ரஊப் மௌலவி மூலம் புதிய பிரச்சினையை உருவாக்க சதியா?

உலமா சபை கேள்வி; சட்டத்தரணிகளுடன் விரிவாக ஆராய்வதாகவும் தெரிவிப்பு

0 636

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
காத்­தான்­குடி அப்துர் ரஊப் மௌல­வியின் மூலம் புதி­தாக பிரச்­சி­னை­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு சதித்­திட்டம் தீட்­டப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, 42 வரு­டங்கள் பிரச்­சி­னைகள் எது­வு­மின்றி அமை­தி­யாக இருந்­த­வர் திடீ­ரென விட­யத்தை பூதா­க­ர­மாக்­கு­வதில் சந்­தேகம் இருப்­ப­தா­கவும் தெரிவித்­துள்­ளது.

உலமா சபை 1979 ஆம் ஆண்டு வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் பத்வா தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மான்ன, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரிடம் முன்­வைத்­துள்ள முறைப்­பாடு தொடர்பில் கேட்­ட­போதே உலமா சபை இவ்­வாறு பதி­ல­ளித்­தது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில்,
காத்­தான்­கு­டியைச் சேர்ந்த சூபி முஸ்லிம் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துல் ரஊப் (மிஸ்­பாஹி) இஸ்­லாத்தில் குறிப்­பி­டாத கருத்­தொன்­றினை குறிப்­பிட்­ட­தற்­கா­கவே அப்­போ­தைய அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அக்­க­ருத்­துக்கு எதி­ராக புத்­த­க­மொன்­றினை வெளி­யிட்டு அவ­ரது கருத்து குறித்து தெளி­வு­ப­டுத்­தி­யது. ‘ஏகத்­துவ கொள்­கையில் ஊடுருவல்” என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்ட இந்­நூலின் உள்­ள­டக்கம் எகிப்­தி­லுள்ள அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

இந்த விவ­காரம் நடந்து 42 வரு­டங்­க­ளுக்கு பின்னர் மௌலவி அப்துல் ரஊப் தற்­போது தனக்கு உயி­ரச்­சு­றுத்தல் உள்­ள­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
மௌலவி அப்துல் ரஊப் அன்று 42 வரு­டங்­க­ளுக்கு முன்பு ‘அல்­லாஹ்தான் படைப்­பு­களின் உரு­வத்தில் வெளி­யாகி இருக்­கிறான்’ என்ற கருத்­தினை வெளி­யிட்­ட­தை­ய­டுத்து அக்­க­ருத்­துக்கு எதி­ராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நிலைப்­பாட்டை புத்­த­க­மாக வெளி­யிட்­டது. ‘எல்லாம் அவனே’ என்ற கருத்து இஸ்­லாத்தில் இல்லை. எவ­ரா­வது அப்­படிக் கூறு­வார்­க­ளே­யானால் அவர்கள் இஸ்­லாத்தை விட்டும் வெறி­யேறிச் சென்­ற­வர்­க­ளாவர் என்று அப்­புத்­த­கத்தில் விரி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
குறிப்­பிட்ட புத்­த­கத்தில் அக்­கா­லத்தில் இருந்த மூத்த சூபி உல­மாக்­களே இந்த நிலைப்­பாட்டை எழு­தி­யி­ருக்­கி­றார்கள். அவர்­களில் உஸ்தாத் அப்துல் சமது, உஸ்தாத் அஜ்வாத் என்போர் மௌலவி அப்துல் ரஊபின் ஆசி­ரி­யர்கள் (உஸ்­தாத்கள்) ஆவார்கள். இவர்கள் குறிப்­பிட்ட கருத்­துகள் அடங்­கிய புத்­த­கத்தை அங்­கீ­கா­ரத்­துக்­காக எகிப்து அல் அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தார்கள். அப்­புத்­த­கத்தின் உள்­ள­டக்­கங்­களை அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழக மார்க்க அறி­ஞர்கள், அங்­கீ­க­ரித்­தார்கள்.

இப்­புத்­த­கத்தை தென் ஆபி­ரிக்கா மற்றும் இந்­தி­யாவின் உலமா சபை­களும் அங்­கீ­க­ரித்­துள்­ளன. அன்று சூபி உல­மாக்­களால் தெரி­விக்­கப்­பட்­டுள்ள கருத்­து­களே இன்று சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மௌலவி அப்துல் ரஊப் அன்று வெளி­யிட்­டுள்ள இக்­க­ருத்­தினை இலங்கை முஸ்­லிம்கள் மாத்திரமல்ல உலக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இவ்விவகாரம் தொடர்பில் உலமா சபையின் உயர்பீடம் அவசரமாகக் கூடி ஆராய்ந்து வருகிறது. சட்டத்தரணிகளையும் சந்தித்து இது குறித்து ஆராயவுள்ளது. உலமா சபையின் நிலைப்பாடு விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.