மாடறுப்புத் தடை அமுல்படுத்தப்பட்டால்….?

பொருளாதார தாக்கங்கள் பற்றி எச்சரிக்கிறது புதிய ஆய்வு

0 464

றிப்தி அலி

நாட்டில் மாட­றுப்­பிற்கு தடை விதிக்கும் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டால் பால் உற்­பத்தி துறை, தோல் பத­னிடல் மற்றும் பாத­ணிகள் உற்­பத்தி உள்­ளிட்ட தோற் பொருள் கைத்­தொழில் துறை ஆகி­யன பாரி­ய­ளவில் பாதிப்­ப­டையும் என்ற தகவல் ஆய்­வொன்றின் மூலம் வெளி­யா­கி­யுள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல் குறித்த தடை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் சட்­ட­வி­ரோத மாட­றுப்பின் ஊடாக சட்­ட­வி­ரோத பொரு­ளா­தார கொடுக்கல் வாங்­கல்கள் அதி­க­ரிப்­ப­தோடு பசு வதையும் நாட்டில் அதி­க­ரிக்கும் என குறித்த ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.
“மாட­றுப்­புக்கு தடை விதித்தல்” எனும் சுலோகம் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும், அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது.

இவ்­வா­றான நிலையில், கடந்த 2020.09.28ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் சமர்ப்பிக்­கப்­பட்ட “மாட­றுப்­புக்கு தடை விதித்தல்” எனும் அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யது.
அத்­துடன் மாட்­டி­றைச்­சியை நுகர்கின்ற மக்­க­ளுக்கு தேவை­யான இறைச்­சியை இறக்­கு­மதி செய்து சலுகை விலையில் வழங்­கு­வ­தற்கும் அமைச்­ச­ரவை அனு­ம­தி­ய­ளித்­தது.
எனினும் சுமார் 15 மாதங்கள் கழிந்தும் இது­வரை குறித்த தீர்­மானம் தொடர்பிலான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் மாட­றுப்­புடன் தொடர்புடைய 272ஆம் அத்­தி­யா­ய­மான 1893ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க கசாப்புக் கடைக்­காரர் கட்­டளைச் சட்டம், 1958ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்­குகள் சட்டம், 252ஆம் அத்­தி­யா­ய­மான மாந­கர சபை கட்­டளைச் சட்டம், 255ஆம் அத்­தி­யா­ய­மான நகர சபை கட்­டளைச் சட்டம், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிர­தேச சபை சட்டம் ஆகி­ய­வற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்ள கடந்த ஒக்­டோபர் 18ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட இரண்டு அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களின் பிர­காரம், மாட­றுப்­பிற்கு தடை­வி­திக்கும் சட்ட மூலத்­தினை தயா­ரிக்கும் பணியில் தற்­போது சட்ட வரைஞர் திணைக்­களம் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த தடை­யினை அமுல்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யினை துரிதப்­ப­டுத்­து­மாறு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஓமல்பே சோபித தேரர் போன்ற பல தேரர்கள் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் குறித்த தடை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய விளை­வு­களை எதிர்­நோக்க நேரிடும் என்ற தகவல் ஆய்­வொன்றின் மூலம் வெளி­யா­கி­யுள்­ளது.

Advocata Institute இன் கொள்கை ஆராய்ச்சி ஆய்­வா­ள­ரான சத்யா கரு­ணா­ரத்­தன மற்றும் JB Securities இன் இணை ஆராய்ச்சி ஆய்­வா­ள­ரான பிர­வினா யோகேந்­திரா ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட ஆய்­வி­லேயே இந்த விட­யங்கள் தெரி­ய­வந்­துள்­ளன.
“இந்தத் தடையின் மூலம் நாட்டில் மிரு­க­வதை இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­கின்­றது என்­பது பல இலங்­கையர்கள் அடை­யாளம் காணக்­கூ­டிய ஒரு உன்­ன­த­மான கார­ண­மாகும்” என்­பதை ஆய்­வா­ளர்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

எனினும் இந்தத் தடை­யினால் ஏற்­படும் விளை­வு­க­ளினால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் வாழ்­வா­தாரம் மோச­மாக பாதிக்கும் எனவும் போதி­ய­ளவு திட்­ட­மி­டாமல் இந்தக் கொள்­கையை அமு­லாக்­கினால் எதிர்­பா­ராத பல விளை­வுகள் நாட்டில் ஏற்­படும் எனவும் இந்த ஆய்வின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தொகை­ம­திப்பு மற்றும் புள்­ளி­வி­பரத் திணக்­க­ளத்தின் தக­வல்­களின் பிர­காரம் 2020ஆம் ஆண்டு 117,033 விவ­சா­யிகள் உள்­நாட்டு மாடு வளர்ப்பில் ஈடு­பட்­டுள்­ளனர்.
இதற்கு மேல­தி­க­மாக 296,111 மாட்டுப் பண்­ணை­களும், 26,284 எருமைப் பண்­ணை­களும் 2020ஆம் ஆண்டு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கால்­நடை புள்­ளி­வி­பர சஞ்­சி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“மாடு வளர்ப்புத் தொழில் மாத்­தி­ர­மல்­லாமல் அது மாட்­டி­றைச்சி தொழி­லையும் நம்­பியே உள்­ளது” என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். எவ்­வா­றா­யினும், பால் கறக்க முடி­யாத மாடு­களை பண்­ணை­யா­ளர்கள் விற்­பனை செய்­கின்­றனர். இதில் 50 சத­வீ­த­மா­னவை மாட்­டி­றைச்­சிக்­காக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும்.

இந்த மாடு­களின் ஏனைய பகு­திகள் தோல் பத­னிடல் போன்ற ஏனைய கைத்­தொ­ழில்­க­ளுக்­கான மூலப் பொருட்­க­ளாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் மாட­றுப்­புக்கு தடை விதிக்­கப்­ப­டு­மானால் இந்த அனைத்து துறை­களும் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­படும் என ஆய்வின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பாலுற்­பத்தி மற்றும் உள்ளூர் விவ­சாய துறை ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வதே மாட­றுப்­பிற்கு தடை விதிப்­ப­தற்­கான அர­சாங்­கத்தின் பிர­தான நோக்கம் என ஊட­கங்­களில் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், பசுக்­க­ளினால் 414 மில்­லியன் லீற்றர் பாலும், எரு­மை­க­ளினால் 78 மில்­லியன் லீற்றர் பாலும் வரு­டாந்தம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தாக மத்­திய வங்­கியின் 2020ஆம் ஆண்டு தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், குறித்த வரு­டத்தில் மாத்­திரம் 102.3 மில்­லியன் கிலோ­விற்கு மேற்­பட்ட பால்மா மற்றும் பால் உற்­பத்திப் பொருட்­களை வெளி­நா­டு­களில் இருந்து இலங்கை இறக்­கு­மதி செய்­துள்­ளது. அத்­துடன், ஆகக் குறைந்­தது ஒரு மில்­லியன் கிலோ கிராம் பால் உற்­பத்திப் பொருட்கள் மாத்­தி­ரமே வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளன.

பாலுற்­பத்தி துறை­யினை முன்­கொண்டு செல்லும் நோக்கில் பால் கறக்க முடி­யாத மாடு­களை பால் உற்­பத்­தி­யா­ளர்கள் அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­மையும் முக்­கிய விட­ய­மாகும்.

இதே­வேளை 2020ஆம் ஆண்டில் மாத்­திரம் 162,000 பசுக்கள் சட்ட ரீதி­யாக அறுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய சுமார் 444 மாடுகள் தின­சரி அறுக்­கப்­ப­டு­கின்­றன.
மாட­றுப்புத் தடை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் 2020 இல் காணப்­பட்ட 1,628,771 பசுக்­களின் தொகை அடுத்த 10 வரு­டங்­க­ளுக்குள் மூன்று மடங்­காக அதி­க­ரிக்கும் எனவும் இதில் 75 சத­வீ­த­மா­னவை பால் கறக்க முடி­யாத மாடுகள் எனவும் இந்த துறை­யுடன் தொடர்புடைய முன்­னணி நபர்களுடன் ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்ட நேர்காணலின் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

இதனால் ஏற்­படும் பரா­ம­ரிப்பு செல­வுகள் தாங்க முடி­யா­த­தாக இருப்­ப­துடன் பால் விலை அதி­க­ரிப்பின் ஊடாக குறித்த செல­வுகள் நுகர்­வோ­ருக்குக் கடத்­தப்­படும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, உத்­தி­யோ­க­பூர்வ தர­வு­களின் பிர­காரம் 2019 இல் இறைச்சி உற்­பத்­திகள் 29.87 மெட்ரிக் தொன்­க­ளாகும். கால்­நடைத் தொழிலில் சிறு விவ­சா­யி­களே ஆதிக்கம் செலுத்­து­கின்­றனர். இதற்­க­மைய, நாட்டில் உள்ள தனியார் பால் பண்­ணை­களில் 95 சத­வீ­த­மா­னவை சிறிய அள­வி­லான உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­னா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் 2019ஆம் ஆண்டு மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

“எமது நாட்டில் கால்­நடை வளர்ப்பு குறு­கிய இலா­பத்­தி­லேயே இயங்­கு­கின்­றன. இதனால் மாட்­டி­றைச்­சிக்கு விற்­பனை செய்­வதன் மூலம் விவ­சா­யிகள் அதிக இலாபம் அடை­கின்­றனர்” என்­பது ஆய்­வா­ளர்­களின் அவ­தா­னிப்­பாகும்.

இதன் கார­ண­மாக, கூடுதல் வரு­மா­னத்­திற்­காக தனித்­த­னி­யாக கால்­ந­டை­களை வளர்க்கும் சிறு விவ­சா­யிகள் இந்தத் தடையால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­ப­டு­வார்கள். அத்­துடன் பால் கறக்க முடி­யாத கால்­ந­டை­க­ளினால் ஏற்­படும் கூடுதல் பரா­ம­ரிப்புச் செல­வு­களை தாங்க முடி­யாத விவ­சா­யிகள், தங்­களின் சிறிய அள­வி­லான வணிக நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்த வேண்­டி­யி­ருக்கும் எனவும் இந்த ஆய்வின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பால் உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்­கத்­துடன் மாட­றுப்­பினை தடை­செய்­வது என்­பது முரண்­பா­டான விட­ய­மாகும். ஏனெனில் மேலுள்ள விளக்­கத்தின் படி மாட்­டி­றைச்சித் தொழில் இல்­லாமல் பால் தொழிலை தக்க வைத்துக் கொள்ள முடி­யாது என்­பது முக்­கிய விட­ய­மாகும்.

ஒரு கிலோ கிராம் நேரடி நிறைக்கு 300.00 ரூபா என்ற அடிப்­ப­டையில் மாட்­டி­றைச்சி தொழி­லுக்கு மாடுகள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதி­லி­ருந்தே தோல் பத­னி­டப்­ப­டு­வ­தற்­கான மூலப்­பொ­ருட்­களைப் பெறு­கின்­றது.

ஒரு மாட்டில் இருந்து சுமார் 15–-16 சதுர அடி தோல் பத­னி­டப்­ப­டு­கின்­றது. மாட்டில் இருந்து கிடைக்கும் தோல் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது.
குறித்த தோல் பத­னி­டப்­பட்டு பாத­ணிகள் மற்றும் தோல் பொருட்­களை தயா­ரிப்­ப­தற்­கான மூலப்­பொ­ரு­ளாக ஒரு கிலோ 175.00 ரூபா­விற்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. மேலும், இறக்­கு­மதி செய்­யப்­படும் பத­னி­டப்­பட்ட தோல் ஒரு கிலோ 250.00 ரூபா­விற்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது.

உள்­நாட்டில் உற்­பத்தி செய்­யப்­படும் பாத­ணி­க­ளுக்கு சுமார் 60 சத­வீ­த­மான தோல்கள் தேவைப்­ப­டு­கின்­றன என்ற விடயம் இந்த ஆய்வில் மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­டல்­களின் மூலம் தெரி­ய­வந்­தது. இவ்­வா­றான நிலையில் மாட­றுப்­பினை தடை செய்­வதன் ஊடாக பாதணி தயா­ரிப்புத் துறை நேர­டி­யாக பாதிக்­கப்­ப­டு­வ­துடன் மலி­வான விலையில் பாத­ணி­களை கொள்­வ­னவு செய்­வதும் சிர­ம­மாகக் காணப்­படும்.
மேலும், 60 சத­வீ­தத்­திற்கு மேற்­பட்ட தோல் மற்றும் பாதணி உற்­பத்­தியில் ஈடு­ப­டு­பவர்கள் சிறிய மற்றும் நடுத்­தர வியா­பா­ரி­க­ளாவர். அர­சாங்­கத்தின் மாட­றுப்புக் கொள்கை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் குறித்த வியா­பா­ரி­களின் வாழ்­வா­தாரம் பாரி­ய­ளவில் பாதிக்­கப்­படும்.

இதே­வேளை அர­சாங்­கத்தின் கொள்கை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் வய­தான மாடு­களை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக புத்­த­சா­சன மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் பேரா­சியர் கபில குணவர்தன தெரி­வித்தார்.
எவ்­வா­றா­யினும், வய­தான கால்­ந­டை­களை ஏற்­று­மதி செய்­வது என்­பது சவா­லான விட­ய­மாகும். தொற்­று­நோய்­க­ளுக்கு உள்­ளான மாடு­களை வாங்­கு­வ­தற்கு சர்­வ­தேச சந்­தைகள் தயக்கம் காட்­டு­கின்­றமை மற்றும் அதிக போக்­கு­வ­ரத்து செலவு போன்­றன இதற்­கான பிர­தான கார­ணங்­க­ளாகும் என இந்த ஆய்வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பால் கறக்க முடி­யாத மற்றும் வய­தான பசுக்­களை பரா­ம­ரிப்­ப­தற்­காக புதிய கால்­நடை காப்பு பண்­ணை­களை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சாங்கம் முத­லீடு செய்ய வேண்­டி­யுள்­ளது.

இது போன்ற காப்புப் பண்­ணைகள் தேசிய கால்­நடை அபி­வி­ருத்தி சபை­யினால் தற்­போது குரு­நாகல் மற்றும் அநு­ரா­த­புரம் ஆகிய பிர­தே­சங்­களில் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த இரண்­டிலும் ஒரே நேரத்தில் 1,000 மாடு­களை மாத்­தி­ரமே பரா­ம­ரிக்க முடியும்.

வய­தான கால்­ந­டை­களின் பரா­ம­ரிப்­பிற்­காக மேற்­கொள்­ளப்­படும் முத­லீட்­டிற்கு எந்த வரு­மா­னமும் அர­சாங்­கத்­திற்கு கிடைக்கப் போவ­தில்லை. தற்­போது எமது நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார பிரச்­சி­னையில் இது பாரிய தாக்கம் செலுத்தும் என ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இந்தக் கொள்கை நாட்டில் உள்ள குறைந்த அள­வி­லான மேய்ச்சல் நிலங்­க­ளுடன் மோது­வ­தனால் பயிர்­க­ளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை அமுல்படுத்தினால் உள்ளூர் மாட்டிறைச்சி தொழில் முற்றிலுமாக நிறுத்தப்படுவதனால் கோழி மற்றும் மீன் போன்ற புரதப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியினையும் இறக்குமதியினையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்த புரதப் பொருட்களின் கேள்வி அதிகரிப்பதனால் இதன் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும்.

மேலும், மாட்­டி­றைச்­சிக்­கான இறக்­கு­ம­தியை அனு­ம­தித்து அதனை உண்­ப­தற்கு தடை எது­வு­மின்றி, பசு வதையை தடை செய்­வதன் ஊடாக சுமை வேறு இடத்­திற்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

“இந்தக் கொள்கை அமு­லாக்கம் ஒரு பாசாங்கு நட­வ­டிக்­கை­யாகும். ஏனெனில் இலங்கை மக்­களின் நுகர்­வுக்­காக இன்­னொரு நாட்டில் மாடுகள் அறுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது” என ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

“மாட­றுப்புத் தடை கோட்­பாட்­ட­ளவில் சிறந்­த­தாகத் தோன்­றி­னாலும், அது பால் பண்ணை, மாட்­டி­றைச்சி, பாதணி தயா­ரிப்பு மற்றும் பிற தொடர்­பு­டைய தொழில்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் என்­ப­துடன் வணிக நட­வ­டிக்­கை­க­ளுக்கும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­து­கி­றது” என ஆய்­வா­ளர்­க­ளான சத்யா கருணாரத்தன மற்றும் பிரவினா யோகேந்திரா ஆகியோர் எச்சரிக்கின்றனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.