நாட்டில் இனவாதம் பரப்பிய அமைச்சர்கள் கட்டாரில் முஸ்லிமாக வேடமிட்டுள்ளனர்

கடன் பெறுவதற்கான போலி நாடகம் என்கிறார் சஜித்

0 574

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அமைச்­சர்கள் இன்று கடன் கேட்டு உலகம் முழு­வதும் சுற்­றித்­தி­ரி­கி­றார்கள். கட்­டா­ருக்கு கடன் கேட்டுச் சென்ற அமைச்­சர்கள் இந்­நாட்டில் இன­வா­தத்தைப் பரப்­பி­ய­வர்களே. கட்­டாரில் கடன் பெற்றுக் கொள்­வ­தற்­காக அங்­குள்ள முஸ்­லிம்­களை விடவும் மேலான முஸ்­லிம்­க­ளாக அவர்கள் வேட­மிட்­டி­ருக்­கின்­றார்கள். கடன் பெற்றுக் கொள்­வ­தற்­கான போலி நாட­கமே இது. இவ்­வாறு அவர்கள் நாட்டின் நற்­பெ­யரைக் கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சஜித் பிரே­ம­தாசா குறிப்­பிட்­டுள்ளார்.

அண்­மையில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் நாட்டின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கை­யிலே அவர் அவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் உண்­மையை திரி­பு­ப­டுத்தி பிர­சாரம் செய்­கி­றார்கள். உண்­மையை பொய்­யாக்­கு­கி­றார்கள். பொய்யை உண்­மை­யாக்­கு­கி­றார்கள். மக்­களை ஏமாற்­று­கி­றார்கள். கடந்த காலங்­களில் இவ்­வாறே நடை­பெற்­றது. இன்றும் இவ்­வாறே நடக்­கி­றது.

பொய்யை உண்­மை­யாக்­கி­யதன் பிர­தி­ப­ல­னையே நாட்டின் 220 இலட்சம் மக்­களும் அனு­ப­விக்­கி­றார்கள். இந்த நிலை­மை­யி­லி­ருந்து மீட்சி பெறு­வ­தற்கு நாம் ஒற்­று­மைப்­ப­ட­வேண்டும். உள்­நாட்டு பிரச்­சி­னை­களில் மூழ்­கி­யி­ருக்கும் எந்த நாட்­டுக்கும் முத­லீட்­டா­ளர்கள் வர­மாட்­டர்­கள் வெளி­நாட்டு செலா­வணி கிடைக்­காது. ஆனால் மஜிக் நட­வ­டிக்­கைகள் இடம் பெறும்.

நாட்டில் நிதிக்­கை­யி­ருப்பு உள்­ள­தென்­பதை நிரூ­பிக்க மத்­திய வங்­கியின் ஆளுநர் பில்­லியன் கணக்­கான நிதி­யினை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கட­னாகப் பெற்­றுள்­ளார். அது நாட்­டுக்கு கிடைத்த வரு­மா­ன­மல்ல. அன்று நாம் எவ­ருக்கும் அடி­மைப்­பட மாட்டோம் என்­­றார்கள்.

இன்று உணவுப் பொருட்­களை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வ­தற்­காக கடன் கேட்டு இந்­தி­யா­வுக்குச் செல்­கி­றார்கள். பாகிஸ்­தா­னுக்குச் செல்­கி­றார்கள். பங்­க­ளா­தே­ஷுக்குச் சென்று பெற்­றுக்­கொண்ட கடனை செலுத்­து­வ­தற்கு கால அவ­காசம் கோரி மண்­டி­யி­டு­கி­றார்கள். கும்­பி­டு­கி­றார்கள். பங்­க­ளாதேஷ் 3 மாத கால அவ­காசம் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்­கி­றது.

கட்­டா­ருக்கும் சென்­றார்கள். கட்­டா­ருக்குச் சென்ற சில அமைச்­சர்கள், உறுப்­பி­னர்கள் இந்­நாட்டில் இன­வா­தத்தை பரப்­பி­ய­வர்கள்.

கட்­டா­ருக்குச் சென்று அங்­குள்ள முஸ்­லிம்­களை விடவும் மேலான முஸ்­லிம்­க­ளாக வேடமிட்டிருக்­கி­றார்கள். கட்­டா­ரி­லி­ருந்து கடன் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே இந்த போலி நாடகம். நாட்டின் கெள­ர­வத்தைக் கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.
உல­கெங்கும், கடன் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக செல்­கி­றார்கள். இவர்கள் தான் நாட்டுப் பற்­றா­ளர்­களா? கடன் கேட்டு பிச்­சை­யெ­டுக்­கி­றார்கள். இந்­நி­லைமை கொவிட் 19 கார­ண­மாக ஏற்­பட்­ட­தாகக் கூறு­கி­றார்கள்.

ஆனால் வியட்நாம், கம்­போ­டியா, சிங்­கப்பூர், ஹொங்கொங் நாடு­களைப் பாருங்கள். இந்­நா­டுகள் கொவிட் கால கட்­டத்தில் அவர்கள் வெளி­நாட்டு முத­லீ­டு­களை பில்­லியன் கணக்­கான டொலர்­க­ளாக அதி­க­ரித்துக் கொண்­டுள்­ளார்கள். ஆனால் எமது நாட்­டுக்கு 400 மில்­லியன் டொலர் முத­லீ­டு­களே கிட்­டி­யுள்­ளது.

எம்­ம­வர்­க­ளுக்கு முறை­யான திட்­ட­மொன்று இல்லை. அதற்­கான இலக்கு இல்லை. அர்ப்­ப­ணிப்பு இல்லை.இய­லுமை இல்லை. தலை­மைத்­துவம் இல்லை. அமைச்­ச­ரவை பிள­வு­பட்­டுள்­ளது. ஒரு அமைச்சர் கூறு­கிறார் தலை­மைத்­துவம் பதவி விலக வேண்டும் என்று. 2/ 3 ஐயும் பெற்­றுக்­கொண்டு 20 ஐயும் பெற்­றுக்­கொண்டு இன்று விலகிச் செல்ல வேண்டும் என்­கி­றார்கள். உண்­மையைக் கூறு­வ­தென்றால் விலகிச் செல்ல வேண்­டி­யது ஒரு­வ­ரல்ல முழு­அ­ர­சாங்­கமும் பத­வி­வி­லக வேண்டும்.

இப்­போது அர­சாங்­கத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவர்மீது விரல் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? தவறு என்னிடமில்லை. அடுத்தவரிடமே இருக்கிறது என்கிறார்கள். குற்றம் சுமத்துகிறார்கள்.

ஒவ்வொருவர்மீது விரல் நீட்டாது இந்த நிலைமைக்கு அரசாங்கத்தின் அனைவரும் பொறுப்பு கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் இதனை ஆரம்பித்தார்கள். இவர்கள்அனைவரும் நாட்டின் இன்றைய நிலைமைக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.