ராஜபக்ஷாக்களின் வரிக்கொள்கை

0 511

மூலம் : திஸரணி குணசேகர
தமிழில் : எம்.எச்.எம். ஹஸன்

பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச, ஆன்­மீக பாது­காப்புப் பெறும் நோக்கில் இந்­தி­யா­வி­லுள்ள திருப்­பதி வெங்­க­டேஸ்­வரா தேவஸ்­தா­னத்­துக்குச் சென்ற விடயம் ஊட­கங்­களில் வெளி­வந்­தது.

திருப்­பதி தேவஸ்­தானம் இலங்­கையின் அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சி அர­சியல் வாதி­க­ளி­டையே மிகவும் ஜன­ரஞ்­ச­க­மான ஓர் இடம். குறிப்­பாக தீர்க்­க­மான தேர்­தல்­களை எதிர்­கொள்ளும் வேளை­களில் இந்த நாட்டின் அர­சி­யல்­வா­திகள் வரி­சை­யாகத் திருப்­ப­தியை நாடு­வது மிகவும் சாதா­ர­ண­மான ஒரு விடயம்.

திருப்­பதி தேவஸ்­தானம் அமைந்­துள்ள இந்­தி­யாவின் அனந்­தபூர் மாவட்டம் மிகவும் வரட்­சி­யான ஒரு பிர­தே­ச­மாகும். அங்கு வெள்ளப் பெருக்கு என்­பது கேள்­விப்­பட்டுக் கூட இல்­லாத ஓர் விடயம். ஆயினும் கடந்த நவம்பர் மாதத்தில் மாபெரும் வெள்ளப்­பெ­ருக்கில் அந்த மாவட்­டமே மூழ்­கி­விட்­டி­ருந்­தது. திரு­மாலா மலைத் தொடரில் பெய்த கடும் மழை கார­ண­மாக திருப்­பதி நக­ரமும் தேவஸ்­தா­னமும் கூட நீரில் முழ்­க­டிக்­கப்­பட்­டது. 12-–14 மில்லி மீட்டர் மழையின் கார­ண­மாக திருப்­பதி நகரம் வெள்ளத்தில் மூழ்க சில மணி நேரங்­களே போது­மாக இருந்­த­தாக இந்­தி­யாவின் NDTV செய்தி வெளி­யிட்­டது. இந்த வெள்ளப் பெருக்கு கார­ண­மாக 44 பேர் உயி­ரி­ழந்­த­தா­கவும் ஹிந்­துஸ்தான் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டது.

திருப்­பதி தேவஸ்­தா­னத்தில் குடி­கொண்­டுள்ள கடவுள் யார் என்­பது தெரி­ய­வில்லை. அது யாராக இருந்­தாலும் இத்­த­கைய பெரும் அனர்த்தம் வரு­வது பற்றி ஒரு எதிர்வு கூற­லை­யா­வது முன்­வைக்க அந்தக் கட­வுளால் முடி­ய­வில்லை என்­பதும் திருப்­பதி தேவஸ்­தா­னத்­துக்குக் கூட கட­வுளின் பாது­காப்புக் கிடைக்­க­வில்லை என்­பதும் தெளிவு.

மிகவும் அரி­தா­கவே மழை பெய்யும் பிர­தே­சங்­களில் இவ்­வாறு மழையும் பெருவெள்ளமும் ஏற்­ப­டு­வது அண்­மைய ஆண்­டு­களில் ஒரு பூகோள நிகழ்­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. மனித நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக ஏற்­படும் வானிலை மாற்றம் (Climate change) இதற்­கான காரணம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

மனி­தர்­களின் அழிவு ரீதி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு மத்­தியில் கட­வுளும் திக்­கு­முக்­காடிப் போவ­தையே திருப்­பதி நிகழ்வு எடுத்துக் கூறு­கின்­றது. மகிந்த ராஜ­பக்ச திருப்­ப­தியில் தனக்கு மட்­டு­மன்றி இந்த நாட்­டுக்கே பாது­காப்பை தரு­மாறு கட­வு­ளிடம் கேட்­டி­ருப்பார். இலங்கை எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார, அர­சியல், சமூக அனர்த்­தத்தை சமா­ளிக்க முடி­யாது போனால் நாடு மட்­டு­மன்றி தமது குடும்­பத்தின் அர­சியல் எதிர்­கா­லமும் இரு­ள­டைந்து விடும் என்­பதை அனு­ப­வ­சா­லி­யான மகிந்த நன்கு அறிவார்.

ஆனால் ராஜ­பக்­சாக்கள் ஏற்­ப­டுத்­திய செயற்­பா­டுகள் கார­ண­மாக நாளுக்கு நாள் விருத்­தி­ய­டையும் தேசிய அனர்த்­தத்தில் இருந்து நாட்டைக் காப்­பாற்ற அந்தக் கட­வு­ளினால் கூட முடி­யாது போய்­விடும்.

Fitch Rating நிறு­வனம் இலங்­கையின் கடன் தரப்­ப­டுத்­தலை CCC இல் இருந்து CC யாக தர­மி­றக்­கி­யுள்­ளது. வங்­கு­ரோத்து நிலையை அடைய எஞ்­சி­யி­ருப்­பது இன்னும் ஒரே­யொரு தர­மி­றக்­க­மே­யாகும்.

மத்­திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், இந்தத் தர இறக்­கத்தைப் பற்­றிய தனது கருத்­தாக Fitch Rating நிறு­வ­னத்தைக் குறை கூறி­யுள்ளார். இலங்கை குறித்து எவ்­வித நேர்­க­ணி­ய­மான தன்­மையும் அந்த நிறு­வ­னத்­துக்கு தென்­ப­ட­வில்லை என்று கூறி அவர் அந்த நிறு­வ­னத்­தை குற்றம் சாட்­டி­யுள்ளார்.

மத்­திய வங்கி ஆளுனர் குறிப்­பி­டு­கின்ற அபி­வி­ருத்­தியைக் கண்­டு­கொள்­ளாமல் இருப்­பது Fitch நிறு­வனம் மட்­டு­மல்ல. பசளைச் சீர­ழிவு, விலை­வா­சி­யு­யர்வு, பொருட் தட்­டுப்­பாடு, சமையல் எரி­வாயுக் கசி­வுகள் என்று பாரிய வாழ்க்கைப் பிரச்­சி­னையை எதிர் கொள்ளும் இந்­நாட்டு மக்­களும் எவ்­வித அபி­வி­ருத்­தி­யையும் காண­வில்லை.

ராஜ­பக்­சாக்­க­ளுக்கும் அவர்­க­ளது அடி­வ­ரு­டி­க­ளுக்கும் மட்­டுமே தென்­படும் நாட்டின் அபி­வி­ருத்தி தேவதைக் கதை­களில் வரும் (Emperor’s cloak) அரசின் புதிய ஆடை வகையைச் சேர்ந்த அபி­வி­ருத்­தி­யாகத் தான் இருக்க முடியும். அரசன் ராஜ­ப­வ­னியின் போது அணி­வ­தற்கு ஒரு சிறப்­பான ஆடை தேவைப்­பட்­டது. இதனைச் செய்து தரு­வ­தற்கு ஒரு தையல்­காரர் ஏற்­றுக்­கொண்டார். உரிய காலத்தில் ஆடையைத் தயார் செய்­யாத தந்­தி­ர­கார தையற்­காரன் ஒரு உத்­தியைக் கையாண்டான். எந்த ஆடை­யையும் தயார் செய்­யா­ம­லேயே அர­சரை பவ­னியில் இறக்கி இந்த சிறப்­பான ஆடை புத்­தி­சா­லி­க­ளான கெட்­டிக்­காரர்களுக்கு மட்­டுமே தெரியும் என்று கூறினான். ராஜ பவ­னியில் செல்லும் அரசன் நிர்­வா­ண­மாகச் செல்­வது எல்­லோ­ருக்கும் தெரிந்தும் ஒரு­வரும் அதனைச் சொல்­ல­வில்லை. தாங்கள் புத்­தி­சா­லி­யான கெட்­டிக்­காரர்கள் அல்ல என்­பதை வெளிப்­ப­டுத்த அவர்கள் விரும்­ப­வில்லை. மாறாக அவர்கள் ஆடையை பல வகை­யிலும் வர்­ணிக்கத் தொடங்­கினர். அரசன் ஆடை அணி­யாத நிலையில் வீதி­வ­லத்தில் ஈடு­பட்­டி­ருந்தார்.

இதனைக் கண்ட ஒரு சிறுவன் ஒரு மாமா நிர்­வா­ண­மாகப் போகிறார் என்று தம் பெற்­றோ­ரிடம் சத்­த­மிட்டுக் கூறினான். தன் தவறை உணர்ந்த அரசன் நடந்த விட­யத்தைப் புரிந்து கொண்டார் என்­பதே கதை.

ஆனால் யார் தவறைச் சுட்டிக் காட்­டி­னாலும் ராஜ­பக்­சாக்கள் ஏற்­றுக்­கொள்­வ­தாக இல்லை. தவ­று­களைச் சுட்­டிக்­காட்­டு­ப­வர்­களை எச்­ச­ரிப்­பது, பய­மு­றுத்துவது, பத­வி­களில் இருந்து விலக்­கு­வது, பயங்­காட்­டு­வது தான் ராஜ­பக்­சாக்­களின் அணு­கு­முறை.
2021 ஐ விட 2022 மோச­மா­ன­தாக இருக்கும் என்று கூறு­வ­தற்கு கட­வுளின் விஷேட வரம் ஏதும் பெற்­றி­ருக்கத் தேவை­யில்லை என்­பது யாருக்கு தான் தெரி­யாது.

பரி­காரம் தேடு­வ­தற்கு பிரச்­சி­னையின் மூலத்தை அறிய வேண்டும்
புத்த பெரு­மானின் போத­னை­யின்­ப­டியும் துக்­கத்தைப் போக்கும் வழியை விளங்கிக் கொள்ள வேண்­டு­மாயின் துக்­கத்­துக்­கான கார­ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அறி­வியல் அணு­கு­மு­றையும் அதுவே. ரா­ஜ­பக்­சாக்­க­ளிடம் இத்­த­கைய ஒன்றை எதிர்­பார்க்க முடி­யாது. மாற்று வழி தாங்கள் தான் என்று கூறிக்­கொள்ளும் எதிர்க்­கட்­சி­க­ளி­லா­வது இது நடை­பெற வேண்டும். அப்­ப­டி­யில்­லாத போது ராஜ­பக்­சாக்­க­ளிடம் இருந்து மீண்­டாலும் நாட்­டுக்கு எதிர்­காலம் இல்­லாமற் போகும்.

Fitch Rating நிறு­வ­னத்தின் கடன் தரப்­ப­டுத்தல் தொடர்பில் இலங்­கையின் நிலை­யான இடத்­தி­லி­ருந்து தர­மி­றக்கும் பணி 2019 டிசம்பர் 18 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதா­வது கோட்­ட­பாய மகிந்த ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட ஒரு மாதத்­தி­லாகும், இதற்­கான காரணம் ராஜ­பக்ச அரசின் வரிக் கொள்­கை­யாகும். இலங்­கையைத் தர­மி­றக்­கிய Fitch Rating நிறு­வ­னத்தின் அறி­வித்­தலில் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த வரிக் குறைப்பு கார­ண­மாக அரச வரு­மானம் குறை­வ­டை­வ­தற்­கான வாய்ப்பும் அதனால் ஏற்­படும் ஏனைய பொரு­ளா­தார விளை­வு­களும் இந்த தர இறக்­கத்­துக்­கான காரணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எதிர் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகு­தியை இழக்கும் என்ற விட­யமும் எதிர்வு கூறப்­பட்­டது.

Fitch Rating நிறு­வ­னத்தின் எதிர்வு கூறல் சரி­யா­னது என்­பதைக் காட்டும் தர­வு­களை Public Finance.lk என்ற இணையத் தளம் வெளி­யிட்­டது. 2019-–2020 இற்­கி­டையில் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்த வரி செலுத்­துவோர் எண்­ணிக்கை 33.5% இனால் குறைந்­தது. அதா­வது 1/3 பங்­கினால் விழ்ச்­சி­ய­டைந்­தது. 2019 இல் 1,705,223 ஆக இருந்த வரி செலுத்­துவோர் எண்­ணிக்கை 2020 இல் 1,133,445 ஆகக் குறை­வ­டைந்­தது. இதற்­கான காரணம் ராஜ­பக்ச அரசின் வரிக்­கொள்­கையின் நான்கு பிர­தான மாற்­றங்­க­ளாகும்.

அதில் ஒன்று உழைக்கும் போதே வரி செலுத்தும் (PAYE) முறையை இரத்துச் செய்து அதற்குப் பதி­லாக தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஒரு வரு­மான வரி (APIT) முறையை 2020 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அறி­முகம் செய்­தார்கள். PAYE வரி ஒரு கட்­டாய வரி­யா­யினும் ஏப்ரல் 1 இல் அறி­முகம் செய்த தனியாள் வரு­மான வரி ஒரு கட்­டாய வரி­யல்ல. இந்த மாற்றம் கார­ண­மாக பதிவு செய்­யப்­பட்ட வரி இறுப்­பா­ளர்­களில் 42.2% வீழ்ச்சி ஏற்­பட்­டது.

இரண்­டா­வது காரணம் தனியார் வரி செலுத்தும் வரு­மான எல்லை 500,000 ரூபா­வி­லி­ருந்து மூன்று மில்­லியன் ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யாகும். இதன் மூலம் அதிக எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் வரி­வி­லக்குப் பெற்­றனர்.

மூன்­றா­வது காரணம் VAT வரிக்­கான இழிவு எல்லை வரு­டாந்த வரு­மானம் 12 மில்­லி­யனில் இருந்து 300 மில்­லி­ய­னாக உயர்த்­தப்­பட்­ட­தாகும். இதனால் 71% பேர் வரி செலுத்­து­வதில் இருந்து விடு­விக்­கப்­பட்­டனர். 2019 இல் 28914 நிறு­வ­னங்கள் VAT வரி செலுத்­தி­னாலும் 2020 இல் அது 8152 ஆகக் குறைந்­தது.

நான்­கா­வது காரணம் தகவல் தொழில்­நுட்ப மற்றும் அத்­து­றைக்கு சேவை வழங்கும் நிறு­வ­னங்கள் வரியில் இருந்து விடு­விக்­கப்­பட்­ட­மை­யாகும்.

வரி­வி­திக்கும் எல்லை உயர்த்­தப்­பட்­ட­மை­யினால் அரச வரு­மானம் வெகு­வாகக் குறைந்­தது. அதற்குச் சார்­ப­ளவில் செல­வு­களில் எவ்­விதக் குறைவும் ஏற்­ப­ட­வில்­லை­யா­தலால் அந்த இடை­வெ­ளியை ஈடு செய்ய பெரும் எண்­ணிக்­கையில் பணத்தை அச்­சிட ராஜ­பக்ச அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தது. அள­வுக்கு மீறிய பண அச்­சி­டலால் ரூபாவின் பெறு­மானம் அமெ­ரிக்க டொல­ருக்குச் சார்­ப­ளவில் குறை­வ­டையத் தொடங்­கி­யது. இதனை செயற்­கை­யாக நிறுத்தி வைப்­ப­தற்­காக எவ்­வி­தத்­திலும் யதார்த்­த­மற்ற முறையில் அமெ­ரிக்க டொலர் ஒன்­றுக்­கான இலங்கை பெறு­ம­தியை 200 ரூபா­வாக மட்­டுப்­ப­டுத்­தினர். இதன் மூலம் நாட்டில் சென்­மதி நிலுவைப் பிரச்­சினை தலை­தூக்க ஆரம்­பித்­தது.

இலங்­கைக்கு வெளி­நாட்டுச் செலா­வணி கிடைத்த பிர­தான வழி வெளி­நாட்டில் வேலை செய்யும் இலங்­கை­யர்கள் அனுப்பும் பணத்­தொ­கை­யாகும். அர­சாங்­கத்தின் யதார்த்­த­மற்ற செலா­வணி வீதக் கட்­டுப்­பாட்டின் விளை­வாக வங்கி மூல­மாக பணம் அனுப்­பு­வதைத் தவிர்த்து வேறு வழி­களைக் கையாளத் தொடங்­கி­யுள்­ளனர். கடந்த நவம்பர் மாதம் இலங்­கைக்கு உத்­தி­யோ­கபூர்வமாக வெளி­நாட்டு வேலை வாய்ப்பு மூலம் கிடைத்த வெளி­நாட்டுச் செலா­வணி கடந்த 12 வரு­டங்­களில் கிடைத்­த­வற்றில் அதி குறைந்த தொகை­யாகும். உத்­தி­யோ­கபூர்வமற்ற முறை­களில் இலங்­கைக்குப் பணம் அனுப்­பு­வதை அர­சாங்கம் தடை­செய்த போதிலும் அதன் மூலம் குறிப்­பி­டத்­தக்க நன்மை ஏதும் கிடைக்க வில்லை என்­ப­தையே நவம்பர் மாத புள்ளி விபரம் காட்­டு­கின்­றது. இந்த நிலை தொடரும் என்­பதை அனு­மா­னிப்­பது சிர­ம­மாக இல்லை.

ஏற்­று­ம­தி­யா­ளர்கள் கூட தம் ஏற்­று­மதி வரு­மா­னத்தை இலங்­கைக்கு அனுப்­பாது பல உத்­தி­களைக் கையாள்­வ­தாக பெரிய வர்த்­த­கர்கள் டிசம்பர் ஆரம்­பத்தில் எச்­ச­ரிக்கை விடுத்­தனர்.

இன்று ஒரு அனர்த்­த­மாக தலை­யெ­டுத்­துள்ள பசளைப் பிரச்­சினை கூட உள்­நாட்டு இறை­வரி மற்றும் வெளி­நாட்டு செலா­வணிப் பிரச்­சி­னையின் ஒரு பெறு­பே­றாகும்.
சேதனப் பச­ளைக்கு மாறும் செய­லொ­ழுங்கை படிப்­ப­டி­யாக மேற்­கொள்­வ­தற்குப் பதி­லாக எவ்­வித திட்­ட­மி­டலோ முன்­னா­யத்­தமோ இன்றி இர­சா­யனப் பசளை இறக்­கு­ம­தியைத் தடை செய்­த­மைக்குக் காரணம் உள்­நாட்டு வெளி­நாட்டு பணச்­செ­லவைக் குறைத்துக் கொள்ளும் நோக்­கிலா என்ற கேள்வி எழு­கின்­றது. இர­சா­யனப் பசளை இறக்­கு­ம­தியைத் தடை செய்­வதன் மூலம் அதற்­காகச் செல­வாகும் பெரும்­தொ­கை­யான வெளி­நாட்டுச் செலா­வ­ணி­யையும் உள்­நாட்டின் பச­ளைக்­காக வழங்கும் மானியத் தொகை­யையும் மிச்சம் பிடிக்­கலாம் என்று யாரா­வது ஒரு கையா­லா­கா­தவன் அர­சுக்கு ஆலோ­சனை கூறி இருக்­கலாம்.

பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­திய சீனச் சேதனப் பசளைக் கப்பல் விவ­காரம் ராஜ­பக்­சாக்­களின் முட்டாள் தனத்தின் வெளிப்­பா­டே­யாகும். அத்­தி­ய­வ­சி­ய­மா­யுள்ள பெற்றோல் மற்றும் மருந்து வகை­களை இறக்­கு­மதி செய்­ய­வேனும் டொலர் இல்­லாத நிலையில் உலகம் பூராகவும் கையேந்த வேண்­டிய நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது. சீனா­விடம் 1.5 பில்­லியன் டொலர் கடன் எதிர்­பார்த்­தாலும் பசளைக் கப்பல் விவ­கார இழு­பறி முடியும் வரை அது கிடைக்க வாய்ப்­பில்லை என்றே தோன்­று­கின்­றது. சீனக் கம்­ப­னிக்கு 6.7 மில்­லியன் டொலர் வழங்க அமைச்­ச­ரவைத் தீர்­மானம் எடுக்கக் கார­ணமும் இந்தக் கடனை அவ­ச­ரப்­ப­டுத்­து­வது தானா? என்ற கேள்­வியும் எழு­கி­றது. இப்­போது கம்­ப­னியின் நன்­ம­திப்­புக்கு பங்கம் விளை­வித்­த­தாகக் கூறி சிங்­கப்பூர் சம­ர­சப்­ப­டுத்தும் நிறு­வ­ன­மொன்­றிடம் நீதி கோரி விண்­ணப்­பித்­துள்­ளனர்.

கொவிட்19 நாட்டின் பிரச்­சி­னை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யது என்­பது உண்­மையே. ஆயினும் பிரச்­சி­னையின் தொடக்கம் ராஜ­பக்­சாக்­களின் முட்­டாள்­த­ன­மான வரிக் கொள்­கையே. அதற்கு வகை கூற வேண்­டி­ய­வர்கள் அதி­கா­ரி­க­ளல்லர் மாறாக ராஜ­பக்­சாக்­களின் மூவேந்தர் கூட்­ட­ணி­யாகும். உண்­மை­யான பொரு­ளியற் கொலை­யா­ளிகள் அவர்­களே.
அரச வரு­மானக் குறைவு ஒரு நிதி அனர்த்­த­மாக மாறு­வதைத் தடுக்க வேண்­டு­மானால் செலவைக் குறைக்க வேண்டும். அதுவும் நடை­பெ­ற­வில்லை. அதற்­கான காரணம் கொவிட் – 19 அல்ல. கொவிட் பர­வலின் பின்­னரும் கூட சுகா­தார அமைச்­சுக்கு ஒதுக்­கிய பணத்தில் குறைப்புச் செய்ய ராஜ­பக்ச அரசு நட­வ­டிக்கை எடுத்­தது. செலவைக் குறைக்க முடி­யா­மைக்கு காரணம் தமது பெயரைப் பறை­சாற்றும் கண்­காட்சிக் கட்­டு­மான செயற்­திட்­டங்­களும் அதீத பாது­காப்புச் செல­வு­மாகும்.

தமிழீழ யுத்­தத்தை வெற்­றி­கொண்ட பின்னர் சமா­தா­னத்தின் பொரு­ளா­தார நன்­மைகள் மக்­க­ளுக்குக் கிடைக்­காமற் போன­தற்­கான காரணம் இரா­ணுவச் செல­வு­களைக் குறைக்­கா­மையே. யுத்­த­மெ­துவும் இல்­லாத நிலை­யிலும் வரு­டாந்தம் பாது­காப்புச் செலவு அதி­க­ரித்தே வரு­கின்­றது.

இன்னும் அது தான் நடக்­கி­றது. பாரிய நிதிப்­பற்றாக் குறைக்கு மத்­தி­யிலும் கூட 2021-–2022 வரவு செல­வுத்­திட்­டத்தின் பாது­காப்புச் செலவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மொத்த வரவு செல­வுத்­திட்­டத்தில் பாது­காப்புச் செலவு மட்டும் 14% ஆல் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இது அரச மொத்த வரு­மா­னத்தின் 15% ஆகும்

Jane சஞ்­சிகை விப­ரிப்­ப­தற்­கி­ணங்க 2021 இற்குச் சார்­ப­ளவில் பாது­காப்­புக்­கான மீண்­டெழும் செல­வுகள் 20.5% இனாலும் மூல­தனச் செலவு 25% இனாலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நாடு வங்­கு­ரோத்தின் விளிம்பில் இருக்கும் சூழ்­நி­லையில் நாட்டில் சமா­தானம் நிலவும் காலத்தில் இந்த அள­வுக்கு பாது­காப்புச் செல­வு­களை ஏன் அதி­க­ரிக்­கின்­றனர்?
வரு­மான வழி­களை முடக்கி செல­வு­களை அதி­க­ரிக்கும் ராஜ­பக்­சாக்­களின் கொள்கை கார­ண­மாக இப்­போது இலங்கை பாக்­கு­வெட்­டியில் அகப்­பட்ட பாக்கு போல் ஆகி­யுள்­ளது. இதி­லி­ருந்து இலங்­கையை மீட்க வேண்­டு­மானால் ராஜ­பக்ச வரிக்­கொள்­கையை முற்­றிலும் மாற்­றி­ய­மைக்க வேண்டும். யுத்­த­மற்ற நிலைக்குப் பொருந்தும் வகையில் பாது­காப்புச் செல­வுகள் குறைக்­கப்­பட வேண்டும்.

ராஜ­பக்ச வரிக்­கொள்­கையை மீண்டும் மாற்­றி­ய­மைப்­ப­தற்கு முடி­யு­மான அனைத்துப் பிரி­வி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் (குறிப்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கப்பம் வழங்கும் வியா­பா­ரி­க­ளிடம்) எதிர்ப்­புகள் எழும். பாது­காப்புச் செல­வு­களைக் குறைத்தால் அதன் மூலம் தேசப்­பற்றால் ஜீவ­னோ­பா­யத்தை நடத்தும் பிக்­குகள் மற்றும் சிவில் சமூ­கத்தின் விமர்­ச­னங்­களைச் சந்­திக்க வேண்­டி­வரும். பாது­காப்புச் செல­வு­களில் இருந்து இலாபம் பெறும் வியா­பா­ரி­களின் எதிர்ப்பும் நிச்­சயம் கிளம்பும். வரிக்­கொள்­கையை மாற்­று­வது அபி­வி­ருத்­திக்கு எதி­ரா­னது என்றும் பாது­காப்புச் செல­வு­களைக் குறைப்­பது தேசத்­து­ரோகம் என்றும் வாதா­டுவர். இத்­த­கைய செல்­வாக்­கு­களில் இருந்து மீள எதிர்க்­கட்­சி­களால் முடி­யுமா?

குரங்கின் கையில் அணு ஆயுதம் வழங்கும் எமது ஜனா­தி­பதி முறை
2019 இல் ராஜ­பக்­சாக்கள் அடைந்த மாபெரும் தேர்தல் வெற்­றிக்­கான காரணம் எமது நாட்டின் ஜன­நா­ய­கத்­தி­லுள்ள வினைத்­தி­ற­னற்ற தன்­மை­யாகும். நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப ஒரு சர்­வா­தி­காரி தேவை என்ற மூட நம்­பிக்கை சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யாகும். ஹிட்­ல­ராக மாறி­யேனும் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­மாறு அஸ்­கி­ரிய பீடத்தின் துணைப்­பீ­டா­தி­பதி வெண்­டே­ருவே உபாவி தேரர் ராஜ­பக்­ச­விடம் விடுத்த கோரிக்கை இந்த ஆழ­மான மூட­நம்­பிக்­கை­களின் ஓர் அடை­யா­ள­மாகும்.

இன்று சகல அதி­கா­ரங்­களும் ராஜ­பக்­சாக்­க­ளிடம் உள்­ளது. ஆனால் அரச இயந்­திரம் இந்த அள­வுக்கு சீர­ழிந்த வேறொரு காலத்தை நாம் வர­லாற்றில் காண முடி­யாது.
இதற்­கான சிறந்த உதா­ரணம் எரி­வாயுக் கசி­வாகும். ஜனா­தி­பதி காரி­யா­லயம் ஏற்­பாடு செய்த ஊடகச் சந்­திப்பில் லிற்றோ நிறு­வனத் தலைவர் பேசும்போது, எரி­வா­யுவில் எவ்­வித கலவை மாற்­றமும் செய்­யப்­ப­ட­வில்லை என்றும் இது கலவை மாற்­றத்தில் ஏற்­பட்ட கசிவு அல்ல என்றும் மக்கள் தேவை­யில்­லாமல் பயப்­ப­டு­கின்­றனர் என்றும் கூறினார்.

எரி­வாயுக் கசிவு பற்றி ஆராய ஜனா­தி­பதி நிய­மித்த குழுவின் அறிக்­கையில் கசி­வுக்­கான முக்­கிய காரணம் கல­வையில் மேற்­கொண்ட விகி­தா­சார மாற்றம் என்று குறிப்­பி­டப்­பட்­டது. மக்கள் எதனை ஏற்­றுக்­கொள்­வது? ஜனா­தி­பதி நிய­மித்த லிற்றோ நிறு­வனத் தலை­வரின் கூற்­றையா? ஜனா­தி­பதி நிய­மித்த குழுவின் அறிக்­கை­யையா? இவற்றில் இரண்டும் உண்­மையாய் இருக்க முடி­யாது. ஒன்று பொய், அந்தப் பொய்யை சொன்­னது யார்?

லிற்றோ தலைவர் முன்னர் தேசிய இளைஞர் சேவை மன்­றத்தின் தலை­வ­ரா­கவும், பணிப்­பாளர் நாய­க­மா­கவும் கட­மை­யாற்­றி­யவர். அப்­போது அவரின் ட்விட்டர் செய்­தியில் தனக்கு ஹிட்­லரின் இன­வாத meiu kampt (எனது போராட்டம்) என்ற புத்­த­கத்தை மிகவும் பிடிக்கும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த பதி­வுக்கு சமூக வலைத்­த­ளங்­களில் எதிர்ப்­புகள் கிளம்­பிய போதும் அவர் ஹிட்­லரின் தேச­பி­மா­னத்தை பாராட்­டினார்.
ஹிட்­லரின் 12 வருட கால ஆட்சி ஜர்­ம­னியின் அழி­வுடன் தான் முடி­வ­டைந்­தது. ஹிட்லர் பத­விக்கு வரும் போது தனி நாடாக இருந்த ஜேர்­மனி இரண்டு பட்­ட­தற்குக் காரணம் ஹிட்­லரின் நட­வ­டிக்­கைகள் தான். ஹிட்லர் பத­விக்கு வரும் போது சுதந்­திர நாடாக இருந்த ஜேர்­மனி வெளி­நாட்டு இரா­ணு­வத்­தினர் கட்­டுப்­பாட்டில் வந்­ததும் ஹிட்­லரின் செயற்­பாட்டில் தான்.

சர்­வா­தி­கா­ரத்தின் இயல்பு இது தான். ஒரு தனி­யா­ளுக்கு அல்­லது குடும்­பத்­துக்கு அதி­கா­ரத்தை வழங்­கு­வதன் விளைவு இது­வா­கத்தான் இருக்கும்.

சர்­வ­தி­கா­ரத்­தினால் பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது. ஆனால் எல்லாப் பிரச்­சி­னையும் தீர்ந்து விட்­டது என்ற பொய் சமூ­க­ம­ய­மாக்­கப்­ப­டு­கி­றது. ராஜ­பக்­சாக்­களும் அவர்­க­ளது அடி­வ­ரு­டி­களும் நாட்டில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று தான் கூறு­கின்­றனர். ஏதும் பிரச்­சினை இருந்தால் அது கொவிட் -19 இனால் அல்­லது எதிர்க்­கட்­சி­யினால் அல்­லது சிறி­சேன,- விக்­ர­ம­சிங்க ஆட்­சியின் விளை­வாக வந்­தது என்றும் அவர்கள் சாதிப்பார்கள்.

அதிகாரம் குவிக்கப்படுவதன் மூலம் மடையனின் மடத்தனமும் திறமையற்றவர்களின் இயலாமையும் ஊழல்வாதிகளின் குரூரமும் வன்முறையாளர்களின் கொடுமையும் விருத்தியடைகின்றன. இன்றைய எமது ஜனாதிபதி ஆட்சி முறை இந்த நாட்டுக்கு ஓர் அனர்த்தமாக மாறியதும் எதிர்காலத்தில் மேலும் பாரிய அனர்த்தமாக மாறுவதும் அதனாலாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர்களையும் விமர்சிப்பது அரசாங்க, எதிர்க்கட்சி இருபாலார் தொடர்பிலும் வழக்கமாகவுள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அதீத அதிகாரம் வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு எதிர்காலத்தில் வருவதும் இந்த 225 இல் ஒருவாராகத் தான் இருக்கும்.

அரசியல் அதிகாரம் என்பது பொதுவாழ்வின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அதிகாரமாகும். இன்றைய ஜனாதிபதி முறை மூலம் இந்த பாரிய அதிகாரத்தின் பெரும்பகுதி தனியொருவருக்குக் கிடைக்கிறது. அது ஜனநாயகத்தை விட மன்னராட்சிக்கே நெருக்கமாகவுள்ளது.

இந்நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தோர் தங்களை அரசர் அல்லது அரசியாகவே கருதினர். அவர்களது அடிவருடிகளும் மன்னர் வகிபாகத்தை அவர்களுக்கு வழங்கி வழிபட்டனர்.

ராஜபக்சாக்கள் இந்த இராஜ வேசத்தை அதன் எல்லைக்கே எடுத்துச் சென்றுவிட்டனர். ஆயினும் ‘இராஜ பித்து’ அவர்களுடன் மட்டுப்பட்டதல்ல. ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த, அமரும் அனைவருக்கும் கூடிக் குறைந்த அளவுகளில் இது பொதுவானதாகும்.
இன்றைய நெருக்கடி நிலைக்கு ஒரே தீர்வு தன்னை ஜனாதிபதியாக்குவது ஒன்று தான் என்று கூறுபவர்களிடம் இருந்து வெளிப்படுவதும் இந்தப் பித்தலாட்டமே.

ராஜபக்சாக்களுக்கு அதிகாரத்தைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு மாற்றுவழி பற்றி யோசிப்பது மடமையாகும். இன்னொருவருக்குக் கொடுத்தாலும் அப்படித்தான். ஜனாதிபதி முறைபற்றி மீள் சிந்தனை செய்ய வேண்டியிருப்பதும் அதனால் தான்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.