கிராண்ட்பாஸில் 17 வயது இளைஞனின் படுகொலை: 12 – 16 வயதுடைய 6 சிறுவர்கள் கைது

7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

0 358

( எம்.எப்.எம்.பஸீர்)
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாதம்­பிட்­டிய பகு­தியில் கூரான ஆயு­தத்தால் குத்தி, டிக் டொக் செய­லியை பயன்­ப­டுத்தி நடிக்கும் 17 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் 6 சிறு­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

12 முதல் 16 வய­து­களை உடைய சிறு­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்கள் நேற்று (5) கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சலா டி சில்வா முன்­னி­லையில் கிராண்ட்பாஸ் பொலி­ஸாரால் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது அந்த 6 சிறு­வர்­க­ளையும் எதிர்­வரும் 7 ஆம் திகதி வெள்­ளி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர்கள் அனை­வரும் சிறு­வர்கள் என்­பதால், அவர்­களை சிறைக் காவ­லர்­களின் பாது­காப்பில், மாகொல சிறுவர் சீர்­தி­ருத்த இல்­லத்தில் தடுத்து வைக்க நீதிவான் அறி­வு­றுத்­தினார்.

நேற்­றைய தினம், சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்­களை நீதி­மன்றில் ஆஜர் செய்த பொலிஸார், அவர்கள் 6 பேரும் 12 முதல் 16 வய­து­களை உடை­ய­வர்கள் என்­பதை நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர். அத்­துடன் அவர்­களில் 14 மற்றும் 16 வய­து­களை உடைய சிறு­வர்கள் இரு­வரே கத்திக் குத்­தினை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும், ஏனையோர் அவர்­க­ளுடன் அங்­கி­ருந்­த­வர்கள் எனவும் வாக்கு மூலங்கள் ஊடாக தெரி­ய­வந்­த­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தனர்.

சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்­களின் வாக்கு மூலங்­க­ளுக்கு அமைய, கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­தி­யா­னது கடந்த 2021 டிசம்பர் 31 ஆம் திகதி புறக்­கோட்­டையில் வைத்து கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­த­தாக பொலிஸார் கூறினர். குறித்த கத்­தியை எதற்­காக கொள்­வ­னவு செய்­தீர்கள் என சிறு­வர்­களை விசா­ரித்த போது, ஈர்க்கில் சீவு­வ­தற்­காக கத்­தியை கொள்­வ­னவு செய்­த­தாக அவர்கள் கூறி­ய­தாக பொலிஸார் கூறினர்.

கொலை இடம்­பெற்ற தினம், மர­ணித்த 17 வய­தான இளைஞன் வீதியால் செல்லும் போது, சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்­களை சந்­தித்­துள்­ள­துடன், அதன்­போது சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்கள் கத்­திக்­குத்­துக்கு உள்­ளான இளை­ஞனை ‘ டிக் டொக் ……’ என தகாத வார்த்­தைகள் கொண்டு கேலி செய்­துள்­ளனர். இதன்­போது கோப­ம­டைந்­துள்ள இளைஞன் தனது இடுப்பு பட்­டியால் சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்­களை தாக்கும் போது, ஒரு சிறுவன் உட­னி­ருந்த கத்­தியை எடுத்து இளை­ஞனின் அடி வயிற்றுப் பகு­தியில் குத்­தி­யுள்­ள­தாக வாக்கு மூலங்கள் ஊடாக தெரி­ய­வந்­த­தாக பொலிஸார் நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தனர்.

இந் நிலை­யி­லேயே சந்­தேக நபர்­க­ளான சிறு­வர்­களை எதிர்­வரும் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. அன்­றைய தினம் குறித்த சந்­தேக நபர்­களை அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
முன்­ன­தாக கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாதம்­பிட்­டிய பகு­தியில் கூரான ஆயு­தத்தால் குத்தி 17 வய­தான வெல்­லம்­பிட்டி பகு­தியைச் சேர்ந்த அப்துல் லதீப் எனும் இளைஞன் கடந்த 3 ஆம் திகதி கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இந் நிலையில் இந்த கொலை தொடர்பில், கொழும்பு வடக்கு பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அமல் எதி­ரி­மான்­னவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நளின் ஜய­சுந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமைய, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய பதில் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷங்க விஜே­ரத்­னவின் கீழ் குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஹேரத் உள்­ளிட்ட இரு பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

இந் நிலையில் கொலை செய்­யப்­பட்­டுள்ள அப்துல் லதீப் எனும் இளைஞன், 3 ஆம் திகதி, பேலி­ய­கொடை கூரியர் சேவை ஒன்றில் கட­மை­யாற்றும் தனது சகோ­த­ர­னுக்கு மதிய நேர உணவை எடுத்துச் சென்று கொடுத்­து­விட்டு நண்பன் ஒரு­வனை சந்­திக்க சென்­றுள்­ள­மையும், அந்த நண்பன் முகத்­து­வாரம் பகு­தியில் பிர­பல பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் மாண­வ­ராவர் என்­பதும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. நண்­பனின் அழைப்­புக்கு அமைய, கொலை செய்­யப்­பட்ட இளை­ஞனும் மற்­றொரு இளை­ஞனும் பாட­சாலை நிறைவு நேரத்தை அண்­மித்து அப்­பா­ட­சாலை அருகே சென்­றுள்­ளனர்.

அதன்­போது இந்த இளை­ஞர்­க­ளுடன் பாட­சா­லையை அண்­மித்த பகு­தியில் இளை­ஞர்கள் குழு­வொன்று கைக­லப்பில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கைக­லப்பு ஏற்­பட்ட பகு­தி­யி­லி­ருந்து குறித்த இளைஞன் தனது இரு நண்­பர்­க­ளுடன் (பாட­சாலை நண்பன் உட்­பட) உட­ன­டி­யாக மாதம்­பிட்டி பகு­திக்கு சென்­றுள்­ளனர். மாதம்­பிட்டி – ஹேன­முல்ல வீதி­யி­லுள்ள ரந்­திய உயன தொடர்­மாடி குடி­யி­ருப்பை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர்களின் பின்னால் வந்துள்ள 6 பேர் கொண்ட குழுவொன்று இந்த இளைஞர்களை தாக்கியுள்ளதுடன், இதன்போதான சம்பவத்தில் அப்துல் லதீபை கத்தியால் குத்தியுள்ளமையும் தெரியவரவே அடையாளம் காணப்பட்ட மாதம்பிட்டிய – ஹேனமுல்ல பகுதியைச் சேர்ந்த 6 சிறுவர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.