பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள ஆப்கான் மக்கள்

0 3,416

எம்.ஐ.அப்துல் நஸார்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் பொறுப்­பேற்­றதைத் தொடர்ந்து அங்கு ஏலவே நில­விய மனி­தா­பி­மான நெருக்­கடி நிலை மேலும் மோச­ம­டைந்­துள்­ளது. முக்­கி­ய­மான வெளி­நாட்டு உத­விகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் மில்­லியன் கணக்­கான ஆப்­கா­னி­யர்கள் பட்­டி­னியை எதிர்­கொண்­டுள்­ளனர்.

ஏற்­க­னவே பல தசாப்­தங்­க­ளாக போரினால் பாதிக்­கப்­பட்ட ஒரு நாட்டில் தலி­பான்கள் கைப்­பற்­றிய சில மாதங்­க­ளுக்குப் பின்னர் ஆப்­கா­னிஸ்தான் மக்கள் பெரும் நெருக்­க­டியில் சிக்கிக் கொண்­டி­ருப்­ப­தையும், பட்­டி­னியை எதிர்­கொள்­வ­தையும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன. இது தவிர, சுகா­தாரப் பாது­காப்பு கட்­ட­மைப்பு வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வ­தோடு ஊதி­யங்­களும் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றன.

முப்­பத்­தெட்டு மில்­லியன் மக்­களைக் கொண்ட ஆப்­கா­னிஸ்தான், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலி­பான்கள் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன், வெளி­நாட்டு உத­வியை பெரிதும் நம்­பி­யி­ருந்­தது. தற்­போது தலி­பான்கள் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளதால் சர்­வ­தேசம் பில்­லியன் கணக்­கான டொலர்கள் உத­வியை நிறுத்­தி­யுள்­ள­தோடு நிவா­ரணப் பணி­க­ளுக்குத் தடையை ஏற்­ப­டுத்தும் வித­மாக பொரு­ளா­தாரத் தடை­க­ளையும் விதித்­துள்­ளது.
எனினும் ஆப்­கா­னுக்­கான உத­வி­களை அதி­க­ரிக்­கு­மாறு அமெ­ரிக்­கா­வையும் ஏனைய நாடு­க­ளையும் ஐ.நா அதி­கா­ரிகள் வலி­யு­றுத்­து­கின்­றனர். ஆனால் தற்­போது ஆப்­கா­னிஸ்தான் தலி­பான்­களின் கட்­டுப்­பாட்டில் இருப்­பதால் உத­வி­களை வழங்க முடி­யாத நிலையை அந்த நாடுகள் எதிர்­கொள்­கின்­றன.

‘பரந்­து­பட்ட ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான எந்­த­வொரு உத­வியும் தலி­பான்­களின் அதி­கா­ரத்தைப் பலப்­ப­டுத்தும் அதே­வேளை அவர்­களின் நடத்­தையின் மீது செல்­வாக்கு செலுத்தும் கார­ணி­களை பல­வீ­னப்­ப­டுத்தும்’ என ஆப்­கா­னிஸ்­தா­னுக்­கான முன்னாள் அமெ­ரிக்க தூதர் பி. மைக்கேல் மெக்­கின்லி வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.

தலி­பான்கள் ஆட்­சிக்கு வந்த பின்­னர்தான் மனித உரிமை மீறல்கள் அதி­க­ரித்­துள்­ளன. அவர்­களால் டசின் கணக்­கான மக்­க­ளுக்கு பகி­ரங்க மர­ண­தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்கள் அதி­க­ரித்­துள்­ளன, பெண் பிள்­ளைகள் பாட­சா­லைக்குச் செல்­வது குறை­வ­டைந்­துள்­ளது, அத்­தோடு பெண்கள் மீதான கட்­டுப்­பா­டுகள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

பொரு­ளா­தாரத் தடை­களை மீறாத வகையில் ஒரு வரு­டத்­திற்கு மனி­தா­பி­மான உத­வி­களை வழங்க ஐ.நா பாது­காப்புச் சபை அண்­மையில் இணங்­கி­யது. ஆனால் பர­வ­லாக ஏற்­ப­ட­வுள்ள பேர­ழிவை தவிர்ப்­ப­தற்கு மேலும் அதிக உத­விகள் வழங்­கப்­பட வேண்டும் என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

உண­வின்றித் தவிப்பு
உலக உணவுத் திட்­டத்தின் கருத்தின் பிர­காரம், ஆப்­கா­னிஸ்­தானில் 2 சத­வீ­தத்­தினர் மட்­டுமே போது­மான உணவைப் பெறு­கின்­றனர். மேலும் இந்த குளிர் ­கா­லத்தில் கடு­மை­யான பட்­டினி நிலைமை ஏற்­படக் கூடும் என ஐக்­கிய நாடுகள் சபை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. மூன்று மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான குழந்­தைகள் ஊட்­டச்­சத்து குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பட்­டினி தொடர்­பான நெருக்­க­டிக்கு பல்­வேறு கார­ணிகள் அடித்­த­ள­மாகக் காணப்­ப­டு­கின்­றன. மாவு மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்­க­ளுக்­கான விலைகள் மிகவும் உயர்­வ­டைந்­துள்­ளன, கடு­மை­யான வறட்­சி­யினால் நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் பயிர்கள் அழித்­துள்­ள­துள்­ளன, மேலும் பல சவால்கள் கார­ண­மாக எல்லை தாண்­டிய உத­விகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. நிலைமை சீர­டை­ய­வில்­லை­யாயின் இவ்­வ­ருடம் ஆப்­கா­னிஸ்­தானில் பஞ்சம் ஏற்­ப­டக்­கூடும் என உணவு மற்றும் விவ­சாய அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

அதி­க­ரித்து வரும் வறுமை
கிட்­டத்­தட்ட ஒவ்­வொரு ஆப்­கா­னிய குடி­ம­கனும் 2022 ஆம் ஆண்டின் நடுப்­ப­கு­தியில் வறு­மையில் வாழும் நிலை ஏற்­ப­டலாம் என ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தித் திட்டம் தெரி­வித்­துள்­ளது. இது வெளி­நாட்டு உதவி நிறுத்­தப்­பட்­டதன் ஒரு விளை­வாகும். தலி­பான்கள் அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்றுக் கொள்­வ­தற்கு முன்னர், ஆப்­கா­னிஸ்தான் அர­சாங்­கத்தின் செல­வி­னங்­களில் நான்கில் மூன்று பங்கு சர்­வ­தே­சத்தின் மானி­யங்­களால் ஈடு­செய்­யப்­பட்­டது. அந்த நிதி இல்­லாமல் போனதால், ஆசி­ரி­யர்கள், நீதி­மன்ற ஊழி­யர்கள் என அர­சாங்கப் பணி­களில் ஈடு­படும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோ­ருக்கு பல மாதங்­க­ளாக சம்­பளம் வழங்­கப்­ப­ட­வில்லை.

உலக நிதி அமைப்பில் இருந்தும் ஆப்­கா­னிஸ்தான் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஆப்கான் மத்­திய வங்­கிக்கு சொந்­த­மான 9 பில்­லியன் டொலர் சொத்­துக்­களை அமெ­ரிக்கா முடக்­கி­யுள்­ளது, எனவே மீள்­பெ­றுகை கோரிக்­கை­களை பூர்த்தி செய்ய வங்­கி­யிடம் போது­மான திரவ நிதி இல்லை. ஆப்­கா­னிஸ்தான் பொரு­ளா­தாரம் 30 சத­வீதம் வரை சுருங்­கக்­கூடும் என சர்­வ­தேச நாணய நிதியம் மதிப்­பிட்­டுள்­ளது.

சரிந்து வரும் சுகா­தாரக் கட்­ட­மைப்பு
முந்­தைய அர­சாங்­கத்தின் கீழ், ஆப்­கா­னிஸ்­தானின் சுகா­தாரப் பாது­காப்புக் கட்­ட­மைப்பு வெளி­நாட்டு உத­வி­களில் தங்­கி­யி­ருந்­தது. அவை இல்­லா­த­தனால், வைத்­தி­ய­சா­லை­களில் மருந்து மற்றும் பொருட்­க­ளுக்கு பற்­றாக்­குறை காணப்­ப­டு­கின்­றது. ஆரம்ப பரா­ம­ரிப்பு சேவைகள் மூடப்­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளன, மேலும் மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்கு வழக்­க­மாக வழங்­கப்­படும் சம்­பளம் கிடைக்­க­வில்லை, அவர்கள் விரைவில் வேலைக்கு வரு­வதை நிறுத்­தலாம் என்ற கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

வயிற்­றுப்­போக்கு, கோவிட்-19, மலே­ரியா, அம்மை மற்றும் போலியோ ஆகி­ய­வற்றின் பர­வலை ஆப்­கா­னிஸ்தான் எதிர்­கொள்ளும் நிலை­யி­லேயே இந்த நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

2021 ஆம் ஆண்டின் இறு­தியில், உலக சுகா­தார அமைப்பு (WHO) மற்றும் ஐக்­கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகி­யவை 2022 ஆம் ஆண்டின் நடுப்­ப­கு­தியில் நாடு முழு­வதும் இரண்­டா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட சுகா­தாரப் பாது­காப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்த போது­மான நிதியைப் பெற்­றன. ஆனால் பெரும்­பா­லான வைத்­தி­ய­சா­லை­களில் கொவிட்-19 நோயா­ளிகள் இருந்­ததன் கார­ண­மாக ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வச­திகள் எற்­ப­டுத்­தப்­ப­டாமல் விடு­பட்­டுப்­போ­யின.

வீட்டை விட்டு வெளி­யே­றுதல்
2021 இல், சுமார் ஏழு இலட்சம் பேர் தங்கள் வீடு­களை விட்டு ஆப்­கா­னிஸ்­தானின் ஏனைய பகு­தி­க­ளுக்கு செல்ல வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. அவர்கள் ஏற்­க­னவே நாட்டிற்குள் இடம்பெயர்ந்த மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இணைந்தனர். மோதல்கள், வறுமை மற்றும் வறட்சி ஆகியவற்றிலிருந்து தப்பி, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தலைநகர் காபூலை வந்தடைந்தன, அங்கு பலர் உறவினர்களுடன் அல்லது குறைந்த விலையில் அறைகளை வாடகைக்கு எடுத்து வாழ்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததன் மூலம், பிரிட்டனும் அமெரிக்காவும் அவர்களால் முடித்துவைக்க முடியாத சண்டையைத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்து பீதியுடன் வெளியேறிய அவர்கள் மற்றொரு பேரழிவுக்கு வித்திட்டுள்ளனர். இந்த மூன்றாவது பேரழிவைத் தடுக்க வேண்டும் என்றால், அவர்கள் பட்டினியால் வாடும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தாராளமாக உதவ விரைந்து செயற்பட வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.