தமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவ்­வா­றான ஸியா­ரங்கள் வர­லாற்­றினைப் போதிப்­ப­ன­வாகும். எதிர்­கால சந்­த­தி­யினர் வர­லாற்­றினை நினைவு கூர்­வ­தற்­காக பாது­காக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அத்­தோடு அக்­கு­றணை பெரி­ய­பள்­ளி­வாசல் இந்த ஸி­யாரம் தொடர்பில் ஏனோ­தானோ என்­றி­ருப்­பது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். ஸியா­ரத்தை காடு ஆட்­கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

ஒற்­றுமைப் பட­வேண்டும்
முஸ்­லிம்கள் கொள்­கை­ரீ­தியில் பிள­வு­பட்­டி­ருப்­பது மிகவும் ஆபத்­தா­ன­தாகும். முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்ள இக்­கா­ல­கட்­டத்தில் ஒன்­று­ப­டு­வது அவ­சி­ய­மாகும். ஸியாரங்கள் தொடர்பான விடயங்களிலும் அவற்றைப் பாதுகாக்க முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். ஸியாரங்களே எமது வரலாற்றுசான்றுகளாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.