வீதி விபத்துக்களில் 10 மாதங்களில் 2590 பேர் பலி

போக்குவரத்து அமைச்சு

0 657

நடப்பாண்டில் இதுவரையில் 2481 வீதி விபத்துக்கள் பதிவாகியள்ளதுடன், மேற்படி விபத்துக்களில் சிக்கி சுமார் 2590 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த 2481 விபத்துக்களும் ஜனவரி முதலாம்  திகதி தொடக்கம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறான வீதி விபத்துக்களில் சிக்கி  சுமார் 792  பேர் வரையிலான பாதசாரிகள்  உயிரிழந்துள்ளதாக வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிளுடன் தொடர்புடைய விபத்துக்களில் மாத்திரம் இவ்வருடத்தில் 1011 பேர் உயிரிழந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று வாகனம் செலுத்தும் சாரதிகளே கூடுதலாக இத்தகைய வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.