சவூதியில் பாரிய இசைத் திருவிழா

0 466

சவூதி அரே­பி­யாவில் கடந்த வாரம் நான்கு நாட்­க­ளாக இடம்­பெற்ற பாரிய இசைத் திரு­வி­ழாவில் 7 இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பங்­கேற்­ற­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

2021 வரு­டத்தை வழி­ய­னுப்பும் நோக்­கிலும் 2022 ஐ வர­வேற்கும் வகை­யிலும் நடை­பெற்ற இந்த இசைத் திரு­வி­ழாவில் உலகப் புகழ்­பெற்ற இசைக் கலை­ஞர்கள் கலந்து கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

“நான்கு நாட்­க­ளாக இடம்­பெற்ற இந்த இசைத் திரு­வி­ழாவில் 732,000 பேர் கலந்து கொண்­டனர்” என சவூ­தியின் பொது பொழு­து­போக்கு அதி­கார சபையின் தலைவர் துர்கி அல் ஷெய்க் தெரி­வித்­துள்ளார்.

“இவ்­வா­றான ஒரு நிகழ்வு இதற்கு முன்னர் ரியாதில் நடை­பெ­ற­வில்லை. பாரிய சனக் கூட்டம், இசை, வி.ஐ.பி. அறைகள், வழக்­கத்­துக்கு மாற்­ற­மான ஆடைகள் என அனைத்­துமே புதிய அனு­பவம் ” என இந் நிகழ்வில் பங்­கேற்ற பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பியா இசை மற்றும் நடன நிகழ்ச்­சி­க­ளுக்கு விதித்­தி­ருந்த தடையை 2017 இல் நீக்­கி­யது. இதனைத் தொடர்ந்து 2019 முதல் வரு­டாந்தம் பாரிய இசைக் கச்­சே­ரிகள் நடாத்­தப்­ப­டு­கின்­றன. இந் நிகழ்­வு­களில் இளைஞர், யுவ­திகள் ஆண் பெண் வேறு­பா­டின்றி பங்­கேற்­கவும் பாடவும் ஆடவும் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது.

பழ­மை­வாத, இறுக்­க­மான நாடு எனும் பெயரை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான திட்­டங்­களை சவூ­தியின் இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறார். அத்­துடன் பாரம்­ப­ரிய எண்ணெய் உற்­பத்­தியில் தங்­கி­யி­ருக்கும் பொரு­ளா­தா­ரத்­தி­லி­ருந்து விடு­பட்டு, சுற்­றுலா, பொழு­து­போக்கு மற்றும் விளை­யாட்டு ஆகி­ய­வற்றை சவூதி இப்­போது வரு­மா­ன­மீட்டும் துறை­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் பின்­ன­ணி­யி­லேயே இவ்­வா­றான இசை நிகழ்ச்­சிகள் இடம்­பெ­று­கின்­றன.

இது குறித்து சவூதி பிர­ஜைகள் பலரும் தமது அதி­ருப்­தி­யையும் வெளி­யிட்­டுள்­ளனர். “இரு புனிதத் தலங்­களைக் கொண்­டுள்ள இந்த தேசத்தில் இவ்­வா­றான நிகழ்வுகள் நடப்பது எந்தளவு சாத்தியம்” என இந்த இசை நிகழ்வில் ஆண்களும் பெண்களும் இணைந்து நடனமாடும் வீடியோ காட்சியை வெளியிட்டு டுவிட்டரில் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.