இரும்பு கதவு விழுந்து 3 வயது சிறுமி பலி

மற்றுமொரு சிறுமியின் நிலை கவலைக்கிடம்

0 333

(கலே­வெல, குரு­நாகல் நிரு­பர்கள்)
விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த இரு சிறு­மிகள் மீது வீட்டின் இரும்பு ­வாயிற் கதவு விழுந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் மற்­று­மொரு சிறுமி படு­கா­ய­ம­டைந்து கவ­லைக்­கி­ட­மான நிலையில் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

தொடன்­கஸ்­லந்த – தெலம்­பு­கல்ல கிரா­மத்தில் வெள்ளிக் கிழமை (24) மாலை வேளையில் இவ் அனர்த்தம் இடம் பெற்­றுள்­ளது.
ஹிரிப்­பி­டிய, தித்­த­வெல்கால பிர­தே­சத்தைச் சேர்ந்த மொஹமட் இர்­ஷாத் மரியம் (03 வயது) என்ற சிறு­மியே தெலம்­பு­கல்­ல­வி­லுள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்­தி­ருந்த வேளையில் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

வீட்டின் இரும்பு நுழை­வாயில் கதவில் சிறு­மிகள் இரு­வரும் ஏறி இறங்­கியும் அதனைத் தள்ளி இழுத்தும் விளை­யாடிக் கொண்­டி­ருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்­பட்­டி­ருக்கக் கூடும் என சிறு­மி­களின் உற­வி­னர்கள் பொலிஸ் விசா­ர­ணை­களின் போது தெரி­வித்­தனர்.

நுழை­வாயில் பொருத்தப் பட்­டி­ருந்த இரும்பு கதவு பிர­தான பீலி­யி­லி­ருந்து அகன்று சிறு­மிகள் இருவர் மீதும் விழுந்­தி­ருப்­ப­தா­கவும், இதனால் தலையில் ஏற்­பட்ட பலத்த காயங்­க­ளினால் வைத்­திய சாலையில் அனு­ம­திக்கப்பட்ட வேளையில் மொஹமட் இர்­ஷாத் மரியம் (03 வயது) என்­பவர் உயி­ரி­ழந்து காணப் பட்­ட­தா­கவும் தலை மற்றும் பாதங்­களில் ஏற்­பட்ட கடும் காயங்­க­ளுடன் மிகவும் ஆபத்­தான நிலையில் காணப்பட்ட எம்.என்.ஸெயித் (04 வயது) என்ற மற்­றைய சிறுமி குரு­ணாகல் போதனா வைத்­திய சாலையில் அனு­ம­திக்கப் பட்­டி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குரு­ணாகல் மாந­கர திடீர் மரண விசா­ரணை அதி­காரி மொஹமட் பர்ஸான் மரண விசா­ர­ணை­களை மேற் கொண்ட பின்னர் ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கப் பட்­ட­துடன் தித்­த­வெல்­கால மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மதுராகொட பொலிஸார் தெரிவித்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.